ஸ்ரீ சத்ய ஸாயி நிறுவனத்தினர் 1967ல் மெட்ராஸில் (சென்னை) அகில இந்திய மாநாடு மாலை நேரங்களில் நடை பெற்றது. ஒரு நாள் மாலை பகவான் கூட்டத்தில் தெலுங்கில் பேசிய வாறு நடத்தினார். இந்துலால்ஷாவிற்கு தெலுங்கு புரியவில்லை. சொற்பொழிவு தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படவில்லை.
முதல் நாள், கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை மறு நாள் காலை ஷாவும் மற்ற அங்கத்தினர்களும் பகவானைப் பார்த்து, முடிவுகளை உறுதி செய்வதற்காகக் கூடினார். அந்த சிறிய குழுவில் ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி ஸ்ரீ ந. ராமக்ருஷ்ணராவ், கேரளாவின் கவர்னர், உத்திரபிரதேச கவர்னர் ஆகியோரும் இருந்தனர். முதல் நாள் பேசிய விஷங்களை ஸ்வாமி தெலுங்கில் பேச ஆரம்பிக்க, இந்துலால் மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை, ராமக்ருஷ்ண ராவ் தைரியமாக ஸ்வாமியிடம், அவருடைய தெலுங்கு உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அனுமதி கேட்டார்; ஷாவிற்காக!.
பகவான், ”வேண்டாம்! நேரம் இல்லை! அவருக்கும் தெலுங்கு புரியும்” என்று கூறி ஷாவின் தலையில் தன் விரல்களால் தட்டினார்!.
மிக ஆச்சரியப் படத்தக்க வகையில், இந்துலால் தெலுங்கை புரிந்து கொள்ள முடிந்தது! பகவான் தலையில் தட்டிய நொடியில் இருந்து, ஆனால் அது கூட்டம் முடியும் வரை மட்டுமே சாத்தியமாயிற்று!.
ஆதாரம்: Sathyam Sivam Sundaram VOL 5 | PAGE 305
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 சத்ய சாயி இறைவனின் விரலசைவில் தான் அனைத்து கோள்களின் இயக்கங்களும்... மனித வாழ்க்கையின் அசைவுகளும்.. ஆத்ம ஞானத்தையே தன் விரல் தொடுகையால் உணர வைக்கக் கூடிய சத்யசாயி கடவுளுக்கு தெலுங்கு மொழியை புரிய வைப்பதொன்றும் பெரிய விஷயமே இல்லை. 🌻
🙏🏼 ஓம் சாயிராம் 🙏🏼
பதிலளிநீக்கு