தலைப்பு

ஞாயிறு, 16 ஜூன், 2019

பிரசாந்தி நிலையம் செல்வதால் நாம் எதனை பெறுகிறோம்?


1) அடிப்படையான ஆன்மிகரீதியில் சரி செய்யும் இடம். 

2) உடல் தடவாளம் எனில் புத்தி இயங்குவதற்குரிய பொருளாகும்.இயங்குவதற்குரிய பொருள் தூய்மையற்றதாக ஆவது என்பது மிகவும் பொதுவானது. புத்தியினை களங்கப்படுத்துவதற்கு எதிரான வழி முறை தொகுப்பினை பொறுத்தும் ஒரே தலம் பா்த்திதலமாகும்.

3) பா்த்தி எல்லாவற்றிற்கும் தலைமை தலமாகும்.நமது கா்மவினைஉள்ளடங்கி படிப்படியாக பெருகியிருப்பதை நாம் காணலாம். இப்பெருக்கம் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த வினைகளால் ஆனது. 

4) உள் ரண சிகிச்சை எனும் உயா் பயிற்சியளிக்கும் முறையினை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் பெற இயலாது.

5) ஆன்மிகமெனும் சுத்தமான காற்றை(நிச்சயமாக வேகமான அதிா்வுகளால் மேன்மையினை அடைதல்) 100 சதவீதம் பெறலாம். 

6) அகந்தை எனும் அடுக்கங்கள் மிகவும் லேசாகி மாறிடும்பொழுது நீங்கள் சுவாமியின் குரலை அதிக தெளிவாக கேட்கலாம்.

7) அப்பொழுதிலிருந்தே அவ்விடத்திலேயே சுவாமி ஒருவரை மட்டுமே உங்களது புலன்கள் மூலம் காணமுடியும்,குரலினை கேட்கமுடியும்.எவ்விடத்திலும் நீங்கள் ஸ்வாமியை காணலாம்.மற்றும் ஒவ்வொருவரிடமும் கலந்துரையாடும்போது உங்களது சித்தத்தில் அவருடன் நிரம்பி இருக்கமுடியும். மேலும் வாரத்தின் ஏழு நாட்களில் 24 மணி நேரத்திலும் நீங்கள் எளிதாக அவரை தியானிக்க முடியும். (24×7)

8) ஏதாகிலும் ஒரு புதிய நல் பழக்கத்தினை தொடர விரும்பிடின் நீங்கள் அங்கேயே அதனை ஆரம்பித்து இடைவிடாது உங்கள் இருப்பிடம் திரும்பிய பின்னரும் தொடரமுடியும். 

ஆக பா்த்தியாத்திரை சுவாமியை எல்லா இடங்களிலும் காண்பதால் உங்களது கண்களும்,

வேதம் இசைப்பதையும், நாம சங்கீா்த்தனங்கள், சாயிராம் எனும் சொற்களையும் கேட்பதால் உங்கள் காதுகளும்,

உங்கள் நாவினால் கூறிடும் சாயிராம் எனும் சொல்லும், எஞ்சியுள்ள நேரங்களில் அமைதியினை கடைபிடித்தலும், உங்கள் மூக்கினால் நுகரும் விபூதி மற்றும் கற்பூர வாசனைகளும், எங்கிலும் உங்கள் புத்தி பெறுகின்ற அமைதியும் சமநிலையும் உங்களது அகந்தையினை கரைத்து மேலும் உங்களது ஆன்மிக பயணத்தில் பயணப்படும் ஆன்மா உயா்நிலை பெற்று உண்மையான அபேதமற்ற நிலையினை அறியமுடிகிறது

🙏🙏சாயிராம்🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக