சுவாமி நமக்கு தருவதெல்லாம் எத்தகையது..? நம் வாழ்வில் சுவாமி நிகழ்த்தும் அன்றாட சம்பவங்கள் எல்லாம் எப்படிப்பட்டவை? என்பதை சுவாமியே ஆழமாய்... பசுமரத்தாணியாய் நம் மனதில் பதிவது போல் விவரிக்கிறார் இதோ...
சுவாமியின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எங்கள் குழுவினருக்கு அவர் பாதநமஸ்காரம் கொடுத்து ஆசீர்வதித்தார். அப்போது ஒரு சகோதரர், "சுவாமி,எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்" என்று கேட்டார். சுவாமி, "பங்காரு, நான் கொடுப்பதெல்லாம் நல்லவையே. நீங்கள் தான் அதைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்" என்றார்.
என்னவொரு பாடம்! முதலில், கடவுள் கொடுக்கும் அனைத்துமே நல்லவைதாம். நமக்கு வரும் துயரங்களும் துன்பங்களும் இதில் அடங்கும். நாம்தான் தவறாகப் பயன்படுத்தி இவற்றைக் கெடுத்துக்கொள்கிறோம். இரண்டாவதாக, வாழ்வில் எல்லாமே இந்த இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன; ஒன்று, அவற்றின் நல்ல பக்கம் ; இரண்டாவது அவற்றில் நாம் ஏற்கமுடியாத கெட்ட பக்கம். எல்லாவற்றிலும் இருக்கும் நல்லவற்றைப் பார்த்து, அவற்றின் மீது நமது கவனத்தைச் செலுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth
எல்லாம் நன்மைக்கே என்பது மூதுரை.
இறைவன் சத்ய சாயி நமக்கு நன்மையே செய்கிறார் என்பதைவிட அவர் இவ்வுலகில் ஆற்றுவதெல்லாம் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை..
பால் பக்குவமாவதற்கே காய்ச்சப்படுகிறது.
இறைவன் சத்யசாயியின் பால் பக்தி வளர வளரவே அவரின் பேரன்பால் யாவுமே சுபமாகவே நடக்கும் பேருணர்வு திண்ணமாய் ஏற்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக