ஒவ்வொரு பண்டிகையையும் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை பாபா இதிலேயே தெள்ளத்தெளிவுற விளக்கி இதயத்தில் பதிப்பிக்கிறார்... அனைத்து புனித பண்டிகைக் கொண்டாட்டங்கள் யாவுமே உள்முகத்திற்கானது என்பதை ஜக ஜோதியான யுக ஆதியான பாபா யுகாதி தின செய்தியாக இதோ விடுக்கிறார்..
யுகாதி என்பது புத்தாண்டின் ஆரம்பம். நீங்கள் பல யுகாதிகளைக் கொண்டாடினீர்கள், ஆனால் உங்கள் கெட்ட குணங்களை விட்டுவிட்டீர்களா? யுகாதியின் கொண்டாட்டத்தை வெறும் புதிய ஆடைகள் உடுத்துவதற்கும், சுவையான உணவு உண்பதற்கும் என்று சுருக்கக்கூடாது. இன்று நீங்கள் ஒரு புதிய சட்டை அணியலாம், ஆனால் அது எவ்வளவு காலம் புதியதாக இருக்கும்? நமது வாழ்க்கை ஒரு செய்தித்தாள் போன்றது. நீங்கள் ஒரு செய்தித்தாளைப் படித்து முடித்தவுடன், அதே செய்தித்தாளை மீண்டும் மீண்டும் படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இந்தப் பிறவியைப் பெற்றுள்ளீர்கள், நீங்கள் இன்பம் மற்றும் துன்பத்தின் பல்வேறு அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். வாழ்வும்-மரணமும் என்ற இந்தப் பெருங்கடலைக் கடந்து, உங்களுக்கு விடுதலை அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
உண்மையான யுகாதி என்பது தீய குணங்களைக் கைவிட்டு, உங்கள் இதயத்தை அன்பால் நிரப்பி, தியாகத்தின் பாதையில் செல்லும் நாளேயாகும். மற்றவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள். உங்களை வெறுப்பவர்களைக் கூட மதிக்க வேண்டும். வெறுப்பு ஒரு மோசமான குணம். அது உங்களை அழித்துவிடும். எனவே இந்தத் தீமையிலிருந்து விடுபடுங்கள். அனைவரையும் நேசிக்கவும்.
- இறைவன் ஶ்ரீ சத்யசாயி பாபா
ஆதாரம்: (தெய்வீக சொற்பொழிவு, ஏப். 13, 2002)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக