🙂 வானத்திலிருந்து விழும் மழைத்துளியை நமது கைகளில் நேரடியாக சேகரிக்கும்போது, அது குடிக்க போதுமானதாக இருக்கிறது.
🥺 அதுவே ஒரு சாக்கடையில் விழுந்தால், அதன் மதிப்பு மிகவும் குறைகிறது. கால்களைக் கழுவுவதற்கு கூட பயன்படுத்த முடியாது.
🤩 அதுவே சிப்பி மீது விழுந்தால், அது ஒரு முத்துவாக மாறி, பிரகாசமாக பிரகாசிக்கிறது.
துளி ஒன்றுதான், ஆனால் அதன் இருப்பு மற்றும் மதிப்பு. அது யாருடன் இணைகிறது என்பதைப் பொறுத்து மாறுகிறது. நல்ல எண்ணம் கொண்டவர்களுடன் பழகுங்கள். அப்பொழுது தான் உங்களை மேலும் மேன்மை அடைய அது உதவியாக இருக்கும். அதைவிட்டுவிட்டு பணத்திற்காகவும் சுகத்திற்காகவும் தீயவர்களுடன் பழகினால் தீங்குதான் நேரிடும். ஆரம்பத்தில் பார்ப்பதற்கு நன்றாக தான் தெரியும் பின்பு அது உங்களை மெல்ல மெல்ல பதம் பார்த்து அழித்துவிடும். ஜாக்கிரதையாக சிந்தித்து பழகுங்கள்.
- பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
18 ஏப்ரல், 1972
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக