தலைப்பு

சனி, 24 செப்டம்பர், 2022

சாயி நிறுவனம் மற்றும் உறுப்பினர்களுக்கான பாபாவின் கட்டளை!

இறைவன் பாபா ஆரம்பித்தது ஆன்மீக சேவா நிறுவனம்.. ஆன்மீக சாதனையும் சேவையும் மனித ஆன்மா உயர்வதற்கான இரண்டு சிறகுகள்! சேவை இல்லாத ஆன்மீக சாதனை பார்வையற்றோர் கை பிரகாச விளக்கு... ஆன்மீக சாதனை இல்லாத சேவை வெறும் நூல் அறுந்த பாணா காத்தாடி! ஆக பாபா தன் நிறுவனத்திற்கும் சேவாதள உறுப்பினர்களுக்கும் 23 February 1968 அன்று பிரசாந்தி நிலையத்தில் விடுத்த பிரசாந்தி நிலையத்திற்கான கட்டளை இதயத்தில் பதித்து கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறி.. சைதன்யப் பொறி காட்டிடும் ஆன்ம நெறி இதோ...


"என் பெயர் சூட்டப்பட்ட நிறுவனத்தினை எனது பெயரை விளம்பரப்படுத்தவோ அல்லது என்னை வழிபடும் வகையில் ஒரு புதிய வழிபாட்டை (மதத்தினை) உருவாக்கவோ பயன்படுத்தக்கூடாது.

இந்நிறுவன உறுப்பினர், இறைவழியில் ஒருவரை அழைத்து செல்லும் ஜபம், தியானம் மற்றும் பிற ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றில் ஆர்வத்தை பரப்ப முயற்சிக்க வேண்டும்; பஜனை மற்றும் நாமஸ்மரணம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய மகிழ்ச்சிக்கும், சத்சங்கத்தின் மூலமாக அனுபவிக்கும் சாந்திக்கும் அவர்கள் நிரூபணமாக விளங்க வேண்டும். 

அவர்கள் ஆதரவற்றோர், நோயாளிகள், துன்பப்படுபவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும். அவர்களின் சேவை விளம்பரத்திற்காக, வெறும் கண்காட்சியாக இருக்கக்கூடாது; சேவையில் எந்த வெகுமதியையும், பிரதிபலனையும் எதிர்நோக்கக்கூடாது, பயனாளிகளிடமிருந்து நன்றியினைக் கூட எதிர்பார்க்கக்கூடாது.  

சேவை என்பது ஓர் ஆன்மிக சாதனை. பணக்காரர்களின், வசதி படைத்தவர்களின் பொழுது போக்கு அல்ல".


- ஸ்ரீ சத்ய சாயி பாபா, Feb 23, 1968.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக