தலைப்பு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

நான் ஒரு சிலரை தண்டிப்பது உண்மைதான் - பாபா

பக்தர் கேட்டவை பாபா அருளியவை -5

ஹிஸ்லாப்:  தாங்கள் சுவாமியால் தண்டிக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா?

பாபா:  ஆம். அது சரியே. குற்றம் செய்ததற்காக ஒருவனைத் தண்டிக்கும் பொழுது, சுவாமி அந்த குறை உள்ளவனை திருத்த வேண்டி தண்டிக்கிறார்.
பார்வைக்கும்,குரலாலும் கடுமை உள்ளவராக தோன்றினாலும், பாபா வின் உள் எங்கும் அன்பு மயமே. சில சமயம் ஒருவனை சுவாமி தனிமையில் திருத்துகிறார். மற்றும் சில சமயங்களில் எல்லார் முன்னிலையிலும்  இதை செய்கிறார். அது அந்த மனிதனை பொறுத்து இருக்கிறது. குறையை நீக்குவது எல்லார் முன்பும் இருந்தால் அதைக் கேட்பவர்கள் எல்லோரும் சுவாமிக்கு ப்ரீதியானது எதுவென்றும், எது அவருக்கு பிடிக்காது என்றும் தெரிந்து கொள்வார்கள். வெண்ணையை விரல்களால் துண்டிக்கலாம், ஆனால் ஒரு கருங்கல்லுக்கு இரும்பினாலான சுத்தியே தேவைப்படுகிறது. அது அந்த மனிதனை, பொருளின் தன்மையை பொறுத்து இருக்கிறது.
அவருடைய விதிகளிலும், அடிப்படைக் குறிக்கோள் களிலும், சுவாமி மிகவும் கண்டிப்பானவர். ஒரு அவதார புருஷன் இவற்றில் விட்டுக்கொடுப்பதில்லை. பக்தனுக்கு கண்டிப்பு என்பது முடிவான மிக சிறந்த தயையாகும் .ஒவ்வொரு நிலைமையை பொறுத்தும், சுவாமி மென்மையாகவோ,தயாளுவாகவோ, அல்லது ஒரு வைரத்தை போல் கடினமானவராகவோ இருக்கலாம். அவர் ஒரு சந்தர்ப்பம் மட்டுமே கொடுப்பது இல்லை. அவர் ஓராயிரம் தடவை மன்னிக்கிறார். ஆனால் அந்த மனிதர்கள் கவனம் செலுத்தாவிடில் அவர்களிடம் வேண்டாததை கத்தரிக்கிறார்.

ஹிஸ்லாப்: ஆம் சுவாமி. சுவாமியின் அருகே இருக்கும் மக்கள், பக்தர்கள் தங்கள் நடவடிக்கைகளில் மாசற்று இருக்க முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

பாபா:  வெளிப்பார்வைக்கு சுவாமியிடம் இருந்து 'தூரத்தில்' இருப்பவர்களுக்கு அவர் சொல்கிறார். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு சொல்வது போல் அவ்வளவு கடுமையாக அல்ல. சுவாமியின் 'அருகே' இருக்கும் பக்தர்களை கொண்டு மக்கள் சுவாமியை பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் இந்த நபர்கள் மிகவும் கடுமையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியம். 'தண்டனை' வழங்குவது என்பது அவர்களின் குற்றத்தின் இயல்பையும் அளவையும் பொறுத்து அமைகிறது.

ஆதாரம்: 'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக