இதன் துவக்கம் என்ன? ஒரு முறை பார்வதியும் பரமேஸ்வரனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். நடுவராக இருக்க நந்தி வேண்டிக் கொள்ளப்பட்டார். நந்தி ஒவ்வொரு முறையும் ஈஸ்வரனே வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஈஸ்வரனின் சார்பாக நந்தி முடிவெடுப்பதாக அன்னை பார்வதி எண்ணினாள். அதனால் கோபம் கொண்ட அவள் அஜீரண கோளாறால் அவதியுற நந்திக்கு சாபமிட்டார்.
அன்னையின் காலில் விழுந்து நந்தி, "அன்னையே, நான் தங்களை ஏமாற்றவில்லை, ஈஸ்வரருக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை. எனது தீர்ப்பில் நடுநிலையோடு இருந்தேன். ஈஸ்வரன் தனது சங்கல்ப பலத்தால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார். ஈஸ்வர சங்கல்பம் வஜ்ர சங்கல்பமாகும். அதனால், தங்கள் மன்னிப்பை கோருகிறேன், சாபத்தில் இருந்து விடுதலை அளிக்க வேண்டுகிறேன்" என பிரார்த்தித்தார். நந்தியிடம் பரிதாபம் கொண்ட பார்வதி கூறினார், "நந்தி! ஆவணி மாதம் நான்காம் நாளில், விநாயகரை அருகம்புல் கொண்டு பூஜை செய். அவ்வாறு பூஜித்த புல்லினை உண்பதால் உனது அஜீரண கோளாறில் இருந்து விடுபடலாம்".
நாய் வளர்ப்போர் இதனை நன்கு அறிவர். புல்வெளிகளில் நாய்களை விடும் போது, அவை வெள்ளை புல்லை தேடி உண்ணும். இதன் காரணம் என்ன? வெள்ளை புற்கள் அதன் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். எனவே, விநாயகருக்கு அர்ப்பணிக்கும் பொருட்கள் அனைவருக்கும் நல் ஆரோக்யத்தை வழங்குவதை நாம் காணலாம். ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் அவர் அருள் புரிவார் என மக்கள் காலங்காலமாக நம்பினார்.
- ஸ்ரீ சத்ய சாயி பாபா (10.09.2002ல் வழங்கிய தெய்வீக அருளுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக