தலைப்பு

சனி, 31 டிசம்பர், 2022

சுவாமி! எங்கள் ஆன்மீக வாழ்க்கையில் நாங்கள் எவ்வாறு முன்னேற வேண்டும்? அதற்கான அளவுகோல்கள் யாவை?



"ந ஸ்ரேயோ நியமம் வினா" என்பர்!

அதாவது 

1) நீங்கள் எல்லாவற்றையும் ஒரு வரையறைக்கு உட்பட்டே அனுபவிக்க வேண்டும்!


நதிக்கு இரு கரை போல் வாழ்க்கை நதிக்கும் இரு கரை! 

"சம்சய ஆத்மா விநஸ்யதி" ஒரு கரை 

"சிரத்தாவான் லபதே ஞானம்" மறு கரை!

முதல் கரை என்பதாவது 


2) உங்களுடைய நம்பிக்கை உறுதியானதாக இருக்க வேண்டும்!

எந்த சந்தர்ப்பத்திலும் நிலை குலையக் கூடாது!

நீங்கள் சந்தேகத்திற்கு இடமே தரக்கூடாது!

சந்தேகம் மனதில் புகுந்துவிட்டால் வாழ்க்கை என்பது ஓட்டைகள் நிறைந்த பானைகள் போல் ஆகிவிடும்!

மரத்தின் வேருக்குத்தான் நீர் பாய்ச்சுவார்கள்... இலைகளுக்கு அல்ல...

அது போல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற நீரைப் பாய்ச்ச வேண்டும்!

சந்தேகத்துடன் செயல்பட்டால் எதனையும் சாதிக்க இயலாது!


ஒரு ஊரில் ஒரு பண்டிதருக்கு பால் விநியோகம் பால்காரி தினசரி தாமதமாக வருகிறாள்... படகில் வருவதால் தாமதமாகிறது என்கிறாள்... "ஓம் நமோ வாசுதேவாய" என்ற மந்திரம் சொல்! நதி வழிவிடும்.. வந்துவிடு என பண்டிதர் சொல்கிறார்.. அடுத்த நாளை விரைவாக அவள் வந்துவிட... நதிவழிவிட்டதை அவளும் தெரிவிக்க.. அதைக் காண அவளோடு நதிக்கரைக்கு வருகிறார்.. அவளும் மந்திரம் சொல்ல.. மீண்டும் நதி வழிவிட சென்றுவிடுகிறாள்...

அதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு அந்தப் பண்டிதரும் மந்திரம் சொல்கிறார்... ஆனால் சந்தேகத்தோடு... வேட்டியின் நுனியைத் தூக்கிக் கொண்டே என்னாகுமோ என்ற உணர்வில் அந்த மந்திரம் பண்டிதரால் சொல்லப்படுகிறது! சொல்லி முடித்த அடுத்த கணம்..‌அவர் அந்த நதியில் விழுந்து விடுகிறார்... காரணம் என்ன? சந்தேகம்!

இரண்டாவது கரை என்பதாவது...


3) சிரத்தை மிகவும் முக்கியம்!

சிரத்தை இல்லாவிடில் எந்தப் பணியையும் முடிக்க இயலாது! 

சிரத்தை இல்லாவிடில் செய்கிற காரியம்

கெட்டுவிடுகிறது! 

மாணவர்கள் சிரத்தையுடன் படித்தால் தான் கல்வி கைகூடும்!

அவ்வாறே வியாபாரமும்... சிரத்தை இன்றி லாபம் வராது!

"சிரத்தாவான் லபதே ஞானம்" என்றால்.. அந்த ஞானம் எது? அனுபவ ஞானமே! ஞானம் சிரத்தையால் தான் கிடைக்கப் பெறுகிறது!

ஆக 


சந்தேகத்திற்கு இடம் தராமல் சிரத்தையுடன் அனுபவ ஞானத்தைப் பெற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடத்த வேண்டும்! இதுவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் 57)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக