தலைப்பு

புதன், 21 ஆகஸ்ட், 2019

அருமையில் எளிய அழகே போற்றி



திருவனந்தபுரம் C.S. சுப்ரமணிய அய்யரின் இரண்டாவது மகன், சிவராமகிருஷ்ணன். அவர் எர்ணாகுளத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய பெற்றோர், அந்த சமயம் அவரோடு தங்கியிருந்தனர். ஒரு நாள் சிவராமகிருஷ்ணன் கறிகாய் வாங்கக் கடைத் தெருவிற்குச் சென்றார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது, கையில்
கட்டியிருந்த கைக் கெடிகாரத்தைக் காணாது திடுக்குற்றார். கடைத் தெருவில் எங்கு விழுந்ததோ தெரியவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் மீளவும் சென்று தேடிப் பார்த்தார். கெடிகாரம் கிடைக்கவே இல்லை. மிகவும் விலையுயர்ந்த நல்ல கெடிகாரம் அது. அது தொலைந்து விட்டது. அவருக்கு மிக்க வேதனையைத் தந்தது கனத்த மனதுடன் வீட்டை அடைந்தார்.

அப்போது, சுவாமி கடிதங்கள் மூலமாகவே, அவர்களுக்கு அனைத்தையும் உணர்த்தி வருவது வழக்கம். அதேபோல, வருத்தத் தோடு வீடு திரும்பிய சிவராமக்ரிஷ்ணனின் கண்களில் மேஜை மேல் இருந்த கடிதம் தென்பட்டது. சுவாமியின் கருணை சுரக்கும் கடிதம் தான் அது! அதில் ''ஓம்! பக்த! வருந்தாதே! வாட்ச் நான் தருவேன்! சாந்தியாயிரு ஸா'' என்று எழுதியிருந்தது. ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும், ''ஸாயிராம்'' என்று கையொப்பமிட்டு இருப்பர் சுவாமி!

இந்தக் கடிதத்தின் இறுதியில் கையொப்பம் இராமல், 'ஸா' என்று ஓர் எழுத்து மட்டும் இருக்கவே, சற்று திகைத்தார், சிவராமகிருஷ்ணன். மேலும் கெடிகாரம் தொலைந்தது தன்னை தவிர வேறு யாருக்குமே தெரியாத நிலையில், சுமார் 600 மைல்களுக்கு அப்பால் இருக்கும் இறைவன் ஒரு நொடியில் அறிந்து ஆறுதல் கடிதம் அனுப்பியுள்ளாரே என்று நெஞ்சம் நெகிழ்ந்து போனார், அவர்.

இறைவனின் செயல்கள் அனைத்திற்குமே ஒரு விளக்கம் இருக்குமல்லவா? கடிதத்தை முழுவதாக முடிக்காமல் கையொப்ப மிடத் துவங்கிவிட்ட சுவாமி, அதையும் முடிக்காமலேயே அனுப்பி விட்டார் போலும். மேலும் பக்தனுக்கு உடனடியாக ஆறுதல்தானே தேவை? அதனால் ஆறுதல் கடிதம் ஒன்றை முதலாவதாக அனுப்பிவிட்டார்.

பிறகு 5 நிமிடத்திற்கெல்லாம், பூஜை அறையில் மற்றொரு கடிதம் இருந்தது. அதில். ''ஓம் ஸாயிராம்! தாயின் பெட்டி பூட்டி வைத்திருக்கா, அதில் உனக்கு, வாச்சுக்கு ரூபா வைத்திருக்கேன். கவலைப்படாதே! ஸாயிராம்!’’ என்று முழுமையாகவும், விரிவாகவும், எழுதிக் கையொப்பமும் முழுமையாக ‘ஸாயிராம்’ என்று ஒப்பிட்டு அனுப்பி இருந்தார் சுவாமி! அதன் பிறகு, திருவனந்தபுரம் சென்றபோது, அன்னையாரின் இரும்புப் பெட்டியில். சுவாமி படம் ஒன்றும், அதன் மேல் ரூ 200/-வும் இருந்தன.

அருமையிலும் அருமையான எம்பிரான், எளிய பக்தனுக்கு இரங்கும் எளியவராக வந்த அழகினை நினைத்து நினைத்துப் ''போற்றி''னார், சிவராமகிருஷ்ணன்.


ஆதாரம் : புத்தகம்  -  மாணிக்கம்

 சாய்ராம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக