தலைப்பு

வியாழன், 15 செப்டம்பர், 2022

குப்பம் ராதாகிருஷ்ணா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!


மாலூர் அருகில் உள்ள குப்பம்(ஆந்திரா மாநிலம்) என்ற  சிற்றூரை சேர்ந்த திரு.ராதா கிருஷ்ணய்யா மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர், சுவாமியின் தீவிர பக்தர்கள். சுவாமியின் இளம்வயதில், புட்டபர்த்தி சென்று பகவானின் பால லீலைகளையும்  மகிமைகளையும் அற்புதங்களையும்  அருகில் இருந்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள். இவர்களது பேத்தி ஸ்ரீமதி. நீரஜா அவர்கள், இந்த நேர்காணலை ஆரம்பிக்கும்போது, பகவானுக்கு செலுத்துகின்ற புஷ்பாஞ்சலி மிக அழகாக இருக்கிறது.

ஒருமுறை சுவாமி  காரில் சென்னை செல்லும்போது உடன் ராதா கிருஷ்ணய்யாவின் புதல்வர்களும் செல்கின்றனர். காரில் பெட்ரோல் தீர்ந்து விடுகிறது  அருகில் எங்கும் பெட்ரோல் இல்லை. வெகு தொலைவு வண்டியை தள்ள வேண்டி இருக்குமோ என அவர்கள் பயந்த போது, சுவாமி செய்த லீலை என்ன என்பதை அறியவும், மேலும்  ராதா   கிருஷ்ணய்யா, அடிக்கடி வரும் கடுமையான வயிற்று வலியை தாங்க முடியாமல் வீட்டின் பின்புறம் உள்ள பெரிய நீர் நிறைந்த கிணற்றில் குதித்து விடுகிறார். சுவாமி அவரை காப்பாற்றிய லீலையை அறியவும் மேலும்,

ஒருமுறை ராதா கிருஷ்ணய்யா குடும்பத்துடன் புட்டபர்த்தி செல்கிறார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வயிறு வீங்கி விடுகிறது. மிகவும் சிரமப்படுகிறார். திருமதி ராதா பகவானிடம் முறையிடுகிறார். சுவாமி தான் வந்து பார்ப்பதாக கூறுகிறார். ராதா கிருஷ்ணய்யா நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து மூச்சு விட முடியாமல் இறந்து விடுகிறார். டாக்டர் மற்றும் பெரியவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்கின்றனர். பக்தர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அவரது உடலை ஊருக்கு எடுத்துச் சென்று, மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை பார்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். திருமதி. ராதா, சுவாமி வந்து பார்க்காமல் தான் உடலை எடுத்துச் செல்ல மாட்டேன் என்று கூறி மறுத்து விடுகிறார். சுவாமி வந்தபாடில்லை. ஒன்றரை நாள் இவ்வாறு கடந்து விடுகிறது. சுவாமி வந்தாரா ?ராதாகிருஷ்ணய்யா என்ன ஆனார்?என்பதை அறியவும், வாருங்கள் உள்ளே!


மொத்தம் 3 பாகங்கள் 
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம் மார்ச் 2017

1 கருத்து:

  1. சாயி அம்மா நமஸ்காரம். தங்களின் குடும்பத்தார் அனுபவித்த ஸ்வாமி அனுபவங்கள் மெய்சிலிர்க்கவைக்கிறது.ஜெய் சாய்ராம்

    பதிலளிநீக்கு