நீங்கள் ஒவ்வொரு வரும் திடமான, உறுதியான, நேர்மையானவர்களாக வளர்வதை நான் விரும்புகிறேன்.
உங்கள் கண்கள் தீய காட்சிகளைக் காண தேடக் கூடாது.
உங்கள் காதுகள் தீயனவற்றைக் கேட்பதில் ஆர்வமாக இருக்கலாகது.
உங்கள் நாவானது தீயவற்றைப் பற்றிப் பேச விரும்பக் கூடாது.
கெட்ட செய்கைகளில் உங்கள் கரங்கள் ஈடுபடலாகாது.
உங்கள் மனம் கெட்ட எண்ணங்கள் பின் சென்றிடக் கூடாது.
தூய்மையானதாகவும் அன்பு நிறைந்தும் வாழ்ந்திடுங்கள். உங்களிலும் அவல நிலையில் இருப்பவருக்கு உதவிடுங்கள். உதவி தேவைப்படுவருக்கு சேவை புரிந்திடுங்கள்.
-- பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
(சனாதன சாரதி - ஆகஸ்ட் 2015 இதழிலிருந்து.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக