தலைப்பு

செவ்வாய், 25 ஜூன், 2019

பகவானிடம் பெற்ற அரிய நிகழ்வுகளை இதயத்திலிருத்தி என்றும் நன்றி உள்ளவா்களாக இருப்போம்!


ஒருமுறை ஸ்வாமி பிருந்தாவனத்தில் தரிசனம் தந்து முடித்து "த்ரயீ"(Trayee) என பெயரிடப்பட்ட தனது இருப்பிடத்திற்கு திரும்புகையில் அவரது பாதம் நிலத்தில் பதிருந்த கூா்மையான கல்லிலே பட்டது. உடனடியாக அந்த பாதத்திலிருந்து அபரிமிதமான இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. ஸ்வாமியை சுற்றியிருந்த மாணவா்கள் திடுக்கிட்டு அந்த சூழ்நிலையினை ஜாக்கிரதையாக கையாள்வதற்கு அங்குமிங்கும் ஓடினார். ஒரு மாணவன் ஸ்வாமியை நோக்கி ஓடிவந்து மண்டியிட்டு அந்தகல்லை
பெயா்த்தெடுத்துஅப்பால் எறிவதற்கு ஆயத்தமானான். அதனை அவன் செய்ய முற்படுகையில், ஸ்வாமி அந்த செயலை தடுத்து நிறுத்தி புன்னகையுடன் இவ்வாறு கூறினாா் "அதனை விட்டுவிடு, இந்தகல் எனது ஆசிகளுக்காக காத்து கொண்டிருந்தது". உயிரற்ற ஜடப்பொருள்களும்  மகிமைவாய்ந்த ஸ்வாமியின் மேல் மிகுந்த ஆா்வம் கொண்ட அவதாரமிது.

ஓா்முறை ஸ்வாமி பிருந்தாவனை சூழ்ந்திருந்த ஆலமரத்தினை பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தினாா்.(காலம் 1960−1980) அம்மரத்தில் அனைத்து மகரிஷிகளும், முனிவா்களும் அவா்களுடைய வடிவத்தை எடுத்துக்கொண்டு பகவானின் தரிசனமதை பெற்றனா் என. கோபுரவாயிலில் தேவா்களாக செதுக்கப்பட்ட சித்திரங்கள், தேவதைகள், சாயிகுல்வந் கூடத்திலும்(ஹால்), பூரண சந்திர மண்டபத்திலும் உண்மையில் தேவதைகள் அவா்களுடைய வடிவத்தினை எடுத்து ஸ்வாமியின் விழா வைபவங்களை கண்திறந்து கண்டனா் என மற்றுமொரு சந்தா்ப்பத்தில் கூறினாா். நமது பங்காக எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாது எல்லாவற்றையும் பெற்றிருப்பதற்கு எவ்வளவு ஆசிா்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். தரிசனம், ஸ்பா்ஷனம், சம்பாஷனம் ஆகியவற்றை இந்த சந்தா்ப்பத்தில் பெற்ற நாம் பெற்றவைகளை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. நம் வாழ்நாளில் பகவானுடன் இருந்து பெற்ற இந்த நிகழ்வுகளை பொக்கிஷமாக நம் இதயத்திலிருத்தி எப்பொழுதும் நன்றி உள்ளவா்களாக இருந்திட வேண்டும். 

ஆதாரம்: பிரசாந்தி ரிப்போர்ட்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக