மனம் தான் காரணம்! உங்கள் மனதை நீங்கள் இறைவனை நோக்கித் திருப்பினால் ஆனந்தம் கிடைக்கும்! மனதை நீங்கள் உலகியல் விஷயங்களில் அலைய விடுவதால்தான் வாழ்க்கை உங்களுக்கு துன்பமயமாக உள்ளது!
உதாரணமாக விசிறியை கையில் எடுத்து, உள்பக்கமாக திருப்பினால் காற்று உங்கள் பக்கம் வீசும்! அதை விட்டுவிட்டு எதிர் திசையில் விசிறினால் காற்று எப்படி உங்களுக்கு வரும்? அதே போல், மனதை உலகியல் விஷயங்களில் அலைய விடுவதை நிறுத்தி கடவுளின் பக்கம் நகர்த்தினால் மட்டுமே உங்கள் அனைவருக்கும் இன்பம் கிடைக்கும்!
ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக