தியாகேனைகே அமிர்தத்துவ மானஸு
(அமரத்தன்மை தியாகத்தினாலேயே அடையப்படுகிறது - வேத வாக்கு)
கடந்த 2008 முதல் பிரசாந்தி சேவையில் வருடம் 2 முறை கலந்துகொள்கிறார்.
அதன் பயனாகத்தான் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எந்த ஆபத்து நேர்ந்தாலும் பகவான் கண்ணை இமை காப்பது போல் காக்கிறார் என உணர்ந்து கூறுகிறார்.
2012ல் மூத்த மகன் தேர்வு முடித்த தனது தம்பியை அழைத்துக் கொண்டு மதுரை திரும்பும் போது, திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மாட்டிக்கொண்டனர். வரிசையாக அடுத்தடுத்த கார்விபத்தில், இவர்கள் சென்ற கார் அப்பளமாக நொறுங்க, ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பகவான் இருவரையும் காப்பாற்றினார்.
2016ல் இவரது கணவர், திடீரென மயக்கமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதக்க, 19 நாட்கள் அதிதீவிர சிகிச்சையில் இருந்தார். சொந்தங்களோ இனியும் இவர் பிழைக்க மாட்டார் என கூறியும் பகவான் தம்மை கைவிடமாட்டார் என்ற அதிதீவிர நம்பிக்கையை திருமதி.கவிதா கைவிடவில்லை.
பகவானும் கைவிடவில்லை!
அதிசயமாய் உயித்தெழுந்தார் இவர் கணவர். அதன் பின் பகவானின் பிரபாவத்தை அறிந்த அவரது கணவர் இவரது சாயி பணியில் உறுதுணையாய் இருந்தார்.
கடந்த மார்ச் மாதம் இவர் பிரசாந்தி சேவையில் இருந்த போது, இவரது இளைய மகன் டெங்கு காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அது ஆரம்ப நிலையே என்றும் அதிக பயம் இல்லை என்றும் மருத்துவர்கள் தேவையான சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.
இதனை கேள்விப்பட்டால் உடனே தனது சேவையை பாதியில் நிறுத்தி ஊர் திரும்பிவிடுவார் என்பதால் இவரது கணவர் இவருக்கு தகவல் கூறாமல் இருந்தார்.
ஊர் திரும்பியதும் கேள்விப்பட்ட கவிதா, இப்போதும் பகவானே காப்பாற்றினார் என அடித்து கூறுகிறார்.
பகவானின் பணியை நாம் பார்த்தால் நமது தேவைகளை அவர் கவனித்துக் கொள்வார் என்பதில் ஐயமேதும் இல்லை என்பது அவரது அனுபவ வாக்கு!
ஜெய் சாயிராம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக