சுவாமி
மூன்று விஷயங்களை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அவை தெய்வப்பிரீதி, பாப பீதி, சங்க
நீதி. அதில் தெய்வப்பிரீதியைப் பற்றி விளக்கவும்.
இதன் உண்மையான பொருள் என்ன?
தெய்வப்பிரீதி
என்றால், கடவுளை நேசித்தல் LOVE OF GOD என்று பொருள். வேத கூற்றின் படி, இறைவனின் சங்கல்பம் இல்லாமல்
நாம் பிறவியே
எடுத்திருக்க முடியாது. இன்பமோ, துன்பமோ அவரின் விருப்பப்படியே நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் அவரிடம் பக்தியுடன் இருந்தால், நம் தலையெழுத்தையே அவரால் மாற்றி அமைக்க முடியும் தெய்வப்பிரீதி என்பதை Devotion என்றும் சொல்லலாம். எவன் ஒருவன் இறைவனின் திருவுருவத்தை மிகவும் நேசித்து, இதயத்தில் தூய அன்புடன், எப்பொழுதும் நிலைத்திருக்கிறானோ அவனே உண்மையான பக்தன். தெய்வப்பிரீதி என்பது நீ கடவுளை மிகவும் நேசித்து, அவரை உன்னுள்ளேயே அனுபவிப்பது. அப்படி அனுபவித்தால் (BLISSFUL) நீ எப்பொழுதுமே ஆனந்தத்தில் இருப்பாய் இதுதான் கடவுளை நேசித்தல் LOVE OF GOD

இப்ரஹீம் தன் மகன்
இஸ்மாயிலை பலி கொடுக்கத் துணிந்ததற்கும், தெய்வத்தின் மேலுள்ள அன்புதான் காரணம். இங்கு ஒரு கேள்வி நமக்கு தோன்றும். மகன் மேல் அன்பு
அதிகமா ? அல்லது இறைவன் மீது அன்பு அதிகமா? இப்ரஹீமுக்கு இறைவன் மீதுதான் மிகுந்த அன்பு
இருந்தது. தந்தையின் ஆசைக்கு இணங்க மகனும் ஒப்புக்கொண்டார். இஸ்மாயிலை பலி கொடுக்கும்போது
, கத்தியே மாலையாக மாறியது. இந்த நாளையே ‘பக்ரீத்’ என்று இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.இறைவன்
அவர்முன் தோன்றி, ''உன்னை சோதிக்கவே இவ்வாறு கேட்டேன்! இந்த சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய்.
உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்?'' என்றார். அதற்கு இப்ராஹிம் ''உங்களுடைய விருப்பமே
என் விருப்பம்'' என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த
இறைவன், ‘’உன் சிறிய வயதிலிருந்தே நீ சமுதாயச் சேவைக்கு உன்னை அர்ப்பணித்து, எந்தவித
பிரதிபலனும் எதிர்பாராமல் செய்துகொண்டு இருக்கிறாய். இப்பொழுது உன் மகனையும் கூட எனக்காக
இழக்கத் தயராக இருந்தாய். உனது மூத்த மகன் இஸ்மாயில் மற்றும் இரண்டாவது மகன் ஐசக் ஆகிய
இருவரது வம்சத்திலும் என்னுடைய அம்சம் பிறப்பார்கள்'' என்று வரமளித்தார்.
இப்படியாக, இஸ்மாயிலின்
வம்சத்தில் தோன்றியவர் முகமது நபி, ஐசக்கின் வம்சத்தில் தோன்றியவர் ஏசு கிறிஸ்து. இதிலிருந்து
நாம் தெரிந்துக்கொள்வது என்னவெனில், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தியாக மனப்பான்மையோடு,
அன்புடன் சேவைச் செய்தால், இறைவனைத் தவிர, வேறு உற்றார், உறவினர் மற்ற உலகியலான விஷயங்களின்
மேல் பற்றில்லாமல் இருந்தால், தெய்வத்தின் மீது மட்டும் பற்றை வளர்த்துக் கொண்டால்,
நம்முடைய வம்சத்திலும், நம் ஸ்வாமியின் அம்சம் அவதரிக்க கூடுமல்லவா? உலகத்தில் எத்தனையோ
பொருட்கள் இருந்தாலும், அனைத்திலும் உயர்ந்தது 'தெய்வம்'. ஏனென்றால் அனைத்தையும் தோற்றுவித்தது
தெய்வம்தான். அதனால் தெய்வத்தின்
மீது தான் அன்பு இருக்க வேண்டுமேயன்றி உலகத்திலுள்ள அழியக்கூடிய பொருட்களின் மீது இருப்பதற்குப்
பெயர் 'பற்று' அழியாதவர் இறைவன் மட்டும்தான். அழியாத பொருளின் மேல் ப்ரீதியுடன் இருக்க
வேண்டியது நமது கடமையாகும். அதற்காகத்தான் இறைவன் இந்த மனித உடலை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
அதாவது TO LOVE GOD.
ஆதாரம் : புத்தகம்
- ஸ்ரீ சத்ய சாய் பாதையில் ஞானத்தேடலும் திருவருளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக