தலைப்பு

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சாயியின் நாமத்தை சதா எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ... அவர் ஜீவன் முக்தர் ஆகிறார்...

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பிருந்தாவன் வளாக ஹாஸ்டல் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு எழுதிய பிரகடனக் கடிதம்.... 


எனது அன்புக்குரிய ஆசிரியர்களே, மாணவர்களே. எனது அன்பையும், ஆசீர்வாதத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்! 

மாறிவரும் இவ்வுலகில் நம் வாழ்வில் பல விசித்திர நிகழ்வுகளைச் சந்திக்கிறோம். அவைகளில் சில நம் மனதிற்கு இதமானதாகவும், வேறு சில இதமற்றதாகவும் இருக்கின்றன. நமக்கு வரும் பிணிகள் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் ஏற்படுகின்றன. உடல்- பிணிகளாலும், மனம்- கவலைகளாலும்  தாக்கப்படுகின்றன. இந்த மகிழ்வற்ற அலைபாயும், துன்பமான நிலையிலிருந்து வெளிவர ஒரே ஒரு மார்க்கம்  தான் உள்ளது. அது சாயியிடம் சரண் அடைவதுதான். சாயி ஒருவரே இந்த இக்கட்டினையும், பிணிகளையும் போக்கி, ஆரோக்கியம், மன அமைதி மற்றும் வளங்களையும் அருள இயலும். 

சாயியின் நாமத்தை நாவில் தரித்தவர் ஜீவன் முக்தர்களாக ஆக்கப் படுகிறார்கள். சதா, இடைவிடாமல் அனுஷ்டிக்கப்படும் சாயியின் நினைவு, நமது அகந்தையை அழித்து, நாம் அழிவற்ற மாறாத தன்மையை உடையவர்கள் என்ற பேருண்மையை உணர்த்தும் வல்லமை பெற்றது. இந்த நாம ஸ்மரணைதான் , சாயி மற்றும் பக்தருக்குமிடையேயான நேருக்கு நேரான பந்தம். அது உறுதியாகி சாயியும் , தானும், ஒன்றுதான் என்ற ஞானத் தெளிவு ஏற்படும்.

அன்புடன்

உங்கள் சாயி/உங்களுக்கு மட்டுமே உரிமையான சாயி

(ஸ்ரீ சத்ய சாயி)


🌻பவ சாகரம் என்ற வாழ்க்கைக் கடலை எந்த கப்பலைக் கொண்டு கடப்பது . அது தான் worship. ஆழ்வார்களும், நாயன்மார்களும் , முக்தர்களும் , மோனர்களும் , பக்தர்களும் இந்த நாம சங்கீர்தனம் என்ற நாவாயால் நாம் பிறவிக் கடல் கடந்து, பெம்மான் அடி சேர வழி பல கூறியுள்ளார்கள். ஆனால் அளப்பறிய பெருங்கருண பிரவாகத்தில் நம்மை மூழ்கடிக்கும் சாயி பகவான், தானே நமக்கு சாயி நாமத்தின் மேன்மையை உரைப்பது, நாம் பெற்ற பேரினுள் பெரும்பேறன்றோ. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, அதன் வழியாக ஆனந்தம் அடைவோம். சாய்ராம்... 🌻


தமிழாக்கம்: கவிஞர் குஞ்சிதபாதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக