தலைப்பு

புதன், 21 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி ராமர் சிருஷ்டித்த ஸ்ரீ ராம - சீதா திருநகைகள்!


சம்பவாமி யுகே யுகே எனும் இறைவன் சத்ய சாயியின் திருவாக்கிற்கு இணங்க.. சுவாமி ஸ்ரீ ராமராய் அவதரிக்கையில் அணிந்து கொண்ட திருநகைகள் மற்றும் அன்னை சீதா தேவியின் திருமாங்கல்யம்...காண கண் கோடி வேண்டும்... இதனை தரிசிக்க தரிசிக்க  தெய்வீகப் பரவசம் தீண்டும்...

இறைவன் சத்ய சாயி ஒவ்வொரு ஆண்டும் தான் தேர்ந்தெடுத்த மாணவர்களை அழைத்து கொடைக்கானலுக்கு தெய்வீகச் சுற்றுலா செல்வார். சுவாமியின் திருக்கோவிலான சாயி சுருதியில் தங்கியும்.. சில காலைகள் கொடைக்கானலை சுற்றியும் காண்பிப்பார். அப்படிப்பட்ட ஓர் அற்புதப் பொழுதில்...

அப்போது கூடி இருந்த மாணவ திருக்கூட்டத்தின் முன்பு பேசிக் கொண்டிருந்த சுவாமி இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பு தன் ராம அவதாரத்தின் போது தான் அணிந்து கொண்ட திருநகைகளை சிருஷ்டி செய்து அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் காட்டி காண்பவர்களின் மனதை வேறொரு உலகத்தில் ஆழ்த்தி அவர்களைப் பரவசப்படுத்துகிறார்.


💍வைரக்கல் கொண்ட கணையாழியை சிருஷ்டித்தார்.. சுவாமிக்கு தசரதர் அணிவித்த திருமண மோதிரம்...

💍 நீலக்கல் -- ஜனகர் சுவாமிக்கு அணிவித்த திருமண மோதிரம்..

 அன்னை சீதா தேவி அணிந்து கொண்ட சூடாமணி.. திருமாங்கல்யம்...

📿 அனுமனுக்கு அன்னை வழங்கிய முத்துமாலை...
(பட்டாபிஷேக வைபவப் பொழுதில் அன்னை அன்பளிப்பாக அளித்த போது...இதில் சுவாமி இருக்கிறாரா என அனுமன் கடித்துப் பார்த்த அதே முத்து மாலை... ) என அனைத்தும் சிருஷ்டித்துக் காட்டினார்.

சுவாமியின் மோதிரம் ஒவ்வொன்றும் பெரிதாக இருந்தன ... 
சுவாமி நீங்கள் ராமாவதாரத்தில் ஆஜானுபாகுவாய் ஒன்பது அடிக்கும் மேலாகச் சொல்கிறார்களே எனக் கேட்டதற்கு.. ஆம் என தலை அசைத்து புன்னகை செய்து ஆமோதித்தார்...

ஒவ்வொன்றாய் சிருஷ்டி செய்கையில் ராமாயண கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களை சுவாமி பேசுகிறார்.

பெண்கள் சீதையைப் போல் இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்...

ராவணனின் கழுத்து மாலையான 365 லிங்கங்கள் அடங்கிய தங்க மாலையையும் சிருஷ்டி செய்தார்.. அனைவருக்கும் காட்டிய பிறகு மறையச் செய்கிறார் ... ஆர்வம் தாளாத மாணவர்கள் அந்த தங்க மாலையை அருகே தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் சுவாமியிடம் அடங்காத கோரிக்கையை விடுக்க.. கருணா மூர்த்தியான சுவாமி மீண்டும் அதை சிருஷ்டித்து தரிசிக்க வைக்கிறார். அதைப் பார்த்துப் பரவசப் படுகிறார்கள் சுவாமி மாணவர்கள்...ராவணனின் அந்த பிரம்மாண்ட தங்க மாலையின் மத்தியில்  நீலம்.. மஞ்சள்.. பச்சை நிறக் கற்கள் பதிந்திருந்தன..
அவற்றை சுமக்கவே மிகவும் கனமாக இருந்தன... 

இப்போது இவை எல்லாம் எங்கே எனக் கேட்டதற்கு சுவாமியோ இவை எல்லாம் "சாயி ஸ்டோர்"ரில் இருக்கிறது என்று புன்னகைக்கிறார்.. ஆம் அனைவருக்கும் காட்டிய பிறகு மீண்டும் சாயி ஸ்டோருக்கே அனுப்பி விடுகிறார்.. அதாவது மறையச் செய்து விடுகிறார்..

இந்தப் பிரபஞ்சமே அந்த ஸ்டோரில் அல்லவா இருக்கிறது!

படைத்தல்.. காத்தல்.. அழித்தல்.. மறைத்தல்.. அருளல் ஆகிய ஐந்தொழிலையையும் செய்வது இறைவன் சத்ய சாயியே.. அதில் மறைத்தலும் ஓர் இறைப் பணியே!!

சுவாமி ஸ்ரீ ராமராய் அவதரித்த போது பட்டாபிஷேகத்திற்கு முன்பான அவரது திருத் தோற்றம்

சுவாமி ராஜா ராமராய் அலங்கரித்த போது கிரீடத்தில் பதிந்திருந்த திருநகை

ஜனகர் சுவாமிக்கு அணிவித்த திருமண மோதிரம்

அன்னை சீதா தேவி ஸ்ரீ அனுமனுக்கு பரிசளித்த 108 மணிகள் கோர்க்கப்பட்ட முத்துமாலை..

அன்னை சீதா தேவி அணிந்து கொண்டிருந்த பதக்கம்.. அன்னைக்குக் கொடுத்த இடம் போல சுவாமி இன்றைக்கும் பதக்கத்திற்கு இதயத்தில் இடம் அளித்தார்..

சுவாமி ஸ்ரீ ராமராய் அவதரித்த போது இலங்கைக்கு செல்வதற்கு முன்  அனுமனுக்கு கொடுத்தனுப்பிய கணையாழி (மோதிரம்)

அன்னை சீதா தேவியின் திருமாங்கல்யம் (தாலி)

அன்னை சீதா தேவியின் சூடாமணி

அன்னை சீதா தேவி அணிந்து கொண்ட வைர மணி

அன்னை சீதா தேவி அணிந்து சங்கிலி வளையல் (பிரேஸ்லெட்)

அன்னை சீதா தேவி அணிந்து கொண்ட நவரத்ன மாலை


ஆதாரம்: பிரசாந்தி ரிப்போர்ட்டர் - நவம்பர் 5 2001 இதழ். 

2 கருத்துகள்: