பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
மலர்களை ஆன்மீக தேவதைகளாக உருமாற்றிய ஞான தேவதை... பாரிஸ் நகரிலிருந்து பூத்து வந்த தெய்வீகப் பேரருவி... அந்நிய தேசம் தந்த புண்ணிய ஆன்ம ஊற்று... சமாதியில் இன்னமும் உயிர்ப்போடிருக்கும் சூட்சும தியானப் பேரலை புதுவை ஸ்ரீ அன்னையின் சத்ய சாயி அனுபவம் வாசித்து சிலிர்க்க....
ஸ்ரீ அன்னை (1878 –1973):
வெளி நாட்டிலிருந்து (பாரிஸ்) ஒளி நாட்டிற்கு (இந்தியா) வந்த முக்திப் பூ அன்னை (இயற்பெயர் மிரா அல்பாசா).
அமானுஷ்ய உருவங்களோடு பேசுதல்.. பழகுதல் போன்ற ஞானத்தைப் பெற்றிருந்தார்.
அமானுஷ்ய உருவம் என்பது பேய்... பிசாசல்ல.. அவை வேற்று உலக உருவங்கள் ..
அந்த இளம் வயதிலேயே பகவத் கீதை வாசிக்கும் பேறு கிடைத்தது. தியானத்தில் ஆர்வம் போனது.. கனவில் தாடி வைத்த ஒருவர் அடிக்கடி வரலானார்...
அவரையே குருவாக நினைந்தார்.
நேரம் வந்தது.. அரவிந்தரை புதுவையில் தரிசித்தார்.. பிரெஞ்சு அரசாங்கம் புதுவையில்...நேரடி தரிசனம்.. அவரே கனவில் வந்த குரு என உணர்ந்தார்.
அன்னை தியானத்தில் அமர்ந்தபோது அவர் முன் படை எடுத்த பாம்பு பெட்டிப் பாம்பாய் அடங்கியது.
புதுவை கடல் கொந்தளித்தது..
அன்னை அந்த ஆர்த்தெழும் அலைகள் முன் தியானத்தில் அமர்ந்து கடல் தேவதையோடு பேசி அவள் கோபத்தை தணித்து அலைகளை கலைகளாய்க் குழைய விட்டார்.
அதன் பிறகே மற்ற கடற்கரை போலன்றி புதுவை கடலின் அந்தப் பகுதியில் யாரும் அசுத்தம் செய்ய முடியாதவாறு குளித்தலும்.. கால்நனைத்தலும் தடைசெய்யப்பட்டது.
அன்னையிடம் பூக்கள் பேசும். ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு குணம். அதை உணர்ந்து இறைவனிடம் சமர்ப்பித்தால் அந்த குணம் நம்மையும் தொற்றும் என்பார்.
பூக்களை ஆன்மிகத்தின் ஆயுதமாகப் பயன்படுத்திய பிரபஞ்ச தேவதை ஸ்ரீ அன்னை..
ஒருமுறை ஹிட்லர் இந்தியா மீது படை எடுப்பதாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயம்.
கற்களை அவன் படையாகவும்.. பூக்களை இந்தியப் படையாகவும் பாவித்து தியானித்தார்... ஹிட்லரின் படை சரியத் தொடங்கியது.
அரவிந்தரும் அந்த சமயத்தில் உடல்விட்டு ஹிட்லரை முறியடிக்க அமெரிக்க ராணுவத்தின் அகத்தில் புகுந்து தைரிய உணர்வூட்டி வெளிப்பட்டார்.
வாசிப்பவர்களுக்கு ஏதோ விட்லாச்சார்யார் படம் போல் தோன்றலாம்.
அத்தனையும் சத்தியம்.
மனித உடல் பார்க்கும் உலகம் மட்டும் உலகமல்ல..
உடலுக்கும் அப்பால் உள்ளதை உடலுக்கு அப்பால் சென்று தான் உணர முடியும்.
இது நம்புவது அல்ல.. நிகழ்வது.. நிகழ்வதை சாட்சியாய் இருந்து உணர்வது...
அதை தியானித்தாலே அதன் ரகசிய முடிச்சுக்கள் அவிழ ஆரம்பிக்கும்.
அப்பேர்ப்பட்டவரான அன்னையிடம் ஒரு முறை நம் சுவாமியின் சிருஷ்டிக்கும் பொருள் பற்றி ஒருவர் கேட்க .. அதற்கு அன்னையோ இது அவரின் பிரபஞ்ச ஆற்றலால் படைக்கப்படுகிறது என்றிருக்கிறார்...
Power of vital (astral ..orectic) இது அன்னை மொழி..
பரவெளிப் பயணம் (Astral travel ) செய்யும் அன்னையால் பரம்பொருளான சுவாமியின் பேராற்றலை உணர்ந்து மொழிந்தது ஒன்றும் அடியேனுக்கு ஆச்சர்யமில்லை..
இதை M.Alen kazlev தனது ஆங்கில எழுத்தில் தனது பக்கத்தில் பதிவு செய்கிறார். இது 1960-1970களில் உட்பட்டு நிகழ்ந்த உரையாடல் என்கிறார்.
ஒருமுறை அன்னையை வரிசையில் தரிசனம் செய்ய வரும் ஒரு அடியாருக்கு புன்னகையையும் கையில் மலரையும் சேர்த்து அளிக்கிறார்.
அப்போது அவர் கழுத்தில் அணிந்த ஸ்படிக மாலையை உற்றுப் பார்க்கிறார்..
பூரிப்பாகிறார். உணர்கிறார்.
அன்னையிடம் அந்த அடியார் மாலையை நீட்ட அதைத் தொடுகிறார்.
ஆச்சர்யத்தில் அந்த அடியார் அமோதிக்க..
இதை அவரால் மட்டுமே வழங்க முடியும் .. இது இந்த உலகத்துடையது அல்ல.. இது அவருடைய சிருஷ்டி..என்கிறார்.
சிருஷ்டிக்கு அன்னை ஆங்கிலத்தில் சொன்ன வரமான வார்த்தை Manifestation
பெற்றுக் கொண்ட பாக்கியம் கூடுதலானது அந்த அடியாருக்கு...
அரவிந்தரும் அன்னையும் மாபெரும் மகான்கள்...
அதுவும் முதன் முதலாய் சுவாமி அவதாரம் பற்றி அரவிந்தரே தனது புத்தகத்தில் தேதி குறிப்பிட்டு எழுதியது அவரே.. அதை ஆண்டு தோறும் வெற்றி தினமாக கொண்டாடியதும் அவரே..
பெற்றுக் கொண்ட பாக்கியம் கூடுதலானது அந்த அடியாருக்கு...
அரவிந்தரும் அன்னையும் மாபெரும் மகான்கள்...
அதுவும் முதன் முதலாய் சுவாமி அவதாரம் பற்றி அரவிந்தரே தனது புத்தகத்தில் தேதி குறிப்பிட்டு எழுதியது அவரே.. அதை ஆண்டு தோறும் வெற்றி தினமாக கொண்டாடியதும் அவரே..
இன்றும் Victory Day கொண்டாடப்படுகிறது.
பூக்கள் வைத்து.. ஊதுபத்தி ஏற்றி இருவர் சமாதியின் முன்பும் தியானிக்கப்படுகிறது...
அரவிந்தர் எழுதிய சாகா வரமான சாவித்ரி வாசிக்கப்படுகிறது.
அது அரவிந்த அன்னை சாதகர்களின் கீதை...
ஒவ்வொரு மகான்களும் ஒவ்வொரு விதமாய் தங்கள் மொழியில் ஒரே பொருள் தரும் படி இறைவன் சத்ய சாயியை உணர்ந்து மொழிந்திருக்கிறார்கள்.
நமது குடும்ப ரகசியமே அக்கம் பக்கத்தில் தெரியக் கூடாது என மறைக்கும் நாம் தான் .. சுவாமி இறைவனா .. யாரெல்லாம் அந்த ரகசியம் சொல்லியிருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறோம்.
ஒரு அளவிற்கே மகான்களுக்கும் அதைப் பேச அனுமதி அளித்திருக்கிறார் சுவாமி.
இதை சுவாமியை ஆழமாய் அனுபவிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். சுவாமி சிலருக்கென தனிப்பட்டு நடத்தும் ஒரு சில லீலா விநோதங்களை ஒரு எல்லைக்கு மேல் உடைத்துச் சொல்ல அவர்களுக்கும் அனுமதி தருவதில்லை...
ராமானுஜர் கோபுரத்தில் ஏறி நின்று தன் குரு வாக்கை மீறி அனைவருக்கும் ஓம் நமோ நாராயணா என மந்திரோபதேசம் பொது வெளியில் அளித்தார்.. ஆனால் எத்தனை பேர் மோட்சம் அடைந்தார்கள்?.
எது எது எப்படி எப்படி நடக்க வேண்டுமோ அதை அதை அப்படி அப்படி நடத்துகிறார் சுவாமி. மனிதர்கள் முழுதாய் ஒத்துழைக்கிறார்களோ இல்லையோ சுவாமிக்கு மகான்கள் முழுதாய் ஒத்துழைக்கிறார்கள்.
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக