உடுமலைப்பேட்டை திரு. R. பாலபட்டாபியின் சாயி அனுபவங்கள்.
சிறிது நேரத்தை அங்கே செலவழித்தபிறகு, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது நேரங்கழித்து, நம் பகவான் காரோட்டியைத் திரும்பவும் நிறுத்தச் சொன்னார். சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. அந்த நேரம் மிக அற்புதமாகவும் நிலவொளியில் மிக ரம்மியமாகவும் இருந்தது. அப்பொழுது நம் பகவான் சிறிதுநேரம் உலாவினார். அந்த சந்தர்ப்பத்தில் வண்டி ஓட்டுனர் காரின் பின்புறம் புகைபிடிப்பதற்காக ஒதுங்கிச் சென்றார். பகவான் அவரிடம் நேராகச் சென்று அவரின் பெயரை வினவினார்.
"குமாரசாமி" எனப்பதிலளித்தார். சிறிது கூட மரியாதை இல்லாமல் பதில் அளித்தார் காரோட்டி. பிறகு நம் பகவான் அவரிடம், "ஏன் நெற்றியில் விபூதி இடவில்லை? " எனக் கேட்க, தன் வாழ்க்கைகிற்கு அந்த மாதிரியான சின்னங்கள் தேவையில்லை என்றும், மக்கள் வெறும் பகட்டிற்காக விபூதியைப் பூசிக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.
இப்படி மரியாதை இல்லாமல் காரோட்டி பேசியபோதும், நம் பகவான், "வடை சாப்பிட்டிருக்கிறாயா?"
எனக்கேட்க, உடனே காரோட்டி "யார் தான் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்"என விட்டேத்தியாகப் பதிலளித்தார். நம் பகவான் திரும்பவும், "உன் தாய் செய்து வைத்திருந்த வடையை நீ எடுத்துக் கொண்டாயல்லவா" என்றார்.
பதிலுக்குக் காரோட்டி பேசும் முன்பு, நம் பகவான், "நீ நான்கு வயதாயிருக்கும் பொழுது உன்தாய் இறந்து விட்டார்கள் அல்லவா. ஒருமுறை உனக்கு இரண்டரை வயதாக இருக்கும் பொழுது, உன்தாய் வடை சுட்டுக் கொண்டிருந்தாகள். அவர்களிடம் நீ தாவிச்செல்ல முற்படும் போது தவறி எண்ணெய்க் கொப்பரையில் இருந்த கொதிக்கும் எண்ணெய் உன்னைச் சுட்டு விட்டது. அதன் வடு உன்னுடைய வலது கையில் உள்ளது. வா,வா உன்சட்டையைக் கழட்டு" என்றார்.
உடன், அந்தக் காரோட்டித் தன் சட்டையைக் கழற்ற, நாங்கள் அனைவரும் அவர் கையில் இருந்த வடுவைக் கண்டோம்.
அவர் உடனே மரக் கட்டைப் போல நம் பகவானின் பாதங்களில் விழுந்து மனம் வருந்தி அழ ஆரம்பித்து, சுவாமி, எனக்கு 45 வயதாகிறது, எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கையே கிடையாது. உங்களைக் கூட பரிகாசம் செய்திருக்கிறேன். ஆனால், பெட்ரோல் இல்லாமல் நமது வண்டி ஓட ஆரம்பித்த பொழுது சிறிது வியப்படைந்தேன். இப்பொழுது என் மூத்தோர்களும், சொந்தங்களும் எனக்கு நடந்த விபத்தைக்கூறக் கேட்டிருந்த என்னிடம் அதைப் பற்றித் தாங்கள் கூறக் கேட்டேன்."
"தாங்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் தான், எல்லாம் அறிந்தவர். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போதும், தங்களின் பக்தர்களின் கூறுவதைக் கேட்டும், கண்டும் நான் ஒன்றை உணர்ந்து கொண்டேன். இந்தக் கலியுகத்தில் கண்கண்டக் கடவுள் நீங்கள்தான், என்னை மன்னித்தருளுங்கள் சுவாமி" என கண்ணீர் மல்க வேண்டினார். நம் கருணைத் தெய்வம் அன்பு பகவான்,அவரைச் சமாதனப்படுத்தி, விபூதி வரவழைத்து அவர் நெற்றியில் இட்டு விட்டார்.
*பாபாவுக்கு எதுவும் சாத்தியம், எதையும் மறைக்க முடியாது, யாரும் அவரால் தண்டிக்கப்படுவதில்லை, அவருடைய அன்பு நிபந்தனையற்றது, அவர் அனைவருக்கும் உரியவர், அவர் தனது பக்தர்களால் பிணைக்கப்பட்டவர்.*
ஆதாரம்: Book Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba by R Ballapatabi
மொழிபெயர்ப்பு: திருமதி. உமாராணி சங்கரலிங்கம்,போரூர் சமிதி,சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக