தலைப்பு

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

👪 சிறந்த குடும்பம் - பாபாவின் அருளுரை


மார்ச் 1, 2003 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மதிய வேளையில் அன்பிற்குரிய சுவாமி தன் கரத்தை அசைத்து, ஒரு ஸ்வர்ண லிங்கத்தை சிருஷ்டித்தார். பின்னர் மாலை பஜன் வேளையில் அதை விட சற்று சிறிய லிங்கத்தை தன் வயிற்றிலிருந்து வாய் வழியே வெளியிட்டார். அடுத்த நாள் காலையில், சுவாமி ஆற்றிய தெய்வீக உரையில், இறைவன் சிவனின் குடும்பம் வேற்றுமையில் ஒற்றுமையாய்  இருக்கும் தத்துவத்தை விளக்கினார். அனைவரும் சகோதரர்களே, மற்றும் அனைவருக்கும் இறைவனே தந்தை எனும் தத்துவத்தைப் பற்றியும் தன் உரையில் விளக்கமாக கூறினார்.


பாபாவின் அருளுரை:

"புராணங்களின்படி சிவனுக்கு புதுமையான வித்தியாசமான குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்கிறார்கள். எவ்வித கொந்தளிப்பும் இன்றி அந்த தெய்வீக குடும்பம் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்கிறது. சிவனுடைய கரங்களில், கழுத்தில், தலையில், மற்றும் இடுப்பை சுற்றியும் அரவங்கள் இருக்கின்றன. சிவனின் மகனான சுப்பிரமணியருக்கு, அரவங்களைத் தாக்கும் மயிலே வாகனமாக இருக்கிறது. சிவனின் மற்றொரு மகனான கணேசருக்கு, அரவங்களால் உண்ணப்படும் எலியே வாகனமாக இருக்கிறது. கணேசருக்கு யானை போன்ற முகம் இருக்கிறது. யானையானது சிங்கத்தின் இரையாகும். சிங்கமோ துர்காவின் வாகனமாக திகழ்கிறது. சிவனின் துணைவியாக, பிரிக்கமுடியாத, சிவனின் இடப்பாகமாக துர்கா திகழ்கிறார். இறைவனுடைய வாகனமான காளை எவ்விதத்திலும் சிங்கத்திற்கு நண்பனும் இல்லை. சிவனின் புருவமத்தியில், நெருப்பு இருக்கிறது. ஆனால் அவரது தலையில் இருந்து நீர்(கங்கை நீர்) பாய்கிறது. நீர், நெருப்பு ஆகிய இவ்விரு துருவங்களும் அருகருகே அமைந்துள்ளன. கைலாய மலையில் வாழ்க்கையை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடத்த, மேற்சொன்ன அம்சங்கள் எந்த அளவுக்கு அன்பாகவும், ஒற்றுமையாகவும், செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.


அது நமது மனதையும், ஒழுக்கத்தையும் சார்ந்து இருக்கிறது. அன்பு என்னும் ஆயுதம் மற்ற ஆயுதங்களை செயலிழக்க செய்துவிடும். அன்பு அன்பையே வரவழைக்கும். அன்பு காட்டினால், அவ்வன்பே எதிரொலிக்கும். அன்பு செய்தால் அன்பே எதிர்வினையாக அமையும். அன்பு என்று உரக்க கூறினால், அது மற்றவருடைய இதயத்திலிருந்து அன்பு என்று சத்தமாக எதிரொலிக்கும்!


தர்மத்தின் பாதையில் நீதி நெறியின் படி நட. இதையே அனைவரும் போற்றுவார்கள். மனதின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, அதை நன்னெறியில் செலுத்துவதே தர்மம். உனக்கு பேராசையும் வெறுப்பும் இல்லையென்றால் உனக்கு நல்ல தூக்கம் வரும் .தூக்க மாத்திரைகளை விழுங்க வேண்டிய அவசியமில்லை. இப்போதெல்லாம் வாழ்க்கை செயற்கையாக மாறிவிட்டது.( செயற்கை (ஆர்ட்டிஃபிஷியல்) வாழ்க்கையில்" Art "ம் (வாழும் கலை) இல்லை. (heart) ம் ( இதயமும்) இல்லை. வாழ்க்கை வெறும் fishal (மீன்) வகையானதாக மாறிவிட்டது. அதாவது மீன் தண்ணீரிலேயே வாழ்ந்தாலும் கூட துர்நாற்றம் அடிக்கிறது அல்லவா அதை போல!

காலை எழுந்தவுடன் இறைவனின் புகழைப் பாடு( நகர சங்கீர்த்தனம்). இறைவன் இல்லை என்றால் வேறு என்ன இருக்க முடியும்? ஒவ்வொரு நாளையும் இந்த அகத்தூண்டுதல் துணையோடு மகிழ்ச்சியாய் வாழ்க்கை நடத்து!  அன்பாய் ஒற்றுமையாய் வாழ்க்கை நடத்தி வருக! அமைதியாய் வாழ்ந்து வருக! சேவை செய்து கொண்டு வருக! இந்த மேன்மையான முயற்சியில் நீங்கள் வெற்றிபெற ஆசீர்வதிக்கிறேன்!"

ஆதாரம் : ஸாயி ஸ்மரண் - மருத்துவர் தி.ஜ.காடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக