தலைப்பு

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஸ்ரீ சத்யசாயி பகவானின் புத்தாண்டு செய்தி ~ அஸ்வின் குமார் (Alumnus, SSSIHL, Prasanthi Campus)


ஒவ்வொரு ஆண்டும் புதிதாய் பிறப்பதாக வெளியே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு நொடியுமே கடந்த நொடியைப் போல் அன்றி புதிதாகவே பிறக்கிறது. தனது கடந்த கால அழுக்கு மூட்டைகளை சுமக்காத இதயமே புதியதை கொண்டாடுகிறது. அத்தகைய இதயத்திற்காக இறைவன் அளிக்கும் செய்தி இதோ...

புத்தாண்டு பிறக்கும் வேளையில், அது பல நுணுக்கமான பரிசுகளை கொண்டு வருகின்றது. சந்தோஷமான நினைவுகள் மற்றும் வலிகள் நிறைந்த பாடங்கள். எதிர்பார்ப்புகள், புதிய நாட்கள் இன்னும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற கனவுகள்...


பகவானின் முன்னிலையில் சாதரண நாட்களும் ஒளி மிக்கதாக தோற்றம் அளிக்கும். புதுவருடத்தை என்ன சொல்ல?...

பகவானின் காலடியில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் நினைத்து அனந்தப்படும் நாட்கள் அவை. பகவான் எங்களை நோக்கி, "நாளை புதுவருடம் பிறக்கிறது, அதற்கு நீங்கள் தயாரா" என்றார். பகவானின் சின்ன சின்ன கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்...

பகவான் தனது கரத்தை சுழற்றுகிறார்! அவருடைய கையில் ஒரு சிறு விசிட்டிங் கார்ட்! அதில் இருந்த வார்த்தைகள்...

'நீ கடவுளிடம் கொண்டுள்ள அன்பு மட்டுமே இறப்பிற்கு பின் உன்னால் கொண்டு செல்லக் கூடிய சொத்து! உன் வாழ்நாளில் அந்த அன்பை பெற எல்லா முயற்சியும் செய்'

கடவுள் அன்பை பெற வெறும் வார்த்தைகள் தேவையில்லை. அதற்கான நடவடிக்கைகளே தேவை. அதுவே நாம் பெறும் புத்தாண்டு பரிசு. அதற்கான ஓர் அடியை எடுத்து வைப்போம்.

- Ashwin Kumar
Alumnus, Sri Sathya Sai Institute of Higher Learning
Prasanthi Nilayam Campus

Source: Sai Nandana 2000 (75th Birthday Offering)
தமிழில் தொகுத்தது: Prof. N.P. ஹரிஹரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக