தலைப்பு

செவ்வாய், 11 ஜூன், 2019

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சத்யசாயி நிறுவனமும் இணைந்தது.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.

இந்த உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் பயில்வதற்காக பல்வேறு துறைகள் இருக்கின்றது. இதில் இந்து சமயம்(Hinduism) என்று ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறையின் கீழ் சத்ய சாய் பாபாவின் சர்வதேச நிறுவனத்தை இணைத்துள்ளது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். இது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஏனெனில் புதிய நவீனகால இந்து சமய அத்தியாயத்தில், மொத்தம் இரண்டு நிறுவனத்தை மட்டுமே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இணைத்துள்ளது. ஒன்று நமது சத்ய சாயி சர்வதேச நிறுவனம்(SSIO), இன்னொன்று இஸ்கான்(ISKCON) நிறுவனமாகும். இதன் மூலம் பகவான் சத்ய சாயி பாபாவின் மனித மேம்பாட்டு கல்வியையும், மற்றும் பகவான் பாபா போதித்த முக்கிய தெய்வீக அருளுரைகளையும் மாணவர்கள் எளிதாக படிக்க முடியும்.

2017ல் தான் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ(CIA) சத்ய சாய்பாபா குறித்து இரகசிய ஆவணத்தை வெளியிட்டது. அதில் சத்ய சாய் பாபா தோற்றுவித்த அன்பு மதம்  பிற்காலத்தில் மிகப்பெரிய புதிய மதமாக மாற வாய்ப்புள்ளதாக தன்னுடைய கணிப்பை வெளியிட்டது. இப்படி சிஐஏ வெளியிட்டுள்ள மூன்று வருடத்திலேயே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் சத்ய சாய்பாபாவின் நிறுவனத்தை தன்னுடைய பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாக கருதப்படுகிறது.

படிப்பின் பெயர்: கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் AS & A லெவல் ஹிந்துயிசம் 

இந்த துறையை படிக்க விரும்பும்  மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு வரு‌ம் 2021ஆம் வருடத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்தத் தேர்வு எழுத மாணவர்களுக்கு 17, 18, 19 வயது இருக்க வேண்டும்.. 

மேலும் பாட திட்டத்தை பற்றி விரிவாக படிக்க  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கீழ்வரும் டாகுமெண்ட்டை டவுன்லோட் செய்து பார்க்கவும்.
http://www.cambridgeinternational.org/Images/521992-2021-2023-syllabus.pdf

சாய்ராம். 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக