தலைப்பு

செவ்வாய், 2 மே, 2023

மனிதர்கள் எதை விட்டுவிட வேண்டும்?

மனிதர்கறள் உலகியல் வாழ்க்கையை விட்டுவிடக் கூடாது! பலர் இன்னும் தவறாகவே கருதிக் கொண்டிருக்கிறார்கள்! உலகியல் வாழ்வின் மீது கொண்டுள்ள நாட்டத்தைத் (பற்றுதலை) தான் விட்டுவிட வேண்டும்! 

ஸ்ரீ ராமானந்த தீர்த்தருக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர்... அவர் இல்லற வாழ்வை உதறிவிட்டு துறவறம் மேற்கொண்டார்! 

ஒருமுறை காண வந்த அவரது மனைவியை பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தான் துறவி என்றும் , தன்னைப் பார்க்க வரக் கூடாது என்றும் கடுகடுப்போடு கூறினார்! இதைக் கேட்ட அவர் மனைவி... தாம்பத்ய உறவை எப்பொழுதோ தான் மறந்துவிட்டதாகவும் , ஒரு துறவியையே தரிசிக்க வந்திருப்பதாகவும் கூறினார்... இதைக் கேட்ட ஸ்ரீராமதீர்த்தர் வருந்தி மனம் திருந்தினார்...! 

Properties ஐ உதறிவிட வேண்டியதில்லை!

கடவுளிடம் Proper - Ties தான் ஏற்பட வேண்டும்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக