தலைப்பு

திங்கள், 10 ஜூன், 2019

முன்னாள் நாசா விஞ்ஞானி திரு. டாக்டர் ஆர்ட் - ஓங் ஜும்சாயின் அனுபவங்கள்.



டாக்டர் ஆர்ட்-ஓங் ஜும்சாய், முன்னாள் நாசா விஞ்ஞானி, கல்வியாளர், முன்னாள் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ஆவார். இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் நாசாவில் இருக்கும் பொழுது, நம் பகவான் அருளால், அமெரிக்காவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு "வைக்கிங்"1"2" செயற்கைக்கோள்களை வடிவமைத்து வெற்றிகரமாக இயங்கச் செய்தவர்.

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10,1945

பாங்காக்கில், இரண்டாம் உலகப்போரின் பொழுது, நம் பகவான் பாபா தோன்றிய நிகழ்வு.

இரண்டாம் உலகப் போரின் போது (1945)பாங்காக்கில் நம் பகவான் பாபா ஒரு வீட்டின் முன்பு தோன்றினார். அவர் அவ்வீட்டுத் தலைவியிடம் சிறிது விபூதியைக் கொடுத்து அதை வீட்டைச் சுற்றி தூவும்படி அவர்கள் மொழியிலேயேக் கூறிவிட்டு மறைந்து விட்டார். அந்தப் பெண்மணியும் தன் கையில் உள்ளது வெள்ளை மணலைப்போன்று இருப்பதாக உணர்ந்தார். அவர் அதை தன் வீட்டைச் சுற்றித் தெளித்தார். சிறிது நேரத்தில் அவர்களின் வீட்டைத்தவிர எல்லா வீடுகளும் விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்டன.

Dr. ஜும்சாய் மகன் டாக்டர் ஆர்ட்-ஓங் ஜும்சாய், மிகப் பெரிய விஞ்ஞானியாகவும், மிகச்சிறந்த பட்டங்களையும் பெற்றவர். தன் தொழிலில் தலை சிறந்தவராக இருந்தபோதிலும் இறைவனைப் பற்றி அறியும் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகமாகவே இருந்தது. அவரும் அவர் அன்னையும் வொய்ட்பீல்டிற்கு டில்லியில் உள்ள நண்பர்களின் வழிகாட்டுதலோடு வந்தனர். நம் பகவான் அவர்களுக்குத் தனிநேர்காணலை அளித்தார். அச்சமயத்தில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் தான் விபூதி அளித்த சம்பவத்தை ஞாபகப்படுத்தினார். அந்நேரத்தில் நம் பகவான் ஜும்சாயிடம்  தன் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொருவரையும் தான் எவ்வாறு வைத்துள்ளார் என்பதை விளக்கினார். இறுதியாக நம் பகவான் ஜும்சாயிடம், "நீ அமெரிக்காவில் மலையுச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பொழுது உனக்கு யார் ராக்கெட் இஞ்சினின் வடிவத்தை அமைக்க குறியீடுகளைக் கொடுத்தது."  நம் பகவான் பாபாவின் குரலை வைத்து அவர் பாபா தான் தனக்கு உதவியதாகப் புரிந்து கொண்டார். ஜும் சாய் நம் பகவானின் அற்புத ஆற்றலைப் புரிந்து கொண்டார்.

நம் பகவான் பாபா அவரை சத்ய சாய் குழுக்களோடு இணைந்து மனிதவள மேம்பாடுகளைப் பற்றி 12 மேல் நாடுகளுக்குச் சென்று அங்கு மக்களுக்கு விளக்குமாறு கூறினார்."நீ என் வேலைகளைக் கவனித்துக் கொண்டால் உன்னையும்  உன் வேலைகளையும்  நான் பார்த்துக் கொள்வேன்" என்று பகவான் இவ்வாறாக உறுதி அளிக்கிறார். சாய்ராம்.

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam (1926-1985)

மொழிபெயர்ப்பு: திருமதி. உமாராணி சங்கரலிங்கம்,போரூர் சமிதி,சென்னை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக