தலைப்பு

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

இறந்தவரை உயிர்ப்பிக்கும் இறைவன் சத்ய சாயி!


 மனித கர்மாவை மாற்றி அமைக்கும் இறைவன் சத்யசாயிக்கு இறந்தவரை உயிர்ப்பிப்பதொன்றும் பெரிய செயலில்லை.. அதை அனுபவித்த பக்தர் பலர்... அதில் புட்டபர்த்தியில் வசித்துவரும் திரு. வெங்கடேஸ்வரன் என்ற பக்தரின் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை தான் இன்று பார்க்கப் போகிறோம். 

மாண்டவர் மீண்டிட விந்தை புரிந்திடும் மன்னவன் பேர் சொல்லி கும்மியடி.
(தினம்) வேண்டுவோர் வாட்டங்கள் தீர்த்திடும் தெய்வம் பாபாவின் பேர் சொல்லி கும்மியடி.  பாபா கும்மிப் பாடல்

காலனைக் காலால் உதைத்து பாலன் மார்கண்டேயனை காப்பாற்றிய 
சிவ பெருமான்..
சாம்பலில் இருந்து பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்த , முருகனின் அம்சமான ஞான சம்பந்தர்..
இவர்களின் அற்புத சரித்திரம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இக்கலியுகத்தில் நம் கண்முன்பே சர்வ தேவதா அதீத ஸ்வரூபமான பாபா அவர்கள் இது போன்று மரித்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்த 
அற்புதங்கள் பல. அவற்றில் சில..
வால்டர் கோவன், சுதா ரகுநாதன், குப்பம் ராதாகிருஷ்ணையா..பட்டியல் 
நீண்டுகொண்டே போகும். எமனின் பாசக்கயிறை விட சக்தி வாய்ந்தது சாயிராமனின் "பாச"கயிறு. இந்த பந்த பாசத்தால், பரம கருணையால் பகவான் பாபா நிகழ்த்திய மற்றுமொரு சம்ரட்சணத்தைக் 
இனி காண்போம்.

வெங்கடடேஷ்.. எழுந்திரு 
உன் சாயிராமா வந்திருக்கிறேன்:

திரு. வெங்கடேஸ்வரன் ஒரு நீண்டநாள் பாபா பக்தர். பிரசாந்தி நிலயத்தில் வசித்துக்கொண்டு அங்கு சேவை புரிந்து வருகிறார்.
அவருக்கு நேர்ந்ததென்ன? அவர் எவ்வாறு பாபாவால் காப்பாற்ற
பட்டார்? இதை அவர் வாயிலாலே கேட்போம்.


அது 1994 அக்டோபர் முதல்நாள். மதிய நேரம். பெங்ககளூர் த்ரயி பிருந்தாவனத்தில் பாபா மாணவர்கள் , மற்றவர்கள் சூழ , தம் அருளுரையை நல்கிய வண்ணம் இருந்தார். நானும் உடன் இருந்தேன். திடீரென என் இதயப் பகுதியில் ஒரு இறுக்கமும், வியர்வைப் பெருக்கும் ஏற்பட, மூச்சு விட முடியாமல் தவித்தேன். அந்நிலையில் சட்டைப் பையில் இருந்த ஸ்வாமி விபூதியை மும்முறை எடுத்து வாயில் போட்டு சாயிராமா என்று பகவானை பிரார்த்தித்து தான் தெரியும் .

அப்படியே எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் மீது சாய்ந்து விட்டேன். நடப்பது ஏதுமறியாமல் இருளில் மூழ்கிய என் முன் ஒரு பேரொளியில் ஆரஞ்சு வண்ண ஆடையுடன் ஒரு உருவம் தென்பட்டது. அதற்கடுத்து, என் உயிரற்ற உடல் தரையில் கிடப்பதையும், ஒரு பேரமைதி என்னை சூழ்வதையும் உணர்ந்தேன். அப்போதுதான் தூரத்தலிருந்து ஒரு குரல் ஒலித்தது. "எழுந்திரு உன் சாயிராமா வந்திருக்கிறேன்" அடுத்து , அசைவற்ற என் உடலில் ஒரு அசைவு ஏற்பட , நான் கண்களத் திறந்தேன். பகவான் பாபா என் அருகே நிற்பதைக் கண்டேன். 


வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நேர்ந்தது என்ன? 

மயங்கி கீழே சாய்ந்த அவரை அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் பரிசோதித்தபின் , அவர் இறந்து விட்டதாக தெரிவிக்க, அக்கணமே இந்த சேதி ஊஞ்சலில் அமர்ந்திருந்த பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாபா உடனடியாக கீழே இறங்கி, அருகிலிருந்த டம்ளரில் தண்ணீருடன்  வெங்கடேஸ்வரன் உடல் இருந்த இடத்திற்கு விரைந்தார். டம்ளரில் கைவிட்டு எடுத்த தண்ணீரை தன் விரல் நுனி வழியே, சில சொட்டுகளை வெங்கடேஸ்வரனின் வாயில் விட்டார். 
என்ன ஆச்சர்யம். அந் நீர்த்துளிகள் உயிர் காக்கும் அமுதமென மாறியதோ? அடுத்த விநாடி வெங்கடேஸ்வரன் உடல் அசைந்தது. கண்கள் திறக்க, அவர் கண்டது பகவானின் கமலத் திரு முகத்தை. 


பகவான் தம்மை இறப்பிலிருந்து மீட்டு இவ்வுலகிற்கு அழைத்து வந்ததை உணர்ந்து நெஞ்சம் உருகக் கை கூப்பினார். இறைவனே அவதாரம் எடுத்து, தான் ஒரு அவதாரம் என்பதை பிரகடனப்படுத்திய போதும் , சில சஞ்சல மதியுடையோர் அதற்கு என்ன ஆதாரம் என வினவுவர். இது போன்றோர் தம்மையும் நம்பார். இது பற்றி நன்கறிந்த பாபா, அங்குள்ளவர்களைப் பார்த்து
வினவினார். "இந்த ஆதாரம் போதுமா இதற்கு மேலும் வேண்டுமா?" 

1999ம் ஆண்டு வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மறுபடி இதயக் கோளாறு ஏற்பட்டது. இந்தமுறை பாபா அவரை சத்யசாயி அதி சிறப்பு மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை பெறுமாறு பணித்தார். பிறகு மருத்துவமனைக்கே வந்து விபூதி சிருஷ்டித்து ஆசீர்வதித்தார்.


உயிர் காக்கும் மருந்துகள் உண்டு. உயிர் காக்கும் மருத்துவர் உண்டு.
ஆனால் சென்ற உயிரை மீட்கும் வைத்தியநாதர் நம் பாபா மட்டும்தான் .ஆகவே ஆழ்வார் சொன்ன "அப்போதைக்கு இப்போதே கூறி வைத்தேன்" என்ற மஹா வாக்கியத்தை கடைபிடிப்போம். உடலில் தெம்பு உள்ளபோதே, உள்ளத்தில் கள்ளம் புகு முன்னே...
நாம ஜெபம் செய்வோம். 
சாயிராம ஜெபம் செய்வோம்.



ஆதாரம்: திரு. வெங்கடேஸ்வரன் அவர்களின் 'Souljourns' நேர்காணல்...
மொழியாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

🌻 இப்படி உயிர் பெற்று மறு ஜென்மம் எடுத்தோர் பலர்... இப்படி மாண்டு மீண்டு எழுந்தோர் பலர்... இதற்கான நேரடி சாட்சிகள் நிறைய... எத்தனை கொடுப்பினை அவர்களுக்கு.. இதனை வாசிக்கும் கொடுப்பினை நமக்கு... உண்மையான பக்தரை எந்நொடியிலும் கைவிடாத பரம்பொருள் சத்ய சாயி என்பதை உணர நம் பக்தியும் நிச்சயம் ஒரு அங்குலம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக