தலைப்பு

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

அன்ன தானமா? நாராயண சேவையா?

மனிதனுக்கு உரிமையானது  என எதுவுமில்லை... பிறகு எப்படி அவன் தானம் என்று தான் பிறருக்கு கொடுப்பதை கூறிக் கொள்ள முடியும்! இதையே பாபா தனது வாமன அவதாரத்திலும் பலி சக்கரவர்த்திக்கு உணர்த்தினார்... அதனையே எடுத்தியம்புகிறார் சுருக்கமாய்... ஆன்ம நெருக்கமாய் இதோ...


"உணவு வழங்குவதை நீங்கள் அன்னதானம் என்கிறீர்கள். கடவுள் கொடுத்த ஒன்றை தானமாகக் கொடுக்கவும் அதைப்பற்றி கர்வம் கொள்ளவும், ஏன், தான் ஏதோ தர்மம் கொடுத்துவிட்டதாக நினைத்துக் கொள்ளவும்கூட, எவருக்கும் அதிகாரம் இல்லை.

கடவுள் மழையை கொடுத்தார், கடவுள் நாற்றுகளுக்கு ஊட்டம் கொடுத்தார், கடவுள் தானியத்தை முதிரச் செய்தார்; இதில் உன்னுடையதாக நினைத்துக் கொள்ளவும், அதை தானம் செய்யவும் என்ன உரிமை உனக்குள்ளது?

அது தானமல்ல, நீ கடவுளுக்குத் திருப்பி நன்றி செலுத்துகிறாய், அவ்வளவுதான்; நீ அறுவடை செய்த தானியத்தை உணவாகச் சமைத்து இந்த நாராயணர்களுக்குக் கொடுப்பதன் மூலம் நீ அதனைப் புனிதப்படுத்துகிறாய், அதை நாராயண சேவை என்று சொல்! அதுதான் மிகச் சரியாக இருக்கும்!"


~ ஸ்ரீ சத்ய சாயி பாபா (தமிழ் சனாதன சாரதி, ஜூலை 2021)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக