தலைப்பு

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பௌத்த துறவி மகாபிக்ஷு ஸ்ரீ ஜின்னரகிதா மஹா தேரா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

Mahabhikksu Ashin Jinarakkhita: The Father of Modern Indonesian Buddhism (A great monk who sought to revive and unify Buddhism in the Muslim-majority nation.)

பாபாவை எவ்வாறு இந்தோனேஷியா வாழ் மகாபிக்ஷு துறவி ஒருவர் மாபெரும் இறைவன் என உணர்கிறார்... இந்தோனேஷியா எங்கே? புட்டபர்த்தி எங்கே? எவ்வாறு பாபாவை அவர் அறிகிறார்? உணர்கிறார்.. பாபா அவரிடம் பேசியது என்ன? சுவாரஸ்யமாக இதோ...

இந்தோனேஷியாவின் பௌத்த தலைமை துறவியாக இருக்கிறவர் ஜின்னரகிதா...23 ஜனவரி 1923 முதல் 18 ஏப்ரல் 2002 இவரது ஆயுள் காலம்... புத்தமதம் கடினமான மதமல்ல... அது துறவின் அடிப்படையில் எழுந்த மதம்... எதையும் ஏற்றுக் கொள்ளும் குணமும்.. பாபாவிடம்  சரணாகதி உணர்வும் இருந்தால் அகத்துறவை விட எளிமையான சுகமான வாழ்க்கைமுறை எதுவும் இல்லை! ஜின்னரகிதா எனும் இடத்தில் அவர் தோற்றுவித்த ஒரு பௌத்த மடாலயத்தில் வசிக்கிறார்... அது இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருக்கிறது! பௌத்தம் என்பது அகிம்சையை போதிக்கும் மார்க்கம்.. நிலையாமையை நிதர்சன அனுபவமாய் உணர்த்தும் அவதார புத்தரின் தர்மவழி அது! நல்லதை விதை அப்போதே நல்லதை அறுவடை செய்ய இயலும் எனும் அக விவசாயம் பௌத்த மதம்!


அவர் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரசாந்தி நிலையம் வருகிறார்... காவி புத்தரெனும் பாபாவை தரிசிக்கிறார் அந்த மகா பிக்ஷு... அப்போது பாபா அவரோடு உரையாடுகிறார்... அது புத்தரே போதிமரத்திடம் உரையாடுவது போல் கண்களுக்கு தோன்றுகிறது...! அப்போது பாபா அவரிடம் "ஒவ்வொரு வியாழக்கிழமை சுவாமி உன் ஆசிரமத்தில் இருப்பேன்!" என உறுதி அளிக்கிறார்! அதைக் கேட்டு உருகிப்போகிறார் அந்த மகா பிக்ஷு... அந்த நீள் கருணை இன்னமும் நீண்டு... தங்க சிருஷ்டி திரிபுஜா (Triangle) மற்றும் தங்க புத்தர் விக்ரகத்தை ஸ்ரீ சத்ய சாயி புத்தர் அந்த மகா பிக்ஷுவுக்கு அளித்து மேலும் பரவசப்படுத்துகிறார்! வருடம் ஒருமுறை வரச்சொல்கிறார் பாபா... அப்போது அந்த மகா பிக்ஷு பாபாவிடம் சரணாகதி அடைகிறார்... அவருக்கு அதுவே பாபாவுடைய முதல் ஸ்தூல தரிசனம்! 


பேரா. ஜி.என் மூர்த்தியும், ஸ்ரீ பட்டம் ஸ்ரீ ராமமூர்த்தியும் அந்த மகாபிக்ஷுவை தரிசித்து நேர்காணல் எடுக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்... அப்போது அவரின் வருகைக்கான காரணமும்.. எவ்வாறு எந்த சூழ்நிலையில் அவர் பாபாவை உணர்ந்த அந்த உன்னத நிமிடங்களை கேட்க விருப்ப்படுகின்றனர்... ஆம் அந்த தூய துறவி எனும் கங்கையிடம் கங்கோத்ரியை பற்றிய அன்பு விசாரணை... "இந்தோனேஷியாவில் நான் இருக்கிற போது ஆன்மீகம் சார்ந்த நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன்... அங்கே என்னுடைய சீடர்கள் பலர் பாபாவின் பக்தராக இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது... ஒரு சீடர் ஷிர்டி பாபாவை பற்றிய ஒரு புத்தகம் தந்து வாசிக்கச் சொன்ன போது.. எட்டு வருடம் கடந்து ஷிர்டி பாபா ஆந்திர பிரதேசத்தில் அவதரிப்பார் எனும் திருச்செய்தி அறிந்து  மேலும் ஆச்சர்யப்படுகிறேன்!  அந்த நேரத்தில் எனக்கு மூட்டு வலி (Gout Arthritis) இருந்தது.. எத்தனை மருத்துவர் பார்த்தும் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர அது குறையவே இல்லை... அந்த சூழ்நிலையில் சீடர்களோடு நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது விமான நிலையத்தில் என்னை வரவேற்க பாபா பக்தர்களாக இருந்த எனது வேறு சீடர்களும் வந்திருந்தனர்... அதில் ஒரு சீடர் இது பாபா தனது நேர்காணலில் எனக்கு அளித்த சிருஷ்டி விபூதி.. இதை நெற்றியில் இட்டு... எங்கே வலியோ அங்கே பூசிக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார்! அவ்வாறே நான் செய்த போது... ஒரே ஆச்சர்யம்.. அடுத்த நொடியே வலி நீங்கிவிட்டது... அப்போதே உணர்ந்து கொண்டேன்.. பாபா மனிதர் அல்ல... பேரன்பான இறைவன் என்பதை...! சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த இறைவனே பாபா!" என அந்த மகா பிக்ஷு கண்கலங்கி பகிர்ந்து கொள்கிறார்! 


"....அதிலிருந்து பாபாவை தரிசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்கு பெருகியது... நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்... நிலையான இறைவன் பாபா... உருவமற்றவர் அவர்.. விஷ்வ கல்யாணத்திற்காகவே (உலக நன்மை) அவதரித்தவர் பாபா... பாபாவுக்கு நாம் எப்போதும் நன்றியோடிருக்க வேண்டும்! அவரை தரிசிக்க நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறாரே... எவ்வளவு கருணை அவருக்கு...!" மேலும் அந்த மகா பிக்ஷு கண்கலங்கியபடி பாபாவை நினைந்து கை எடுத்து வணங்குகிறார்!

(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 130) / Author : Jantyala Suman babu / Translation : Pidatala Gopi Krishna |
Source : "Eternal Charioteer -37 Page - Shri Asheen Jinarkaith Article) 

"நிலையானவரும் யாவற்றையும் கடந்தவருமே சாயி... இந்த பெருஞ்சக்திக்கு எல்லையே இல்லை! எல்லையில்லா சக்தியும், எல்லையில்லா ஆனந்தமும் , எல்லையில்லா ஞானமும் எனது கைகளில் இருக்கிறது! உங்களின் மத்தியில் நடக்கிறேன் பாடுகிறேன் என்பதால் உங்களால் எனது பேரியல்பை உணரமுடியவில்லை! எனது தெய்வீக சக்தியே எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது! இந்த எனது சக்தி நிரந்தரமானது.. அகில உலகத்திற்கும் பரவுவது! இதற்கு தடுப்பணையே இல்லை... எனது சக்தி என்றென்றைக்குமானது!" என்கிறார் இறைவன் பாபா! இதனை உணர்ந்ததால் தான் அந்த மகா பிக்ஷு பாபாவிடம் சரணடைகிறார்! 

  பக்தியுடன் 
வைரபாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக