சனிக்கிழமை, பிப்ரவரி 22, 1948
1948 பிப்ரவரி 21ஆம் தேதி அன்று ராதாகிருஷ்ணன் அவர்களின் இரு மகன்களான அமரேந்திர மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் பாபாவை தங்களுடைய சகோதரி விஜயகுமாரியின் திருமணத்திற்காக
குப்பம் என்னும் ஊருக்கு பாபாவை அழைத்து வர புட்டபர்த்திக்கு சென்றார்கள்பாபாவும் அடுத்த நாள் 22 ஆம் தேதி அன்று திருமணத்திற்கு வந்து மங்கல சூத்திரத்தை சிருஷ்டித்து திருமண தம்பதிகளுக்கு ஆசிர்வாதமும் செய்தார்கள்.
அன்று மாலை ஸ்வாமி ஒரு இசைக் கச்சேரியை அரங்கேற்றினார். தியாகராஜரின் அரிய கீர்த்தனைகளை சுவாமி பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். திருமணத்திற்கு வந்த ஒரு சில இசை மேதாவிகள் சுவாமியிடம் இந்த கீர்த்தனை பாடுங்கள், அந்த கீர்த்தனை பாடுங்கள் என்று கேட்க, சுவாமியும் அவர்கள் கேட்ட அத்தனை கீர்த்தனைகளையும் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இசையை உலகத்திற்கு தந்த பரம்பொருள் அல்லவா சொல்லவா வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக