தலைப்பு

திங்கள், 22 மே, 2023

யாருக்கு பரிசாக வேண்டும் யானை? - பாபா கேட்ட கேள்வியால் அதிர்ந்த மாணவர்கள்!


தனது மாணவர்களுக்கு பரிசு தருவதாக பாபா தீர்மானித்த உடன் "யாருக்கு வேண்டும் யானை?" என்று கேட்டு அதிர வைக்கிறார்! யார் அந்த பரிசை ஏற்றுக் கொண்டது... பராமரிக்க மிகவும் வசதி வேண்டியிருக்கிற  யானையை பாபா கொடுத்தாரா? என்ன நடந்தது ? சுவாரஸ்யமாக இதோ‌...


த்ரயி பிருந்தாவனம். மாலை தரிசனம் முடிந்து ஏகாந்தமாக த்ரயி செஷன். சிரிப்பும் சந்தோஷமும் பொங்க மாணவர்கள்- சுவாமி அளவளாவல். "சில மாணவர்கள் கடமைக்கு எழுந்து, அவசர அவசரமாக பல்லை தேய்த்து,  ஓம்காரம் ஆரம்பித்தவுடன் ஓம் என்றவுடன் உஷ்: தலை சாமி ஆடுகிறது,"  சுவாமி நடித்துக் காட்ட மாணவர்கள் கோலாகல உற்சாகம்; "வார்டன் கூப்பிட்டால் சிலர் போர்வையை முழுவதுமாக போர்த்திக் கொண்டு, உடம்பு முடியவில்லை என்று தூக்கம்; அதன்பின்பு குற்ற உணர்ச்சியில் தூக்கம் வராமல் கண்கள் சிவந்து வகுப்புக்குச் செல்வது", இப்படி மாணவர்களுக்கு  அவர்கள் போக்கிலேயே சாயி தெய்வம்

அறிவுரை. "சாய் கீதாவைப் பாருங்கள்: ஐந்து வயது குட்டியாக வந்தது: அவளுக்கு என் மீது அலாதிப் பிரியம்: நான் கோகுலத்திற்கு வரப் போகிறேன் என்பதை நான் காரில் ஏறியவுடன் கண்டுபிடித்து விடுவாள்; எதிரில் இருக்கும் ஹாஸ்டலுக்கு  சமிக்ஞை;  ஏனென்றால் சாய்கீதா யானை இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது என்றால் அவர்களும் சுவாமி வரப்போகிறாரென உணர்ந்து, ஹாஸ்டலை நீட்டாக வைத்துக் கொள்வார்கள்",  இப்படியாக சுவாமி ஒவ்வொரு படியாக மாணவர்களுக்கு அறிவுரை.  "நான் சொல்வதற்காக ஓம்காரம் சுப்ரபாதம் செய்ய வேண்டும் என்பதில்லை; அது உங்களுக்கு நல்லது என்று நீங்கள் உணரவேண்டும்; உணராமல் செய்யும் எந்த விஷயமும் நிலைக்காது", சிரிப்பும் கும்மாளமுமாக ஆரம்பித்து, சொல்ல வேண்டிய செய்தியை சுவாமி சொல்லிக்கொண்டிருந்தார். மாணவர்கள் முகம் இறுக்கமாகி  அதுவரை இருந்த சந்தோஷம் அபேஸ். பிள்ளைகள் முகம் வாட சுவாமிக்கு பொறுக்குமா என்ன? பழையபடி ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஜோக் சொல்லி கொண்டிருந்தார். என்மீது உங்களுக்கெல்லாம் கோபம்: நான் சில பேருக்கு மட்டும் பரிசு கொடுக்கிறேன் என்று: இப்போது அந்தப் பழியைத் துடைத்துக் கொள்ள போகிறேன்:  யாருக்கு பரிசு வேண்டும்? என்று சுவாமி. எல்லோரும் கை தூக்கினார்கள். பேராசிரியர்களும் கூடத்தான். "இந்த சாயி கீதா யானையை பராமரிப்பது கடினமாக உள்ளது: ஏகப்பட்ட தொந்தரவு: அதனால் அதனை ஃப்ரீயாக யாருக்காவது கொடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்: யாருக்கு வேண்டும்?" என்று ஒரு போடு  போட்டார். 


 பிள்ளையாண்டான்கள் முகத்தில் ஈயாடவில்லை. "சுவாமி எது கொடுத்தாலும் பிரசாதம் என்கிறீர்கள்: யாருக்காவது வாட்ச் கொடுத்தால் எனக்கு இல்லையா? என்கிறீர்கள்: இப்போது நான் உங்களுக்கு பெரிய பரிசு கொடுக்கப் போகிறேன்: யாருக்கு வேண்டும் யானை?". சப்த நாடியும் ஒடுங்கி மாணவர்கள் அமைதி. சுவாமி விடுவதாயில்லை. "ஹே! பாய்! உனக்கு கொடுக்கவா?" வேண்டாம் சுவாமி நாங்கள் பிளாட்டில் குடியிருக்கிறோம் இடமில்லை.  உனக்கு வேண்டாம் யானைக்கு தீனி போட வசதியில்லை. இருப்பதிலேயே பணக்கார வீட்டுப் பிள்ளையை  கூப்பிட்டார்: பெரிய  தொழிலதிபரின் மகன்;  நீ எடுத்துச் செல் என்று  ஆக்ஞை. இல்லை சுவாமி! அப்பா பர்மிஷன் வேண்டும் என்றான் அந்த மாணவன். விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ஆல்ரைட்! உங்களுக்கு ஒரு நிமிடம் டைம் தருகிறேன்! யாருக்கு வேண்டும் சாயிகீதா யானை?  என்றவாறு சுவாமி. 1....2.....3.....4....‌‌5 நொடிகள் கடந்தன! அப்போது பின்னால் இருந்து ஒரு மாணவன் கை தூக்கினான்; சுவாமி அந்தப் பிள்ளையை அருகில் வரவழைத்தார். எதற்காக கை தூக்கினாய்? சுவாமி உங்களிடமிருந்து யானையை பரிசாக பெறுவதற்காக!  "இது பெரிய பரிசு: ஒரு நாளைக்கு உணவிட 10 ஆயிரம் ரூபாய் ஆகும்: உனக்கு வசதி இருக்கிறதா?". யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும்? என்று கேட்ட சுவாமியே, இப்போது வேண்டும் என்ற ஒரே ஒரு மாணவனை சோதித்தார். 


ஆம்! உங்கள் கையால் இதுவரை நான் பரிசு பெற்றதில்லை: அதனால் சாய்கீதாவை  நான் வாங்கிக் கொள்கிறேன்; "மாணவன் உறுதியாகப் பேசினார். அதற்கான வசதி உனக்கு இருக்கிறதா? அந்த தொழில் அதிபரின் மகனே வேண்டாம் என்று கூறிவிட்டான்; நீ எப்படி சமாளிப்பாய்? எப்படி சாப்பாடு யானைக்கு  போடுவாய்? யோசிக்காமல் வாங்காதே? சரமாரியாக குழப்பினார் சாய் கிருஷ்ணர். மாணவன் உறுதியாக இருந்தான்", சுவாமி நீங்கள் கொடுக்கிறீர்கள்! யானையை பரிசாக கொடுக்கிறீர்கள்! கொடுத்த பின்பு அதற்கான இடம் பொருள் அனைத்தையும் நீங்களே தான் கொடுக்கப் போகிறீர்கள்! எனக்கென்ன பயம்?"  தெளிவாக பேசினார் மாணவச் செல்வம். அசந்து போனார்கள் மற்ற மாணவர்கள். பயந்து ஒதுங்கி அமர்ந்த பேராசிரியர்களும் தான்! 

சுவாமி அவனை கட்டி அணைத்தார்: ஆம்! இவன் சொல்வது தான் சரி; ஒரு விஷயத்தை நான்  கொடுக்கிறேன் என்றால், அதை எந்தவித மனக்கிலேசம்  இன்றி வாங்கும் பக்குவம் வரவேண்டும்; சபாஷ்! இந்தா யானை! கையை சுழற்றினார் காலாதீதன்! வழக்கத்திற்கு மாறாக சற்று நேரம் பிடித்தது; பின்பு அவர் கையில் வந்தது என்ன? ஆம்! சாயிகீதா யானையை போலவே, அச்சு அசலான அழகான  தங்க யானை.


 புடம்போட்ட மாணவதங்கத்திற்கு தங்கத்தால் யானை! 

 கஜேந்திர மோக்ஷம் கொடுத்த ஆதிமூலத்தின் அற்புதப் பரிசு!

 திடமான நம்பிக்கை திண்ணமான பரிசு!

 மகிழ்ச்சிக்கடலில் நீந்திய மாணவர் தான்!

 உண்மை பக்திக்கு நியாயம் செய்த கமலக்கண்ணன் தான்!!

 ஆன்மீக பயிற்சி மெய்ஞானம் வளர்க்கவே என்ற ஞானேஸ்வரி தான்!!!


தமிழில் தொகுத்தளித்தவர்: வில்லிசை R. சாய்ராம் 

2 கருத்துகள்:

  1. பெயரில்லா25 மே, 2023 அன்று 4:56 PM

    ஸ்வாமி எதைத் தந்தாலும்...அதை அப்படியே ஏற்றக் கொள்ளும் மனப் பக்குவம் வரவேண்டும்! அதையும் உடனடியாக அந்த மாணவன் ஒப்புக் கொண்டதுகூட..இறைவனின் அருள்தான்! அவர் அனுமதித்தபின்பே அந்த பதிலும்கூட வரும்!!👍

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா15 மே, 2024 அன்று 8:52 PM

    எனக்கும் கூட இதுபோன்ற தைரியம் பலசமயங்களில் வநரும்! ஸ்வாமி யே தருகிறார் என்றால்..தகுதி இல்லாம
    லாஇருக்கும்?

    பதிலளிநீக்கு