தலைப்பு

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பாபாவை சோதிக்க நினைத்த கார் டிரைவரும் பெட்ரோல் இல்லாமல் பறந்த காரும்!


கார் டிரைவர் ஒருவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான். பொள்ளாச்சிக்காரன். கடவுள் நம்பிக்கை அவனுக்கு கிடையாது. பொள்ளாச்சியிலிருந்து கரூருக்குச் சென்று பாபாவை அழைத்துக் கொண்டு உடுமலைக்குச் செல்லும் பணி அவனுக்க ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாபாவையே சோதிக்க எண்ணம் கொண்டான் அந்த புத்திசாலி. அதனால் பொள்ளாச்சியிலிருந்து கரூர் செல்லும் வரைக்கும் மட்டுமே வண்டிக்கு பெட்ரோல் போட்டான். பாபாதான் என்னென்னம மேஜிக் எல்லாம் செய்பவர் ஆயிற்றே, உடுமலை போகும் வழியில் வண்டி பாதியில் நின்று போகும். பாபா என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று திட்டமிட்டான் அவன்.

கரூரிலிருந்து புறப்படும்போதே வண்டி பெட்ரோல் இல்லாமல் உறுமத்துவங்கியது. ஆட்டம் காட்டி நின்றது. பாபா புன்னகைத்தபடியே, 'சீக்கிரம் போ’ என்றார். கார் உடனே புறப்பட்டது.

வண்டியில் அடியில் கொஞ்சம் பெட்ரோல் இருந்ததாலேயே கிளம்பியது என்று தோன்றிற்று டிரைவருக்கு. பகுத்தறிவு!

பெரும்பள்ளம் பெட்ரோல் பங்க் அருகே வண்டி சென்றபோது, பாபா,' பெட்ரோல் எல்லாம் போட வேண்டாம். வண்டி போகட்டும்’ என்றார். டிரைவருக்கு வியர்த்துப் போயிற்று. பாபா தன் திட்டத்தைக் கண்டு பிடித்துவிட்டார் என்பது புரிந்து போயிற்று.

வண்டிப் போய்க் கொண்டேயிருந்தது எந்த தடங்கலும் இல்லாமல். பெட்ரோல் மீட்டரைப் பார்த்தான், டிரைவர். அத தானாக கீழே இருந்து மேலே உயர்வது அவனுக்கு தெரிந்தது. சர்ரென ஃபுல் டேங்க இருப்பது போல் அது காட்டவே ஒன்றும் புரியாமல் கொஞ்சம் திகிலுடன் வண்டியை ஓட்டினான்.
வண்டி பறந்தது. உடுமலை பக்தர் வீட்டில் பாபாவை இறக்கிவிட்ட பிறகு, பெட்ரோல் மீட்டரைப் பார்த்த டிரைவர் அரண்டு போனான். இப்போது 'எம்ட்டி’ காட்டியது முள். பாபா வீட்டுக்குள் சென்றதும், வண்டியை ஷெட்டில் வைக்க டிரைவர் முயன்றபோது வண்டி நகரவே இல்லை. இஞ்சின் கிளம்பவே இல்லை. பெட்ரோல் இருந்தால்தானே கிளம்ப?

அப்புறம் என்ன?
பெட்ரோல் பங்க்கும் அருகில் இல்லை. பல மைல் தொலைவில் அது இருந்தது. பாபா மேல் சந்தேகப்பட்ட தன்னைத்தானே நொந்து கொண்டு, கையில் கேனுடன் பெட்ரோல் தேடி புலம்பியபடியே நடக்கத் துவங்கினான், டிரைவர். பாபா உள்ளே புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

ஆதாரம்: SRI SATHYA SAI DIGVIJAYAM - PART 1 (1926 – 1985)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக