தலைப்பு

வியாழன், 1 செப்டம்பர், 2022

சாயியே ஆன்மீக வங்கி.. பக்தியே உங்கள் ஏ.டி.எம் கார்டு!


பணம் முக்கியமா? பக்தி முக்கியமா? 
பணம் உங்களை வெறும் பொருளை வாங்க மட்டுமே உதவுகிறது.. பக்தியே பரம் பொருளை வாங்க வைத்து உங்களை உயர்த்துகிறது. 

நம் அனைவருக்கும் தேசிய வங்கிகள் தனியார் வங்கிகள் மட்டுமே தெரியும். ஆன்மீக வங்கி என்று ஒன்று இருக்கிறது... இதைப் பற்றி நம்மில் யாருக்கும் எதுவும் தெரியாது.

"ஆன்மீக வங்கி"யைப் பற்றி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்க்கும் அவரது மாணவர்களுக்கும் இடையே நடந்த ஒர் அற்புதமான உரையாடல்... இதோ 👇

ஒரு வங்கியில் இருந்து மூன்று வழிகளில் நம்முடைய பணத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

முதலாவதாக வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கி சிறிது சிறிதாக அதில் பணத்தை சேமித்து நமக்கு தேவைப்படும் போது அந்த சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக நம்மிடம் உள்ள சொத்துக்களை வங்கியில் அடமானம் வைப்பதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை பெற முடியும்.

மூன்றாவது வழியும் ஒன்று உண்டு.. அது என்னவென்றால் நமக்காக யாராவது உத்திரவாதம் தந்தால் அந்த உத்தரவாதத்தின் பேரில் வங்கியில் இருந்து நாம் பணத்தை பெற முடியும்.


அதே போல் நான் ஒரு ஆன்மீக வங்கியாளர். இந்த வங்கியில் இருந்து என்னுடைய க்ருபையை நீங்கள் மூன்று வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

முதலாவதாக இந்த ஆன்மீக வங்கியாளரிடம் தினந்தோறும் சிறிதளவு நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், மற்றும் நல்ல கர்மாக்கள் இவைகளை தொடர்ந்து சேமிப்பதன் மூலம் ஆன்மீக சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பித்து வைக்கலாம்.

சுவாமி :- நான் ஏன் உங்களிடம் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யச் சொல்லுகிறேன் தெரியுமா ??

மாணவர்களிடம் கனத்த மௌனம்..

வாழ்க்கை என்பது ரோஜா மலர்ப் படுக்கையால் ஆனதல்ல. வாழ்க்கை என்றால் மேடும் பள்ளமும் இருக்கத்தான் செய்யும். உங்களது வாழ்க்கையிலும் நீங்கள் கடினமான நேரங்களை சந்திக்க நேரலாம். அப்போது அத்தகைய கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்காக என்னுடைய கருணையை வேண்டி நீங்கள் இருப்பீர்கள். அப்போது நீங்கள் எனக்கு செய்த இத்தகைய சிறிய சேவைகளை நான் ஞாபகத்தில் கொண்டு அச் சேவையின் பலனாக என் கருணையை உங்கள் மீது பொழிவேன்.

ஒரு போதும் நீங்கள் எனக்கு செய்யும் இத்தகைய சிறிய சேவைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.சுவாமி இப்பிறவியில் நான் யாருக்கும் எந்த நல்லதும் செய்ததில்லை. இருப்பினும் நான் உங்களது கருணையை எனது கஷ்ட காலத்தில் பெறமுடியுமா??

சுவாமி :- நிச்சயம் முடியும். இப்பிறவியில் செய்யாவிடினும், போன பிறவியில் நீ செய்த நல்ல காரியங்களை அடமானமாகக் கொண்டு என் கருணையை நீ கஷ்டப் படும் போது பெற முடியும்.

ஸ்வாமி 🙇‍♂️ இப் பிறவியில் மட்டுமல்ல கடந்த பிறவிகளிலும் நான் யாருக்கும் எத்தகைய நல்லதும் செய்ததில்லை. இருப்பினும் என்னால் உங்களது கருணையைப் பெற முடியுமா??

சுவாமி :- நிச்சயம் முடியும்.  வங்கியில் யாராவது நமக்கு உத்திரவாதம் தந்தால் நம்மால் பணத்தை பெற முடியும் இல்லையா... அவ்வாறே இந்த ஆன்மீக வங்கியிலும் உத்திரவாதத்தின் பேரில் உனக்கு கருணை கிடைக்கும்.

இந்த உத்திரவாதம் தருபவர் யார்??

உன் குருநாதரால் உனக்கு உத்திரவாதம் தரமுடியாது. பிறகு யார்?? கடவுளா உனக்கு உத்திரவாதம் தருபவர்?? இல்லை...


என் மீது நீ கொண்ட நம்பிக்கையே நான் குறிப்பிட்ட உத்திரவாதம். அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையே உனக்கு தேவையான அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

அன்றாடம் நாமும் சாய்ராம் லிகித ஜெபம் எழுதி ஆன்மீக வங்கியில் சேமிக்கத் தொடங்குவோம்.

Note :-  இருதய நோயாளியைப் பற்றிய கதை ஒன்று  என் நினைவிற்கு வருகிறது... ஒரு சமயம் சுவாமி சொன்னார்... என் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு குணம் தரும் கோயில் கட்டியுள்ளேன். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்டோருக்காக மருத்துவ மனையை கட்டியுள்ளேன்.

ஜெய் சாய்ராம்.

ஆதாரம்: - THIS BANK AND THAT BANK - Radiosai Journal |June 2008
தமிழாக்கம்  :-  ரா. வரலட்சுமி,  குரோம்பேட்டை,  சென்னை.


🌻 ஆன்மீக வங்கியை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்த வேண்டும்..*
பண வங்கி என்பது கைக்குட்டை போல் தான்.. ஆனால் பக்தி வங்கியே உங்களைப் பாதுகாக்கும் உயிர்க் கவசம். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக