கலியுகத்தில் அவதரித்த நம் சத்தியசாயியின் மகிமை உலகமெங்கும் பரவி இன்றும் 180 நாடுகளில் சத்யசாயி
நிறுவனங்கள் அவரது வழிகாட்டுதலின்படியே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வெனிசுலா என்னும் கம்யூனிஸ்ட் நாட்டில் நம் சுவாமி மறைந்தவுடன் அந்நாட்டின்
அதிபர் நமது குடியரசுத் தலைவருக்கு ஒரு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
வெனிசுலாவில் இயங்கிவரும் சத்யசாயி நிறுவனத்தைச் சார்ந்த சேவாதள தொண்டர்களின் பனி
மிகவும் சிறப்பானது .அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வது, நோயாளிகளைப் பார்ப்பது, சுவாமி வீபூதி
கொடுப்பது, சுவாமி புகைப்படம் கொடுப்பது, வீட்டிலே சாண்டவிச் செய்து நோயாளிகளுக்கு கொடுப்பது போன்றவற்றை தவறாமல்
செய்வது வழக்கம்.
அம்மருத்துவமனையில் ஒரு அறையில் இருந்த நோயாளிக்கு மட்டும் காவல் காரர்கள் இருந்தனர்.
அவர்கள், இத்தொண்டர்களை உள்ளே சென்று சேவைச் செய்ய அனுமதிக்கவில்லை; அங்கிருந்த
செவிலியர்கள் (NURSE) ''இவர்கள் சாயி நிறுவனத்
தொண்டர்கள்; இவர்களால் எந்த ஆபத்தும் இருக்காது'' என்றும் கூறினார்கள்.
சாயி நிறுவனத் தொண்டர்கள், அந்த நோயாளியின்
அறைக்குச் சென்று 'சாய்ராம்' என்றனர். அவருக்கு புரியவில்லை, அவர் வெனிசுலாகாரர்
இல்லையா? அவருக்கு சாயி புகைப்படத்தைக் கொடுத்து, பூரணகுணமாகிவிடும் என்று ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நோயாளியுடைய நோயைப்பற்றி
எதுவுமே தெரியாது. '' நீங்கள் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும்
வருவீர்களா? '' என்று நோயாளி கேட்க, ''ஆமாம் வருவோம்'' என்றனர் சாயி தொண்டர்கள். அடுத்த ஞாயிறன்று வருவீர்களா? என்று நோயாளி கேட்டார். அவர்கள், ''நீங்கள் அதற்குள்
வீட்டிற்குச் சென்று விடுவீர்கள்'' என்றனர்.
நோயாளிக்கு ஆச்சரியமாயிற்று. ''என்னடா இது? என்னுடைய உடல்நிலையைப்
பற்றியே இவர்களுக்குத் தெரியாது. எதற்காக மருத்துவமனையில் அனுமதித்து
இருக்கிறார்கள் என்றும் தெரியாது. அடுத்த வாரம் வீட்டிற்குச் சென்று விடுவேன் என்கிறார்களே, என்ன இது? '' என நினைத்தார். சொன்ன
மாதிரியே புதன்கிழமை அவரை டிஸ்சார்ஜ் செய்து அவரை இல்லம் அனுப்பினர். நோயாளிக்கோ ''வந்தவர்கள் யார்? அரசாங்கத்துக்கு
எதிரானவர்களா? தீவிரவாதிகளா?
எனச் சந்தேகம் எழ, அவர்களை C.I.D. வைத்துக் கண்டுபிடித்து இவர்கள் எல்லாம் சத்ய சாயி நிறுவனத்தினர், மக்களுக்கு சேவை
செய்யவே வந்திருக்கிறார்கள்'' என்பதையறிந்தார். அந்த நோயாளி யார் என்றால் வெனிசுலா
அரசாங்கத்தின் ஒரு முக்கிய மந்திரி.
பிறகு அந்த மந்திரி, நாட்டின் அதிபரிடம் சொல்லி அதன் பின் சத்ய சாயி நிறுவன உறுப்பினர்களை அழைத்து, ''நீங்கள் என்ன
செய்கிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் சுவாமியின் மகிமையைப் பற்றியும், அவருடைய விழுக்கல்வியைப்
பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். அந்த அதிபர், உடனே ''எங்கள் அரசாங்கத்தின்
கல்வித் திட்டமாக இதை வைத்துக்கொள்கிறோம்'' என்று சொல்லிவிட்டார்.
வெனிசுலா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. அந்த நாட்டில், நம் சுவாமி நமக்காக
ஏற்பாடு செய்துள்ள விழுக்கல்வி முறையின் சிறப்பினைக்கண்டு, இதனை வெனிசுலா அரசாங்கத்தின்
கல்வித் திட்டமாக அந்நாட்டில் ஏற்றுக்கொண்டனர். இதுவே கலியுகத்தின் மகிமை. ஒரு கம்யூனிச நாட்டில் சாயியின் விழுக் கல்வியை
அங்கீகாரக் கல்விமுறையாக அமல்படுத்துவதென்றால், அது கலியுகத்தின்
சிறப்புக்கு ஓர் உதாரணமல்லவா!
இக்கலியுகத்தில் நாம் பிறந்திட அதிர்ஷ்டம்தான் செய்துள்ளோம். ஆயினும் மீண்டும்
பிறவாமல் இருப்பதற்கு காலத்தை வீண்செய்யாமல், இறைவனின் நினைப்பிலேயே
இருந்து, அவருக்கு பிடித்தமான செயல்களைச் செய்து, அவரை
ஆனந்தப்படுத்துவோமாக!
!!!சாய்ராம்!!!
ஆதாரம் : புத்தகம் - ஸ்ரீ சத்ய சாய் பாதையில் ஞானத்தேடலும் திருவருளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக