தலைப்பு

ஞாயிறு, 7 மே, 2023

1972'ல் லக்நவ் மாநிலத்தில் நேரில் தோன்றிய பாபா - உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண்!

பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ.... 


அது 1972. லக்நவ் மாநிலம். உத்திர பிரதேச கன்வீனர் சுசில் வர்மாவின் இல்லம்... அங்கே தங்குகின்றனர் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா..! சுசில் வர்மாவை மாமாஜி என்றும் அவரது மனைவியை மாமிஜி என்றும் இருவரும் அழைக்கின்றனர்...

சுசில் வர்மா சஞ்ஜெயிடம் அகண்ட பஜனை (24 மணிநேர பஜனை) செய்யலாம் என்ற ஆலோசனையை சொல்கிற போது.. சமிதியினருக்கும் சஞ்ஜெய் தகவல் தெரிவிக்கச் சொல்கிறார்! அதற்கு ஒரு சனிக்கிழமை...காலை 10 முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணிவரை பஜனை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது! கான்பூரில் இருந்தாலும் பக்தர்கள் திறள்கிறார்கள்! 


பாபாவின் புகைப்படம் அருகே சஞ்ஜெய் அமர.. அவர் எதிரே மாமிஜி அமர.. புகைப்படத்தில் ஏதோ அசைவது போல் தென்பட... வெளியே பார்க்கிறார் சஞ்ஜெய்.. ஒரே ஆச்சர்யம்... பாபா எப்படி 16 வயதில் காட்சி அளித்தாரோ அப்படி காட்சி அளிக்கிறார் வாசலில்.. அது கனவு இல்லை கற்பனை இல்லை.. உடனே சஞ்ஜெய் மாமிஜியிடம் தெரிவிக்க.. மாமிஜிக்கும் பாபா அதே வயது கோலத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார்! முதலில் சஹஸ்ரநாம அர்ச்சனை (பாபாவின் 1008 நாமாவளி) அது நிறைகிறது... 16 கிலோ அரிசியும் அதனால நிறைகிறது.. அதனை சமைத்து பிரசாதமாக .. அதாவது நாராயண சேவையாக வழங்க வேண்டும்... ஒருபுறம் அகண்ட பஜன் நிகழ... மற்றொரு புறம் நாராயண சேவை நிகழ... காலை பஜனை நிறைகிறது.. சிலர் குளிக்கச் செல்கிறார்கள்! நாராயண சேவைக்கு படைக்கப்பட்ட துணியால் மூடிய உணவுப் பாத்திரத்தை எடுத்த மாமிஜி திடுக்கிடுகிறார்... அவர் மட்டுமல்ல யாருமே அதை எதிர்பார்க்கவில்லை..

அந்த உணவுப் பதார்த்தத்திற்கு மேல் ஓம் என்று எழுதப்பட்டிருக்கிறது!


அருகே இருக்கும் லெப்ரசி ஹோமில் சென்று நாராயண சேவை வழங்கப்படுகிறது மதியம் 1 முதல் 2 வரை... பிறகு சர்க்கரைப் பொங்கல் தயாரிக்க அடுப்பில் செய்கிற போதும் அதே ஓம் என்ற எழுத்து ஏற்படுகிறது.. இரட்டிப்பு ஆச்சர்யம்! அதுவும் சமைக்கிற போது வந்த நுரை அப்படியே வளர்ந்து ஓம் வடிவம் பெறுகிறது! அரசி வெந்து வெளியே பொங்க.. பொங்கப் பொங்க... பொங்கலாகப் பொங்க.. அதை நிரப்ப நிரப்ப... எல்லா பெரிய பாத்திரங்களும் நிரம்பிவிடுகின்றன... இதை வழங்குவதற்கான நாராயண சேவையை பற்றி பேசுகிற போது பாபா வருவதற்கான தெய்வீக மணம் பரவ ஆரம்பிக்கிறது... உள்ளே சென்று பார்க்கிற போது "சுசில் வர்மா வீட்டில் கொலு வீற்றிருக்கும் 32 பாபா புகைப்படங்களில் இருந்தும் ஆங்காங்கே அமிர்தம் வழிய ஆரம்பிக்கிறது.... அதை நிரப்ப ஏதேனும் பாத்திரம் இருக்கிறதா? என்று தேடுகிறார்கள்! இருந்த பாத்திரத்தில் எல்லாம் சர்க்கரைப் பொங்கல்... அமிர்தம் வழிவதனால் பாத்திரம் தேடப்படுகிறது! 

நாராயண சேவைக்காக வெளியே சென்று வீட்டிற்குள் நுழைகிற போது மேலொரு ஆச்சர்யம் காத்திருக்கிறது... பூட்டிய கதவைத் திறக்கையில் திடுக்கிடுகிறார்கள்... உள்ளே பாபா அமர்ந்திருக்கிறார்...!

அனைவரையும் அமரச் சொல்கிறார்... தபலா ஆள் இல்லை என்பதால் பாபா "பிரேம முதித!" பாடல் பாடி சஞ்ஜெயை தபலா வாசிக்கச் சொல்கிறார்... இந்த ஜப-தாளம் தனக்கு தெரியாது என்று அவர் தெரிவிக்க... "தகின தின் - தாகின தின்" என்று பாபாவே ஜபதாளத்தை கற்றுத் தருகிறார்... ஏன் நீங்கள் உங்கள் உருவத்தில் வரவில்லை என்று சஞ்ஜெய் கேட்டதற்கு... நான் புட்டபர்த்தியில் இருந்து வரவில்லை ஷிர்டியில் இருந்து வருகிறேன் என்கிறார் பாபா! இப்படித்தான் தேவ் சாஹேப் வீட்டிற்கு ஷிர்டி பாபா சன்னியாசி வேடத்தில் வருகிற போது பாபாவை அவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.‌. பாபாவை புரிந்து கொள்வதற்கு அவசரம் இல்லை ஆனால் கண்டு கொள்ள வேண்டும் என்கிறார் சத் சரிதத்தில் இருந்து மீரா...இந்த சம்பவத்திற்கு தொடர்புடையது என்பதால் அதையும் பதிவு செய்கிறார்! 

பிறகு பாபா அனைவரையும் உறங்கச் சொல்ல.. ஆண்கள் வெளியேவும்... பெண்கள் உள்ளேவும்... அதிகாலை 4 மணிக்கு எழுந்திருந்து பார்க்க... பாபா மறைந்து போயிருக்கிறார்! 


அது 1972. மகாராஷ்டிரா விதர்ப பிரதேசத்தின் ஒரு சின்ன கிராமமான நிம்போரா போட்கா... அதில் துகாராம் தாபடே... அவர் ஒரு ஸ்கூல் மாஸ்டர்... அவர் புட்டபர்த்தி சென்று பாபாவை தரிசித்ததும் உண்டு... அவர் வீட்டில் இல்லறத் துறவிகள் இருந்த போது விபூதி பொட்டலத்தை சஞ்ஜெய் கொடுத்து "விபூதி மகிமையை போகப் போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்! பாக்கட்டில் வைத்துக் கொண்டிருங்கள்! ஏதேனும் அபாயம் எனில் பயன்படுத்துங்கள்!" என்கிறார்!

அப்போது துகாராம் மனைவி முக்தா நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.. வீட்டு வேலை செய்ய ஆள் இல்லாத படியாக அவரே மெதுமெதுவாக வேலை செய்கிறார்... ஏற்கனவே பிறந்த மூன்று பிள்ளைகளும் அதற்கு உதவுகிறார்கள்!

அப்படி ஒரு நாள் ஏணியின் மேல் ஏறி சுண்ணாம்பு அடிக்கிற போது கால் வழுக்கி கீழே விழ... மூர்ச்சையாகிறார் முக்தா... ஒரே களேபரம்... "அம்மா செத்துட்டா அம்மா செத்துட்டா!" என்று ஒப்பாரி வைக்கிறார்கள்! உடனே மருத்துவமனைக்கு அவரை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்! தாய் அல்லது குழந்தை இருவரில் ஒருவர் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று கையை விரிக்கிறார்கள்! கணவர் துகாராம்... அவர் உறவினர் என மருத்துவமனையில் கூட்டமே குவிகிறது... அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை... துகாராம் துக்க ராமாக மாறுகிறார்! தாய் தான் முக்கியம்... ஏற்கனவே 3 குழந்தை இருக்கிறது... என்று டாக்டரிடம் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவர் சொல்ல... பாக்கெட்டில் எதேர்ச்சையாகக் கையை விடுகிறார்... அது சஞ்ஜெய் கொடுத்த பாபா விபூதி.. அப்போது டாக்டர் , நர்ஸ் இல்லாமல் அறையில் தனியாகவும், மயக்க நிலையிலும் முக்தா இருக்க...


கணவர் துகாராம் ஓடிப்போய் பாபா விபூதியை வயிற்றிலும் அவர் நெற்றியிலும் வாயிலும் இட்டு வெளியே வருகிறார்... ஐந்து நிமிடம் கூட தாண்டவில்லை .. குழந்தை அழும் சப்தம் கேட்கிறது... மயக்கம் தெளிந்து சிறிது தெம்பு வந்த முக்தா பாபா அருகே வந்ததை , தனக்கு ஒன்றும் இல்லை என்று தனக்கு பிரசவம் பார்த்ததை எல்லாம் பரவசம் பொங்க அங்கிருந்தவர்களிடம் பகிர... முக்தாவுக்கு வந்த மயக்கம் டாக்டர்களுக்கே வந்துவிடும் போல் நடந்த சம்பவம் அவர்களை பிரம்மிக்கச் செய்கிறது! பிறந்த குழந்தை ஆண்... அந்தக் குழந்தைக்கு துகாராம் சூட்டிய பெயர் சாட்சாத் சுவாமிஜி பெயர் தான் - "சஞ்ஜெய்!"


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 174 - 180 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பாபாவின் விபூதி அத்தகைய மகிமை வாய்ந்தது! அது பாபாவே நம்மோடு இருப்பதான திண்மை விபூதி எனும் அந்த பஸ்ப வெண்மை! இறைவன் பாபா தன் இருப்பை பல்வேறு வகைகளில் உணர்த்துகிறார்.. அதில் மிக முக்கியமாக பரம பவித்ர பாபா விபூதியும் அடக்கம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக