தலைப்பு

திங்கள், 12 செப்டம்பர், 2022

கானா நாட்டில் ஒரு சிறுவனுக்கு காட்சி தந்து பஜன் பாடிய பாபா!

இறைவனைக் காணும் முயற்சி எளிதானதல்ல. புலன் அடக்கி மனம் ஒடுங்கி, தவம் இயற்றி பலகாலம் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்த வழிமுறை ஏதும் அறியாத எளிய ஆத்மார்த்த பக்தர்களுக்கு, அது ஆப்பிரிக்காவோ, அமெரிக்காவோ அவர்கள் இருக்கும் இடத்திலேயே தோன்றி இன்னருள் புரிந்திடுவார்  கருணாமுர்த்தி பாபா... 


🌹பக்தனின் இதயக் குரல் கேட்டு படத்திலிருந்து எழுந்து வந்த பாபா:

ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ளது செகாண்டி நகரம். அங்கு சில அன்பர்கள் மனம் சாயி ரூபத்தால் நிரம்ப, ஒலித்துக் கொண்டிருந்தது சாயி பஜன் . அங்கு பிரஹலாதனைப் போன்ற பக்தியில் சிறந்த ஒரு சிறுவன் ரிச்மண்ட். பெயரில்தான் 'ரிச்', வசதியில் குறைந்த அவன்,  பாபாவின் பஜன்களில் அதீத ஈடுபாடு கொண்டவன். வண்ண மலர்களை சேகரித்து, எண்ணம் இனிக்க இறைவன் பாபாவின் திரு உருவப் படங்களை அழகுற அலங்கரிப்பான். பஜன் பாடல் தெரியாத அங்குள்ளபக்தர்கள், ஆடியோ கேசட் மூலமாகப் பஜன்களை இசைக்கவிட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்துவர். அது போன்ற ஒரு பஜன் நிகழ்ச்சி ஒருசமயம் அங்கு நடை பெற்றுக்கொண்டிருந்தது. பஜன்களைக் கேசெட்டில் இசைக்கவிட்டு ஆண்களும், பெண்களும் தனித் தனியாக சாயிக் கட்டுப்பாட்டுடன் அமர்ந்திருக்க, ரிச்மண்ட் பலவண்ண மலர்களால் பாபாவின் திரு உருவப் படத்தை அலங்கரித்து, ஊது வத்திகளையும் ஏற்றி வைத்தான்.

அவனது மனதின் ஏக்கம் , நினைவுகளாக சுழன்றது. "ஹே பகவான். என்னே எங்கள் துரதிருஷ்டம். இங்கு பஜன்களை வழிநடத்த ஒரு நல்ல பாடகரும் இல்லையே.இந்த பழுதான கேசட் ஒலிப்பானும் மிகப் பழமையானது.அதில் ஒலிக்கும் இசை சப்தம் காதைக் கிழிக்கிறது.ஒரு நல்ல பாடகர் எங்கள் பஜனையை வழி நடத்த வரமாட்டாரா."

பக்தனின் இதய தாபம் பகவானை உருக்காமல் போகுமா. திடீரெனஒரு பெரும் சப்தம் கேட்க, பகவானின் திரு உருவப்படத்தின் அருகிலிருந்த மெழுகு வர்த்தியும், நறுமண ஊதுவத்திகளும் மறைந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத ஐயன் ஸ்ரீ சத்யசாயி பாபா அங்குள்ள நாற்காலியில் வைத்திருந்த திரு உருவப் புகைப்படத்திலிருந்து எழுந்து வந்தார்.

திக்குமுக்காடிய ரிச்மண்ட்க்கு பாத நமஸ்காரம் அளித்த பாபா, பலவித தெய்வீகத் தோற்றங்களை காண்பித்து அங்கு அமர்ந்திருந்த பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். பிறகு "பாட்டும் நானே, பா( bha)வமும் நானே" என்ற நிலையில் உரத்த குரலில் பஜன்கள்பாடி, கைதட்டி, பல இசைக் கருவிகளையும் இசைத்து, அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இப்படி பக்தர்களை  30 நிமிடங்கள் பேரானந்தத்தில் ஆழ்த்திய பிறகு, தமது புகைப்படத்திலேயே கலந்து மறைந்தார்.


Source: Sai journal published by South African devotees

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌻சாய்ராம். உருகும் வெண்ணை போன்றது பெருகும் கருணை சாயி உள்ளம். பக்தர் கண்ணீர் எனும் இளஞ்சூட்டில் அது உருகி, அவர்களைக் காக்க பகவான் விரைந்திடுவார். பக்திக்கும், பா( bha)வத்திற்கும் கட்டுப்பட்டவர் பகவான் பாபா. பக்த பராதீன பாபாவைப் பணிவோம். பாரில் நலம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக