தலைப்பு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பாபாவை சோதிக்க நினைத்த கார் டிரைவரும் பெட்ரோல் இல்லாமல் பறந்த காரும்!


கார் டிரைவர் ஒருவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான். பொள்ளாச்சிக்காரன். கடவுள் நம்பிக்கை அவனுக்கு கிடையாது. பொள்ளாச்சியிலிருந்து கரூருக்குச் சென்று பாபாவை அழைத்துக் கொண்டு உடுமலைக்குச் செல்லும் பணி அவனுக்க ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாபாவையே சோதிக்க எண்ணம் கொண்டான் அந்த புத்திசாலி. அதனால் பொள்ளாச்சியிலிருந்து கரூர் செல்லும் வரைக்கும் மட்டுமே வண்டிக்கு பெட்ரோல் போட்டான். பாபாதான் என்னென்னம மேஜிக் எல்லாம் செய்பவர் ஆயிற்றே, உடுமலை போகும் வழியில் வண்டி பாதியில் நின்று போகும். பாபா என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று திட்டமிட்டான் அவன்.

சனி, 24 ஆகஸ்ட், 2019

தெய்வீக அருட் பரிசு!


பாபா சீரடியில் இருந்த போது தமது வாழ்நாட்களைக் கழித்த மசூதியில் அணையாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் 'துனி'யிலிருந்து தன் கையாலேயே தெய்வீக அருட் பிரசாதமாக பக்தர்களுக்கு விபூதியை எடுத்துத் தருவார். இப்பொழுது அந்தத் 'துனி' அவருடைய அங்கையிலேயே இருக்கிறது. அது விலைமதிப்பற்ற பரிசை (விபூதி) அருள எப்போதும் தயாராக இருக்கிறது. மனதால் நினைத்து கையை அசைத்த மாத்திரத்திலேயே விபூதி தோன்றிவிடுகிறது. கையை அசைத்து தான் பெற வேண்டும் என்பதில்லை. அவர் நினைத்தாலே அருவியாக கொட்ட தொடங்குகிறது. இறையருள் பிரசாதமாகிய விபூதி மழையே  பாபாவின் மகிமைகளிலெல்லாம் சிறந்த மகிமை... 

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

அஷ்டமி, நவமி பற்றி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா!


வளர்பிறையின் எட்டாவது, ஒன்பதாவது நாட்களாகிய அஷ்டமி, நவமி திதிகளை நல்லவை அல்ல என்று மக்கள் கருதுவது மிகவும் தவறாகும். ஏனெனில் உண்மை இதற்கு நேர் மாறானது. இவ்விரு நாட்களும் இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றிய திரு நாட்களைக் குறிப்பனவாகும். கண்ணன் எட்டாம் நாளாகிய அஷ்டமியிலும், ராமன் ஒன்பதாம் நாளாகிய நவமியிலும் தோன்றினர்.

புதன், 21 ஆகஸ்ட், 2019

✋உண்மையில் குரு என்பவர் யார்?


ஒரு விசிட்டர்: குரு என்பவர் யார்?

பாபா:  குரு என்பவர் வழிகாட்டும் விளக்காகும்; ஆனால் அடைய வேண்டிய இலக்கு இறைவனே. ஒருவன் குருவிடம் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அவன் பூஜிக்க வேண்டியது இறைவனையே. இக்காலத்தில் குருவை பூஜிக்கிறார்கள். இது மிகவும் தவறு.

அருமையில் எளிய அழகே போற்றி



திருவனந்தபுரம் C.S. சுப்ரமணிய அய்யரின் இரண்டாவது மகன், சிவராமகிருஷ்ணன். அவர் எர்ணாகுளத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய பெற்றோர், அந்த சமயம் அவரோடு தங்கியிருந்தனர். ஒரு நாள் சிவராமகிருஷ்ணன் கறிகாய் வாங்கக் கடைத் தெருவிற்குச் சென்றார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது, கையில்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

🐜 கடிக்கும் எறும்பும் கருகுமணியாகும்!


திருவோண நேரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருமணமான பெண்கள், கௌரி பூஜை செய்வார்கள். அப்படி பார்வதி தேவியை வழிபடுவது, கணவனுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று சொல்கின்றன ஹிந்து புராணங்கள். அப்படிப்பட்ட திருவோண நேரத்தில், அதுவும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தம்பதி புட்டபர்த்தி வந்திருந்தார்கள். அவர்கள் கௌரி பூஜையை முடித்தபிறகு, பகவான் பாபாவுக்கு பாத பூஜை செய்ய விரும்பினார்கள். ஸ்வாமியிடம் அனுமதி கோரினார்கள். பாபாவும் ஆமோதித்தார்.

🌦 நல்ல எண்ணம் கொண்டவர்களுடன் பழகுங்கள்!


🙂 வானத்திலிருந்து விழும் மழைத்துளியை நமது கைகளில் நேரடியாக சேகரிக்கும்போது, அது குடிக்க போதுமானதாக இருக்கிறது.

🥺 அதுவே ஒரு சாக்கடையில் விழுந்தால், அதன் மதிப்பு மிகவும் குறைகிறது. கால்களைக் கழுவுவதற்கு கூட பயன்படுத்த முடியாது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கலியுகத்தின் மகிமை!



கலியுகத்தில் அவதரித்த நம் சத்தியசாயியின் மகிமை உலகமெங்கும் பரவி இன்றும் 180 நாடுகளில் சத்யசாயி நிறுவனங்கள் அவரது வழிகாட்டுதலின்படியே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

வெனிசுலா என்னும் கம்யூனிஸ்ட் நாட்டில் நம் சுவாமி மறைந்தவுடன் அந்நாட்டின் அதிபர் நமது குடியரசுத் தலைவருக்கு ஒரு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். வெனிசுலாவில் இயங்கிவரும் சத்யசாயி நிறுவனத்தைச் சார்ந்த சேவாதள தொண்டர்களின் பனி மிகவும் சிறப்பானது .அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வது, நோயாளிகளைப் பார்ப்பது, சுவாமி வீபூதி கொடுப்பது, சுவாமி புகைப்படம் கொடுப்பது, வீட்டிலே சாண்டவிச் செய்து நோயாளிகளுக்கு கொடுப்பது போன்றவற்றை தவறாமல் செய்வது வழக்கம்.

சனி, 17 ஆகஸ்ட், 2019

வாய் வழியே வெளியேறிய வலி!


பாபாவின் அனந்தபூர் பெண்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி திருமதி. தீபா அவர்களின் அனுபவங்கள். 

சாயி பகவானின் அனந்தபூர் பெண்கள் கல்லூரிக்கு நான் விண்ணப்பம் செய்ய நினைத்தேன். அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டேன். அப்போது பாபா சென்னையில் ஆபட்ஸ்பரிக்கு வந்திருந்தார். அவரது தரிசனம் பெறுவதற்காக அங்கே போய் இருந்தோம். வழக்கம்போல பாபா வெளியே வந்து கூட்டத்தினர்  ஏற்படுத்தியுள்ள வழியில் தரிசனம் கொடுத்தவாறு நடந்து சென்றார். என் தாயாரை பார்த்தார். அவள் கையில் உள்ள கவரை பார்த்தவுடன் புன்னகையோடு கையை நீட்டினார்.

கடவுளை நேசித்தல்



சுவாமி மூன்று விஷயங்களை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவை தெய்வப்பிரீதி, பாப பீதி, சங்க நீதி. அதில் தெய்வப்பிரீதியைப் பற்றி விளக்கவும். இதன் உண்மையான பொருள் என்ன?

தெய்வப்பிரீதி என்றால், கடவுளை நேசித்தல் LOVE OF GOD என்று பொருள். வேத கூற்றின் படி, இறைவனின் சங்கல்பம் இல்லாமல் நாம் பிறவியே

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

காயத்ரி மந்திரம் எனும் பாதுகாப்புக் கவசம்!!


மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரமே... காயம் எனும் உடம்புத் திரிக்கு ஞான ஜோதியும்.. காவல் பிரகாசமும் தருகிற காயத்ரி மந்திர உச்சரிப்பால் ஒருவருக்கு நிகழ்ந்த பாபாவின் பாதுகாப்பு மகிமை இதோ...

காப்பான் சாயி! - சத்ய சாயி லீலைகள்


சத்ய சாயி பகவான் கருணையே வடிவானவர். அவருக்கு நம்மைப் போன்று மனதளவில் இருந்து கோபப்பட தெரியாது. அவரின் பொய்க்கோபம்  ஒருவரை திருத்துவதற்காகவே மட்டுமே பயன்படுத்துவார். அதை புரியாத ஒரு அன்பர் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தார். அவருக்கு நேர்ந்த கதையை பார்ப்போம்.

பீமய்யா என்பது அவன் பெயர். பாபாவின் பக்தன், அவனுக்கு ஓர் அண்ணன். சொத்துக்காக அடித்துக் கொண்டார்கள்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

👪 சிறந்த குடும்பம் - பாபாவின் அருளுரை


மார்ச் 1, 2003 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மதிய வேளையில் அன்பிற்குரிய சுவாமி தன் கரத்தை அசைத்து, ஒரு ஸ்வர்ண லிங்கத்தை சிருஷ்டித்தார். பின்னர் மாலை பஜன் வேளையில் அதை விட சற்று சிறிய லிங்கத்தை தன் வயிற்றிலிருந்து வாய் வழியே வெளியிட்டார். அடுத்த நாள் காலையில், சுவாமி ஆற்றிய தெய்வீக உரையில், இறைவன் சிவனின் குடும்பம் வேற்றுமையில் ஒற்றுமையாய்  இருக்கும் தத்துவத்தை விளக்கினார். அனைவரும் சகோதரர்களே, மற்றும் அனைவருக்கும் இறைவனே தந்தை எனும் தத்துவத்தைப் பற்றியும் தன் உரையில் விளக்கமாக கூறினார்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அட்மிஷன் கொடுக்க மறுத்த கல்லூரி முதல்வருக்கு கனவில் டோஸ் கொடுத்த சுவாமி!


அந்த மாணவி, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஓர் இந்துத் தோழி உண்டு. அந்தத் தோழி, சத்ய சாய் பாபாவின் பக்தை. அவளது பக்தியைப் பார்த்து, அந்த மாணவிக்கும் பாபாமேல் இனம் புரியாத மதிப்பு வந்து விட்டது.

அந்த மாணவி, நகரத்தின் பிரபலமான கல்லூரியில் மேல்படிப்புக்காக விண்ணப்பித்திருந்தாள். நேர்காணலில் அவளுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் கல்லூரி முதல்வி மறுத்துவிட்டார். மாணவி நொந்து போனாள். தன் எதிர்காலமே கருகிவிட்டதாகக் கலங்கி போனாள். பாபாவைத் தீவிரமாகப் பிரார்த்தித்தாள்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சத்திய சாயியின் தூதுவர்கள் (மெசஞ்சர்ஸ் ஆப் சத்யசாய்)


ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் whitefieldல் இருந்தேன். ( ஒயிட்பீல்டு பெங்களூர் அருகே உள்ளது). "மெசஞ்சர்ஸ் ஆப் சத்ய சாய் " அமைப்பின் தலைவர் உலகின் பல்வேறு பகுதிகளில் சேவை நடவடிக்கைகள், அவ்வமைப்பினரால் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கினார். அவர்கள் உண்மையான மனிதாபிமான சேவை செய்கிறார்கள். அன்பிற்குரிய சுவாமி தன்னுடைய அருளுரையில் அவர்களைப் பாராட்டினார்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

கை நிறைய ரேகை; பை நிறைய செல்வம்!


ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையில் பகவான் நிகழ்த்திய அற்புதம். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த வைசியர் அவர். ரொம்ப நல்லவர். சாய் பக்தர். ஆனால் அவருக்கு ஆரம்பம் முதலே பணக் கஷ்டம் இருந்தது.
என்ன தொழில் செய்தாலும் எல்லாமே லாஸ்தான். நொந்து போனார். துவண்டு போனார்.

வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. பேசாமல் தற்கொலை செய்து கொண்டுவிடலாம் என்ற முடிவும் வந்தார்.
அதற்கு முன்னால் ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடலாம் என்று, ஹைதராபாத்திலேயே சிறந்த, கைரேகை சாஸ்திர நிபுணரைப் போய்ப் பார்த்தார்.

சனி, 10 ஆகஸ்ட், 2019

வானில் சில தேவதைகள்!


ஷீர்டி சாயிபாபாவின் மிகச் சிறந்த பக்தை கலி சாரதா தேவி. அவர் ஒரு யோகினி. ஷீர்டி பாபா வாழ்ந்த காலத்தில், அவருக்குப் பல வருடங்கள் பணிவிடை செய்து, அந்த மாண்புமிகு தெய்வீகத்தை நேரடியாக கண்ட பாக்கியசாலி.

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

🚔 போலீஸ்காரர் ரூபத்தில் சோதிக்க வந்த சாயி பகவான்!


வெற்றியிலும் தோல்வியிலும் லாபத்திலும் நஷ்டத்திலும் இன்பத்திலும் துன்பத்திலும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியாக இருங்கள். உங்கள் மனதை அதற்கேற்ப ஜாக்கிரதையாகப் பழக்குங்கள். ஆனந்தத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி இதுதான்!

- ஸ்ரீ சத்ய சாய் பாபா 

புது தில்லியைச் சேர்ந்த ஆட்டோ காரர் திரு அசோக்குமார் அவர்களின் சாய் அனுபவங்கள்...

புதன், 7 ஆகஸ்ட், 2019

தூய்மையும், அன்பும் நிறைந்திடுங்கள்!


தூய்மையும், அன்பும் நிறைந்திடுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு வரும் திடமான, உறுதியான, நேர்மையானவர்களாக வளர்வதை நான் விரும்புகிறேன்.

உங்கள் கண்கள் தீய காட்சிகளைக் காண தேடக் கூடாது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

🚗 காணாமல் போன கார்! | சத்ய சாயி லீலைகள்


1981 மார்ச்சில் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் மார்ட்டின் நியூ பரி என்பவர் ஒரு சாயி பக்தர். அவர் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அதன் விலை 5000 டாலர்கள். ஏர்கண்டிஷன் பண்ணிய கார் அது. ஸ்டீரியோ ஒலிபெருக்கியும் இருந்தது. காரை வாங்கிய மறுநாளே அவர் அதை வெளியே ஓட்டி சென்றார். தமது அலுவலகத்திற்கு அவர் செல்லவேண்டும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

நான் ஒரு சிலரை தண்டிப்பது உண்மைதான் - பாபா

பக்தர் கேட்டவை பாபா அருளியவை -5

பேரிறைவன் பாபாவிடம் ஜான் ஹிஸ்லாப் கேட்ட கேள்விகளுக்கு பாபா அளித்த பதில்கள் யாவும் ஆன்மீகத்திற்கான விழிகாட்டி , ஆன்மாவுக்கான வழிகாட்டி , ஆனந்தத்திற்கான விரல் நீட்டி அழைத்துச் செல்லும் பிரேமாகம நாள்காட்டி, அத்தகைய பெயர் போன பொக்கிஷ பதில்கள் இதோ...!

சனி, 3 ஆகஸ்ட், 2019

புனிதம் நிறைந்த இருப்பிடமான பிரசாந்தி நிலையத்திலிருந்து சுவாமி கூறுகிறாா்:


நீங்கள் புட்டபா்த்திக்கு வந்து  படங்களை பெற்று அதனை பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்கிறீா்கள். ஒவ்வொருநாளும் அதனை வழிபட ஆரம்பிக்றீா்கள் அல்லது ஒவ்வொரு வியாழன் தோறும். ஆனால் இவையாவும் எளிதான சத்கா்மா எனப்படும் நல்ல செயல்கள் ஆகும். இவையெல்லாம் உங்களை வெகு தூரத்திற்கு இட்டு செல்லாது. சத்குணங்களான "நல்லொழுக்கம், நற்பழக்கம், நல்ல மனோபாவம், நல்ல அம்சங்களுடன் கூடிய சிறப்பியல்பு மற்றும் நல்ல குணம்" ஆகியவற்றை நீங்கள் அவசியம் விருத்தி செய்தல் வேண்டும். இல்லாவிடில் உங்களது வாழ்வினில் சங்கிலி தொடா்போன்று கூட்டல்  குறியின் வெளிப்பாடான உபரி, கழித்தல் குறியின் வெளிப்பாடான குறைவு இவைகளில் ஒன்று ரத்து செய்யப்பட்டும் மற்றவை வெளியே செல்வதுமாக இருந்து மொத்தத்தில் வெறும் பூஜ்யநிலையாக ஆகிவிடும்.

- பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, 06.01.2001,  பிரசாந்தி நிலையம். 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சாய் பாபாவும் 17 திருடர்களும்!


பாபா இளைஞராக இருந்த காலம் அது... 

ஒரு நாள் மாலை, விடுவிடுவென்று நடக்கத் துவங்கினார் பாபா. வழக்கமாய் சித்ராவதி நதி வரை போவார். பக்தர்களும் கூட வருவார்கள். அவர்கள் கேட்கும் பொருட்களை சித்திராவதி ஆற்று மணலில் கைவிட்டு கிளறி எடுத்துக் கொடுப்பார். அது கனியாக இருக்கும். தின்பண்டமாக இருக்கும். சிலைகளாகவும் இருக்கும். பக்தர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள். ஆனால் அன்றைக்கு யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வேகவேகமாக சித்ராவதி நதியையும் கடந்து நடந்தார். அவருடைய நடை, தொலைவில் இருந்த குன்றை நோக்கி இருந்தது.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கிருபானந்த வாரியார் சுவாமிகள்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்:

எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமானின் எம்பெருமான் சத்ய சாயி சர்வேஷ்வரனின் தனிப்பெருங்கருணையினாலே ஆட்கொள்ளப்பட்ட மகானான அடியார் யார்?

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன். என் அருள் உனக்கு எப்போதும் உண்டு!’’


தஞ்சாவூரில் இருந்து ஓர் அம்மையார் சென்னையில் குடியிருக்க வந்தார். அவருடைய அன்னையார் நெடுநாட்களாகச் சுவாமியை வழிபடுபவர். மகளுக்கும் சுவாமியைப் பற்றிப் பலபல கூறியிருக்கிறார். மகளும் ஓரளவு சுவாமி பக்தைதான். எனினும் அவர் சுவாமியை அதுவரை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவர் சுவாமியிடம் அத்துணை ஈடுபாடு கொள்ளாதிருந்தார்.