தலைப்பு

வியாழன், 1 டிசம்பர், 2022

பாபாவின் ஆசிகள் பெற்று அவர் பக்தரால் தயாரிக்கப்பட்ட உலகப்புகழ் "பர்னால்" ஆயின்மென்ட்!

என் வாழ்வே எனது செய்தி என்றார் பாபா. பின்னர், உங்கள் வாழ்வே எனது செய்தி எனக் கூறினார். அவரது பக்தர்கள் பாபாவின் நல் உபதேசங்களைக் கேட்டதுடன் நில்லாமல், அவர்களது வாழ்விலும் அவற்றைச் செயல் படுத்தவேண்டும் என்கிற நிதர்சனத்தை இது குறிக்கிறது.... 


சாயி நிறுவனங்களில் இணைப்பு பொறுப்பேற்ற பக்தர்கள் பலர் தம் வாழ்வில் நல் ஒழுக்கங்களுடன், முன் மாதிரியாகத் திகழ்ந்தனர். அதில் ஒருவர்தான் சாயிராம் K.V. ராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள். அவர் 1973ம் ஆண்டுகளில் மும்பாய் செம்பூர் சமிதியின் கன்வீனராக இருந்தவர். 


🌷சமர்ப்பண மனோபாவம்:

சாயி பக்தரான, திரு. ராமலிங்கேஸ்வர ராவ், மும்பாய் சயானில் உள்ள பூட்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற இங்கிலாந்து மருந்து நிறுவனத்தில் ஆர் & டி பிரிவில் பணிபுரிந்து வந்தார். ஆராய்ச்சியின் போது, அவர் புதியதொரு கண்டுபிடிப்பாக ஆயின்மென்ட்(Oinment) ஒன்றை உருவாக்கினார். இது இறைவன் பாபாவின் வழிகாட்டுதலாலே நடந்தது என திடமாக நம்பிய அவர், தான் கண்டுபிடித்த பார்முலாவை பகவானின் பொன்னடியில் சமர்ப்பிக்க வேண்டி உடனடியாக புட்டபர்த்தி சென்றார். ஸ்வாமி அவர் கொடுத்த அந்த பார்மலா அடங்கிய கவரை வாங்கி இது "பெரும் வெற்றி" அடையும் என அவரை வாழ்த்தினார்.


மகிழ்வுடன் மும்பாய் திரும்பிய அவர் தமது அலுவலத்தில் இந்த இரகசிய பார்முலாவை ஒப்படைக்க, அதன்படி ஒரு ஆயின்மென்ட் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் அந்த ஆயின்மெண்ட் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதுதான் தீக் காயங்களுக்கு இதமுடன் குணமளிக்கும் "பர்னால்" (BURNOL) ஆயின்மெனட். 


இந்த மாபெரும் வெற்றியைத் தந்த திரு. ராவ் அவர்களை, புகழ்பெற்ற மற்ற மருத்துவ நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அழைத்தன. பதவிகளுக்கும் பணத்திற்கும் ஆசைப்படாத அவர், தமக்கு வந்த வளமான வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். அன்னை போன்ற தம் நிறுவனத்தைக் கைவிட்டு விட்டு பணக்கார செவிலித் தாய்களுடன் தாம் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். இதுவன்றோ ஒரு உண்மையான சாயி பக்தரின் பண்பு!பகவான் இவரது பக்தியை பாராட்டி, இவரது இறுதி நாட்களில் தமது தரிசனம் தந்து ஆசீர்வதித்தார்.


🌻சாயிராம்.... மரத்திற்கு மரம் தாவும் வானரமல்ல மனிதன். அவன் உயர்வடைய பல குண நலன்களை பகவான் அருளி இருக்கிறார்.அதில் ஒன்று நன்றி உடமை. இந்த தலையாய பண்பை திரு ராவ் அவர்கள் பற்றி ஒழுகியதால்தான் , பாபாவின் அன்பையும் நல் ஆசியையும் பெற்றார். "கல்வியின் முடிவு நற் குண நலன்களே" என்று போதித்த பகவான் பாபாவின் பொன்னடி பற்றி, நாமும் நமது வாழ்வை நற்குணங்களுடன் அமைத்து வளமாக வாழ்வோமாக. ஓம் ஸ்ரீ சாயிராம்.  🌻


ஆதாரம்: Shri.K. V. Ramalingeswara Rao, Personal Narration

தமிழில் தொகுத்தளித்தவர் : திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக