தலைப்பு

வெள்ளி, 14 ஜூன், 2019

இப்படியும் உண்டோ ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி?


சாயி சந்திரசேகர தாஸ்வானி சாயி கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் குள்ளம். நம் 'குள்ள சுவாமியே' கேலி செய்யும் அளவுக்கு 'பக்ஷணம்' போல சந்துரு பையன் இருந்தான். அவனைப் போல இன்னும் நாலு பேரும் உண்டு. இவர்களிடம் தம்மாஷ் செய்வதுடன் கோபிக்கவும் செய்வார் கோமான்! "இப்படி ஸ்கூல் பாய்ஸ் மாதிரி இருக்கப்படாது. யு மஸ்ட் பிகம் டால்" என்பார்! அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்!

உயர ரீதியில் தானே அணிவகுத்து 'பரேட்', 'மார்ச் பாஸ்ட்' ஆகியன நடக்கும்? பொடியன்  சந்துருவே காலேஜ் மாணவரில் முதல்வனாக இவற்றில்  வருவான். "இதிலேதான் நீ ஃபர்ஸ்ட்! யூஸ்லெஸ் பாய்" என்று  சீனப்பார் சீராளரே!

அப்புறம் ஹாஸ்டல்களில் ஒன்றை கட்டிய ஆர்.என். சிங்கை சீண்டினார். "பெரிசா அந்த தேசம் இந்த தேசம் போய்க்கொண்டே இருக்கீங்களே! இந்த பாய்ஸ் டால் ஆகிறதுக்கு எங்கேயாவது மருந்து வாங்கிக் கொண்டு வரப்படாது?  என்றார். அடுத்த முறை லண்டன் போய் வரும்போது சிங் அற்புத மருந்து பிடித்துக்கொண்டு வந்தார். ஆறு மாதத்தில் அது பொடியவர்களை சராசரி உயரத்துக்கு உயர்த்தி விடுமாம்! அதோடு அது ஹல்வா போல வாய்க்கு ருசியாயிருந்தது. அரை வருஷம் அந்த இனிய ட்ரீட்மெண்டில் சந்துரு கோஷ்டியினர் இருந்தனர். பாட்டில்கள்தான் காலியாயினவே அன்றி பசங்கள் மில்லியும் உயரவில்லை.

இத்தனை காலம் இவ்வளவு கூத்தடித்த சுவாமி பிறகு ஒருநாள் அந்த ஐவரையும் முழங்காலில் நீவி விட்டார். லேசாகத்தான் நீவினார்.

ஆயினும் உலகை உயர்த்த வந்தவனின் உயர் சங்கல்பத்தினால் அவர்கள் அடுத்த சில வாரங்களிலேயே எட்டு, பத்து அங்குலம் உயர்ந்து விட்டனர்! அதனால்தான் இன்று சாயி சந்திரசேகர் 'ஓரளவு குட்டை' லிஸ்ட்டில் இருக்கிறாரேயன்றி பக்கா குள்ள லிஸ்டில் இல்லை.

வடமதுரையில் குப்ஜையின் கூனைக் கண்ணன் நிமிர்த்தினான். அவனது அண்ணன் பலதேவன் பனைமரம் போல் உயரமாக இருந்த ரேவதியை குட்டை ஆக்கினான். குட்டையரை நெட்டை ஆக்கிய அற்புதம் எந்த புராணத்திலும் படித்ததாக இப்போது நினைவுக்கு வரவில்லை.

உருவத் தோற்றத்தை அழகாக்குவதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்று ஒன்று செய்கிறார்கள்.  இழுக்க இழுக்க நெகிழ்ந்து கொடுப்பதே 'பிளாஸ்டிக்'. ஏதோ சிறிது முழங்கால் நீவுதலில் கிட்டத்தட்டப் பாதி முழம் நீளமுமாறு இழுப்பு நெகிழ்ச்சி கொள்ளும்படி ஐந்து உடல்களுக்கு ஐயன் செய்த பிளாஸ்டிக் சர்ஜரி எப்படி?

ஆதாரம்: அற்புதம் அறுபது, ரா. கணபதி
எழுத்தாக்கம்: N. ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம், திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக