தலைப்பு

ஞாயிறு, 9 ஜூன், 2019

பொன்விழா காணும் சத்ய சாயி கல்லூரி (பிருந்தாவன்)!

வைட்பீல்டில் சத்ய சாயி கல்லூரியை திறந்து வைத்த கர்நாடக முதலமைச்சர் (போட்டோ தொகுப்பு)
ஜூன் 9, 1969, திங்கட்கிழமை (50 வருடங்களுக்கு முன்)
மைசூர் முதல்வர் ஸ்ரீ. வீரேந்த்ர பாட்டில் 1969 ஜூன் 9ம் தேதி காடுகோடியில் (வைட்பீல்டு) ஆடவர்க்கான 'ஸ்ரீ சத்ய சாயி கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யை துவாக்கிவைத்தார்.
கர்நாடக முதல்வர் மற்றும் அப்போதைய பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். V. K. கோகக் ஆகியோருடன் ஸ்வாமி கல்லூரிக்கு ஊர்வலமாக வந்தார்.
திறப்புவிழாவிற்கு பின் கல்லூரி கமிட்டியின் சேர்மன் திரு. K. நாராயணசாமி அவர்கள் கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பித்தார்.பின்னர் முதலமைச்சர் தனது துவாக்கவிழா உரை நிகழ்த்த, அதன் பின் ஸ்வாமி தனது தெய்வீக பேருரையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நாராயண சேவையின் ஒரு அங்கமாக கிட்டத்தட்ட 4000 வரியோருக்கு உணவு வழங்கப்பட்டது.
திருமதி. லலிதா போஸ் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மருமகள்) அவர்கள் 'வந்தே மாதரம்' பாட நிகழ்ச்சி நிறைவுற்றது.
தற்போதைய சத்ய சாயி கல்லூரியின் முகப்பு தோற்றம் (பிருந்தாவன் கேம்பஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக