தலைப்பு

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

சங்கிலித் தொடர்போல ஏன் பிறவி எடுக்கிறோம்?

புல்லாகிப் பூண்டாய்... பறவையாய் மிருகமாய்.. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் தாயுமானவர். நம் அனைவருக்கும் தாயுமானவரான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் இதுபற்றி கூறும் அற்புத விளக்கம் என்ன. படித்து தெளிவு பெறுவோம்... 


பிறப்பு, இறப்பு, மறுபடி பிறப்பு என்ற மீளா சுயற்சியின் மூல காரணம் "அறியாமை" என்கிறார் பகவான். 

தான், தனது என்கின்ற சுயப் பற்றே அறியாமையின் ஆணிவேராகும் பற்றுதல் ஆசைக்கும், ஆசை கோபத்திற்கும் காரணமாகின்றன.

கோபம் கண்களை மறைக்க , மனிதன் அறிவழிந்து, அறியாமையில் வாழ்கிறான். இந்த அறியாமைதான் நான், நீ என்கிற வேறுபாட்டை உண்டாக்கிமனிதனை, சுய லாபத்திலும் தீச்செயலிலும் ஈடுபடவைக்கின்றன.

இந்த தீச்செயல்களின் விளைவை மனிதன் இப்பிறவியிலும் மறு பிறவியிலும் அனுபவிக்க நேரிடுகிறது.

ஜென்மம் எடுப்பதே துக்கத்தை அனுபவிக்கததான். இந்த துக்கம் அறியாமையாலும், பொறாமையாலும், தான் தனது என்ற மயக்கத்தினாலும் வருகிறது. இது மோகம் என்ற பற்றினால் வளர்க்கப் படுகிறது.

மனம் என்னும் மாபெரும் சக்தி ஒன்றே, "தளை மற்றும் விடுதலை"யை நிர்ணயிக்கும் அற்புத சக்தியாகும்.

உலகியல் பக்கம் மனதைத் திருப்பினால் நீ தளைக்குள் அகப்பட்டு அடிமை யாகிறாய். மனதை இறைவனிடம் திருப்ப, அது உன்னை விடுதலை என்னும் ராஜபாட்டையில் செலுத்தும் வல்லமை பெறுகிறது.

- Sri SathyaSai August 12, 1982 PrasanthiNilayam

தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌹 வாழ்வதும் வீழ்வதும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும், மோட்சத்திற்கும் நரகத்திற்கும் மனம் என்ற ஒன்றே சாதனமாக விளங்குவதால் , மனதை இறைவனிடம் திருப்புவதே நாம் பிறவிகள் எடுத்து துன்பப்படாமல் மீட்சியை அடையும் மார்க்கம் என பகவான் கூறுதாக நாம் பொருள் கொண்டு, அதன்வழி நடப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக