தலைப்பு

வியாழன், 16 செப்டம்பர், 2021

சிறுமிக்காக எம்.எஸ் அம்மாவை பாட வைத்த சுவாமி!


இறைவன் சத்ய சாயி சம்ஹார மூர்த்தி அல்ல.. சமாதான மூர்த்தி.. ஆலிங்கன ஆண்டவன்.. இரண்டற கலக்கும் இறைவன் என்பதற்கான அற்புத பதிவு இதோ...

மனமுவந்து செய்யும் தன்னலமற்ற சேவைக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி மாபெரும் மதிப்பு தருகிறார்.   அனைத்து வகை சாதனா மார்க்கங்களிலும் சேவையே மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.

சுவாமி மிக எளிமையான விஷயங்களை நமக்கு புரியும் வண்ணம் மிக அழகாக தனக்கே உரிய பாணியில் சொல்லி விடுகிறார்.

இதோ... திருமதி கீதா மோஹன் ராம் அவர்களின் அற்புத அனுபவம்...

பிருந்தாவனத்தில் நான் சிறு பெண்ணாக இருந்த போது இது நடந்தது.

சேவாதள தொண்டர்கள் தோட்ட வேலைக்கும் சமையல் வேலைக்கும் கிடைக்காததால் எங்களுக்கென்று ஒரு சில வேலைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. எல்லா வேலைகளும் நாங்களே செய்து முடித்தோம். எனக்கு கொடுக்கப்பட்ட பணி என்னவென்றால் சுவாமியின் பங்களாவை ஒட்டி நிறுவப்பட்டிருந்த பீடத்திற்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் வாரம் ஒரு முறை மட்டுமே வந்து செய்வேன். ஏனெனில் மீதமுள்ள நாட்களில் நான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்தது.


குறிப்பிட்ட ஒரு வார இறுதியில் எனக்கு பிருந்தாவனத்திற்கு செல்ல விருப்பம் இல்லை. ஏனெனில் பிரபல கர்நாடக சங்கீத மேதை திருமதி M.S. சுப்புலட்சுமியின் கச்சேரி பெங்களூரில் நடப்பதாக இருந்தது. சுவாமி எப்போதும் இங்கேயே தான் இருக்கிறார். ஆனால் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் எப்போதோ ஒரு முறை தான் வருகிறார். ஆனால் என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பான குரலில் சுவாமி சேவை செய்வதால் நீ போகக் கூடாது என்றே கூறினர்.

உடனே நான் அந்த சேவையை நாம ஏன் இன்னிக்கு பண்ணக்கூடாது என்று கேட்டேன். இதற்கு என்  பெற்றோர்கள் நீ கச்சேரிக்கு போக வேண்டும் என்றால் போன வாரமே இதை சுவாமியிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறினர்.

சரி அப்படி என்றால் பாதி கச்சேரிக்காவது என்னை அனுப்புங்களேன் என்று கெஞ்சினேன். என் தாயாரோ நாம் வேண்டுமானால் சுவாமி பஜனை முடிந்த பிறகு போவோம் என்று சொன்னார்.

சுவாமி கொஞ்சநேரம் உட்காருவார்.  பிறகு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அதற்குப் பிறகு பஜனை... அதுவும் முடிந்த பிறகு அவர் வேறு பேச ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வார் என்று முணுமுணுத்தேன்.

எல்லாரும் தனக்கு கொடுத்த வேலையை பொருத்தமாக செய்தனர். ஆனால் நான் மாத்திரம் மூஞ்சியை பெரிதாக தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.

சுவாமி அப்போது அங்கே வந்தார்.  வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். என்னையும் பார்த்தார்.

ஓய் விளக்கெண்ணெய் மூஞ்சி.. உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க? எதுக்கு என்னோட புகைப்படங்களை எல்லாம் போட்டு குத்து குத்துன்னு குத்தி கொண்டு இருக்கிறாய்? உனக்கு உங்க அம்மாவோட என்ன விவாதம்? என்று கேட்டார் சுவாமி.

இன்னைக்கு M. S. சுப்புலட்சுமி அம்மாவின் கச்சேரி பெங்களூரில் நடக்கிறது. அதற்கு சுவாமி "ஆமா அந்தம்மா
மிகப் பெரிய பாடகியாச்சே!! அப்ப நீ ஏன் கச்சேரிக்கு போகல?"...

ஸ்வாமி  என் அம்மா அப்பா  இருவரும் முதலில் இங்க தான் நான் சேவை செய்யணும். அப்புறம்தான் கச்சேரி என்று சொல்லிவிட்டார்கள் என்றேன். அதற்கு சுவாமி அப்ப குறைந்த பட்சம் உங்கம்மாவே இந்த பீடத்தை சுத்தம் செஞ்சிருக்கலாமே. ஏன் அப்படி செய்யல?

சரி.. இப்ப நான் பஜனை முடிந்து பேச ஆரம்பித்தால் நீ கச்சேரிக்கு போக ரொம்ப லேட் ஆயிடும். இப்படி என்னவெல்லாம் நான் என் அம்மாவிடம் பேசினேனோ அவை அத்தனையும் சுவாமி சொன்னார்.

பிறகு அவரே என்னிடம் சுவாமி இன்னிக்கு ஒரு நாள் பஜனை முடிஞ்சப்புறம் பேச மாட்டேன். நீங்க எல்லாருமே சுப்புலட்சுமி அம்மாவோட கச்சேரிக்கு போகலாம் அப்படின்னு சொன்னார். எனக்கோ ஒரே சந்தோஷம்!! ஆச்சரியம்!!!

பஜனை ஆரம்பித்தது. சுவாமியும் சேர்ந்து கூட பாடினார். சிறிது நேரம் கழித்து சுவாமி எங்களை பார்த்து கொஞ்ச நேரத்துல நான் திரும்பி வந்திடுவேன்.. எல்லாரும் சிறிது காத்திருங்கள் என்று சொன்னார்.  5 நிமிடங்கள் கழிச்சு சுவாமி வெளியில் வந்த போது கூடவே சுப்புலட்சுமி அம்மாவும் வந்தார்கள்.


எங்க எல்லாருக்கும் எதிர்பாராத இன்பஅதிர்ச்சி 🤭.

ஸ்வாமியோ எங்கள் எதிரில் சுப்புலட்சுமியை பார்த்து "இன்னைக்கு உனக்கு பெங்களூரில் கச்சேரி இல்லையா"?!! என்று கேட்க...அதற்கு அம்மா "இல்லையே சுவாமி.  இன்று எனக்கு கச்சேரி எதுவும் இல்லை. ஏதோ செய்தித்தாளில் இன்னிக்கு கச்சேரி அப்படின்னு தப்பா செய்தி வெளிவந்து விட்டது. ஆனால் கச்சேரி நடக்கப் போவது என்னவோ நாளைக்குத்தான் என்று பதிலளித்தார்.

சுவாமி உடனே என்னை காண்பித்து இதோ உட்கார்ந்திருக்கு பார் ஒரு சின்ன பொண்ணு.. இவளுக்கு உன்னோட கச்சேரி நீ பாடுற பாட்டு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார்.

பிறகு சுவாமி சுப்புலட்சுமி அம்மாவிடம் எனக்கு என்னென்ன பாட்டெல்லாம் பிடிக்குமோ அந்த பட்டியலை கொடுத்து அதிலிருக்கும் பாடல்களையே பாடச் சொன்னார்.

M. S. சுப்புலட்சுமி அம்மா அவர்கள் சுவாமியின் மிகச் சிறந்த பக்தை. சுவாமி சொன்னதற்காக அன்று தனிப்பட்ட கச்சேரியாக அவர் முன்பு எங்களுக்காக பாடினார்.

பிறகு சுவாமி என்னை கூப்பிட்டு "இதோ பார்.. நீ எப்போ உன்னோட கடமையை செய்கிறாயோ, அதற்கு பரிசாக சுவாமி நீ எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நிச்சயமாக கொடுப்பேன்"  என்றார்.

இன்னிக்கு இங்கு M. S. சுப்புலட்சுமி அம்மாவோட கச்சேரியை கேட்ட இல்ல. சந்தோஷம். நாளைக்கு நீ பெங்களூர் போய் அங்கேயும் கச்சேரி கேளு என்று சொன்னார்.

ஸ்ரீ சத்திய சாய் பாபா நம்மிடம் சொல்வதெல்லாம் இது ஒன்று தான்... மகிழ்ச்சியுடன் இரு,  நான் உன்னிடம் கேட்பது அது ஒன்றுதான்.

ஆதாரம்:  "HIS LOVE...THROUGHOUT MY LIFE" by Mrs. Geeta Ram
தமிழாக்கம்  :-  ரா. வரலட்சுமி,  குரோம்பேட்டை,  சென்னை.

🌻 இறைவன் சத்யசாயியை காட்டிலும் ஈடற்ற கருணை மிகு கடவுள் இந்த ஈரேழு உலகில் எவரும் இல்லை.. அவரை விட ஓர் நித்திய வஸ்து இந்த அண்ட சராசரத்தில் எதுவும் இல்லை 🌻

3 கருத்துகள்: