தலைப்பு

சனி, 29 ஜூன், 2019

ஓ சாயி! யோகிகளின் தலைவரால் வணங்கப்படுபவரே!


101. ஓம் ஸ்ரீ சாயி யோகீந்திர வந்திதாய நம:

யோகி – யோகிகளின், 
இந்திர – தலைவன், 
வந்தித – வணங்கப்படுபவர்

ஜூலை 22-ம் தேதி சுவாமி சிவாநந்தரின் ஆஸ்ரமத்துக்கு இறைவன் பாபா சென்றார். சுவாமிகளின் சீடர்கள் ஹரித்வாரத்திலேயே, பாபாவை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர்.

ரிஷிகேஸத்திலே சிவாநந்தரும் மற்றும் ஆசிரம வாசிகளும் சுவாமியை மனமுவந்து வரவேற்றனர். அச் சமயம் ரிஷிகேஸத்திலே சிவாநந்தரின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. சுவாமி சிவாநந்தா இருகரங்களையும் கூப்பி அஞ்சலி செய்து பகவானை வரவேற்றார். பகவான் அவருக்கு அபய ஹஸ்தம் காட்டி மகிழ்வித்தார். தனது அங்கையை அசைக்க அருமையான வேலைப்பாடுகள் வாய்ந்த கண்கவர் அழகு பொருந்திய நூற்றியெட்டு ருத்ராக்ஷமணிகளை உடைய ஒரு கண்டிகை அவர் கையில் வந்தது. அதன் நடுவில் ஐந்து முகங்களை உடைய ஒரு நாயக மணியும் இருந்தது. அந்த கண்டிகையை பகவான் சிவாநந்தாவிக்குஅளித்தார். மிகுந்த அளவில் திருநீறு வரவழைத்து அம்முனிவரின் நெற்றியில் அணிவித்தார். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அவருடன் தனியாக பேசி உடல் நலம் தேறுவதற்காக பழங்கள் விபூதி ஆகியவற்றை வரவழைத்துக் கொடுத்தார். அவர் உடல் நாளுக்கு நாள் தேறி வந்தது. ஒரு நாள் பாபா கங்கை நீரை கையில் எடுக்க அது அமிர்தமாக மாறியது. அதை சிவாநந்தரிடம் கொடுத்து மருந்தாக அருந்தச் செய்தார். பாபா வந்தபோது சுவாமி சிவாநந்தா சக்கரங்கள் பூட்டிய நாற்காலியில் அமர்ந்து இருந்தார். பாபா அந்த ஆஸ்ரமத்தை விட்டுப் புறப்படும் நாள் வண்டியின் உதவி இல்லாமல் தானே எழுந்து நடமாடும் அளவிற்கு குணமடைந்து விட்டார் சிவாநந்தா. என்னே ஸ்வாயின் கருணை! சுவாமி சிவாநந்தா ‘வைராக்யம்’ என்னும் மருந்தை இறைவனின் நாமஸ்மரணை என்ற உணவோடு சேர்த்து அருந்தி வருவது அவசியம்’ எனக் கூறினார்.

ஓ சாயி! யோகிகளின் தலைவரால் வணங்கப்படுபவரே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம் : பக்தியில் கோத்த நல்முத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக