தலைப்பு

திங்கள், 24 ஜூன், 2019

பகவானுக்கு எதை உண்ணப் பிடிக்கும்?


பகவானுக்கு படைக்க வேண்டும் என்றால் மிகவும் ருசியாக இருக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவார்கள். விதவிதமாக பண்டங்களை செய்து படைப்பார்கள். ஆனால் பகவானுக்கு எதை உண்ணப் பிடிக்கும் என்று பார்ப்போம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சின்ன கிராமத்தில் வாழ்ந்துவந்தார் லட்சுமிபாய் தேஸ்முக் என்ற பெண்மணி. மண்சுவர்களால் கட்டப்பட்ட குடிசையில் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவர் வெளியூருக்கு போயிருந்தார். ஆகவே மிகவும் எளிமையாக உணவு இருந்தால் போதும் என்று இரண்டு ரொட்டிகளுக்கு மட்டுமே மாவு பிசைந்து கெட்டியான ரொட்டிகளை மட்டும் அடுப்பில் வாட்டி எடுத்து வைத்திருந்தாள். அதற்கு தொட்டுக்கொள்ள பச்சைமிளகாயையும் உப்பையும் சேர்த்து அரைத்து சட்னியாக வைத்திருந்தாள். 

மனதில் பகவானுக்கு படைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள். அப்போது….! பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா எதிரில் வந்து நின்றார். லட்சுமிபாயிக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை. பேச்சும் வரவில்லை, பகவான் அவளிடம் என்ன லட்சமி பசி வேளையில் வந்திருக்கிறேன். ஏதாவது சாப்பிட கொடுப்பாய் என்று பார்த்தால் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய், பேசக் கூட இல்லையே என்றால் பாபா. உடனே லட்சுமி பாய் சுவாமி சுவாமி உங்களுக்கு ஏற்றவாறு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே, இந்த ஏழையிடம் ஏன் வந்தீர்கள் என்றாள். இதோ சுட்டு வைத்திருக்கிறாயா ரோட்டிகளை கொடுத்தாள் என்ன? என்றார் பாபா. அதற்கு லட்சுமி பாய் இதையா வேண்டும் என்கிறீர்கள். ஆமாம், அதைக் கொடு என்றார் பாபா. சரி உங்களுக்கு இதுதான் வேண்டும் என்றால் தருகிறேன். இங்கே அமருங்கள். நான் பியத்து பியத்து துண்டுகளை இந்த சட்னியில் தோய்த்து தோய்த்து தருகிறேன் என்று லட்சுமிபாய் சொன்னாள். ஆனந்தத்திலும், பக்தியிலும் கண்களிலிருந்து நீர் வழிய சின்ன சின்ன துண்டுகளாக அந்த ரோட்டியை பகவானுக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.

ஒரு ரோட்டி முடிந்தவுடன், இதுவே போதும் வயிறு நிரம்பிவிட்டது என்றார் பாபா. அப்படியா! ஒன்றுதானே சாப்பிட்டிருக்கிறீர்கள். இன்னும் ஒன்று சாப்பிடுங்கள் என்று ரோட்டி வைத்திருந்த தட்டை பார்த்தாள் லட்சமி, அப்போது சிறுகிண்ணத்தில் வைத்திருந்த பச்சை மிளகாய் சட்னி அப்படியே பயன்படாமல் இருந்ததை பார்த்தாள். என்ன ஆச்சரியம், சிறிதுகூட சட்னி குறையக்காணோம். பின்னே தொட்டு தொட்டு தந்தது எதை? அடுப்பில் இருந்த சாம்பலைத்தான் தொட்டுக் கொடுத்திருக்கிறாள்! தலையில் அடித்துக் கொண்டால் லட்சுமி சாட்சாத் பகவானுக்கு சாம்பலை சட்னியாக வைத்து தந்திருக்கிறேனே என்று அழுதாள். அதற்கு பகவான் நீ அழாதே, அந்த ரோட்டியும் சாம்பலும் எப்படி ருசித்தன என்பதை உனக்கு காட்டுகிறேன் பார் என்ற சொல்லி கொஞ்சம் ரோட்டியை பிய்த்து எடுத்து சாம்பலோடு சேர்த்து லட்சுமியிடம் கொடுத்தார், சாப்பிட்டுப் பார் என்றார். அழுது கொண்டே சாப்பிட்டாள் லட்சுமி. சாம்பலில் தொட்டு கொடுத்த ரோட்டியோ பால்கோவாவாக மாறியிருந்தது சாம்பல் ஒரே ருசி! திக்குமுக்காடிப்போனால் லட்சுமி. அப்படி ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும்போது மறைந்துவிட்டார் பாபா. 

இதைப்போலவே சீரடி அவதாரத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. 

சீரடிக்கு வெகு தூரத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். பாபாவை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவர் மேல் மிகுந்த பக்தியும் அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும் மிகுதியாக கொண்டிருந்தார். ஆகவே அவரை பார்க்க கால் நடையாக சீரடியை நோக்கி பயணமானாள். வயதாகிவிட்டதால் நடை வேகம் குறைந்து கொண்டே வந்தது. வெய்யில் வேறு கடுமையாக தாக்கியது. பாட்டி உட்கார்ந்துவிட்டாள் பசியோ பசி எடுத்துக் கொண்டுவந்த ரோட்டிகளில் ஒன்றை தானே சாப்பிட்டுவிட்டாள். பாபா உனக்கு கொண்டுவந்ததை நானே பாதி சாப்பிட்டுவிட்டேனே என்ன செய்வது, பசி பொருக்கவில்லையே என்று புலம்பிவிட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தாள். சீரடி அருகில் வர வர அவளுக்கு பசியும் அதிகமாயிற்று மீதியிருக்கும் ரோட்டியில் கொஞ்சம் கடித்து சாப்பிவிட்டாள் அவ்வளவு பசி! கடையில் பாபா இருந்த இடத்திற்கு வந்துவிட்டாள். ஒரே கூட்டம். கடைசியில் கொஞ்சம் உட்கார இடம் கிடைத்து. பாபா ஒரு பக்தரை அழைத்து அதோ அந்த பாட்டி உட்கார்ந்திருக்கிறாரே அவரை அழைத்துக் கொண்டு என் பக்கத்தில் உட்கார வை என்றார். அப்படியே பாட்டி பக்கத்தில் உட்கார்ந்தவுடன் அம்மா எனக்கு என்ன கொண்டு வந்தாய் பசிக்கிறது அம்மா என்று கேட்டார் பாபா. பாட்டி அழுது கொண்டே பாபா நான் என்ன செய்வேன். எடுத்துகொண்டு வந்ததில் பாதியை நானே சாப்பிட்டுவிட்டேன் என்று அழுதாள். அதற்கு பாபா இருந்தால் என்ன அம்மா, கடித்து சாப்பிட்ட மீதி இருக்கிறது அல்லவா அதை கொடு என்றார் பாபா. ஐய்யையோ அது எச்சில் பட்டது உனக்கு கொடுக்க முடியுமா? என்று அழுதாள். அதற்கு பாபா அம்மாவிற்கு மகனுக்கும் என்னம்மா எச்சில் வேண்டியிருக்கிறது. நீ சாப்பிட்ட மீதியே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளிடம் இருந்த பாதி ரோட்டியை எடுத்து சாப்பிட்டார். 

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பகவானுக்கு நாம் படைக்கும் வடை பாயாச விருந்து முக்கியமில்லை நம்முடைய பக்தியே முக்கியம். இதையே பகவத் கீதையிலும் பத்ரம், புஸ்பம், பலம், தோயம் என்று தொடங்கும் ஸ்லோகத்திலும் சொல்லியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக