தலைப்பு

திங்கள், 4 ஏப்ரல், 2022

பூர்ண சந்திர அரங்கம் எனப் பெயர் வரக் காரணமானவரின் குடும்பத்தையே காப்பாற்றிய பாபா!

பாபா சங்கல்பித்து ஆற்றிய குணமும் அளித்த குழந்தைப் பேறும் அதன் வழி அந்த வம்சத்தையே தழைத்தோங்கச் செய்த கருணையும் பூரணமாய் நிறைந்து பூரண சந்திர அரங்கின் பெயர் வரக் காரணமாகும் அந்த பரம பக்தரின் குடும்பத்திற்கு நிகழ்ந்த ஒரு சிகிச்சை மகத்துவ மகிமை இதோ...


அது பம்பாய் (தற்போது மும்பை) பிரபல தொழில் அதிபர் வீடு.. அந்த பெரிய குடும்பத்தின் மருமகள் பெயர் நிலிமா. திருமணமான சிறிது நாளிலேயே நிலிமாவுக்கு சிறுநீரகம் ஏழரை மடங்கு வீங்கிப் போய்விடுகிறது... ஒரு அதிநுட்ப ஆப்ரேஷன் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலே மட்டும் தான் அப்போது செய்யப்படும்... அப்படி செய்தால் உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என இந்திய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்... இதற்கு இடையே இறைவன் மே மாதம் பம்பாய்க்கு பயணம் மேற்கொள்கிறார்...பக்தர் ஒருவர் வீட்டிற்கு தங்க வருகிறார் இறைவன் சாயி. அந்த பக்தர் நோய்வாய்ப்பட்ட நிலிமாவையும் அவரது கணவர் ஆசீஷையும் வற்புறுத்தி அழைக்கிறார்.. ஆனால் அந்த தம்பதியர்க்கு பாபா மேல் துளியும் நம்பிக்கையே இல்லை... அவரின் வற்புறுத்தல் தாங்காமல் சரி போய் தான் பார்ப்போமே என கிளம்பி வருகிறார்கள்...


பாபா அந்த பக்தரின் இல்லத்தில் விஜயம் செய்கிறார்.. வந்ததும் வராததுமாய் நிலிமா அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து அவளுக்கு இன்ன இன்ன பிரச்சனை.. இதை இதை மருத்துவர் சொல்லி இருக்கிறார் என வரிசைப்படுத்திச் சொல்ல... உறைந்து விடுகிறார் ஒரு துளி கண்ணீரோடு நிலிமா.. பிறகு பாபா தனது தெய்வத்திருக்கரம் அசைக்கறார்... பாபா அப்படி அசைத்துக் கொண்டே இருப்பதால் தானே பிரபஞ்சமே அசைந்து கொண்டே இருக்கிறது...உடனே ஒரு சிருஷ்டி ருத்திராட்சத்தை தந்து இதனை நீரில் அபிஷேகம் செய்தூ பருகி வா.. பத்து நாளில் நல்ல ரிலீஃப் கிடைக்கும்!" என்கிறார்...


அப்படி ஸ்ரீ சத்ய சிவ சாயி தருவித்த அந்த தெய்வீக ருத்ராட்சத்தை பிறவி ஜைனர்களாக இருக்கும் நிலிமா குடும்பம் பெரிதாக சுவாமி சொல்லை மதித்து துதித்து அபிஷேகம் செய்கிறது.. நிலிமா அந்த திவ்ய ருத்ராட்ச அபிஷேக நீரை பருகிக் கொண்டு வருகிறாள்...  நிலிமா அறுவை சிகிச்சைக்காக லண்டன் பயணிக்கிற நாள் சுவாமி சொல்லி அவர்கள் ருத்ராட்ச அபிஷேகம் செய்த பத்தாவது நாள்...  லண்டனில் டாக்டர் ஃபெர்கூஸன் சில சோதனைகளை நிலிமாவுக்கு செய்துவிட்டு சோதனை முடிந்தபின்னர் ஆப்ரேஷன் தேதி அறிவிப்பதாகச் சொல்கிறார்..‌


நிலிமா தங்கி இருந்த அறையின் தொலைபேசி ஒலிக்கிறது... நிலிமா கணவர் எடுத்துப் பேகிகிறார்... "உங்க மனைவியை சோதனை செய்து புதிதாக எடுத்த உள் அவயப் படங்களை (ஸ்கேன் ரிப்போர்ட்) பார்த்த போது ஒரே ஷாக்... அவர்களுடைய சிறுநீரகம் இயல்பான அளவுக்கு சுருங்கிவிட்டிருக்கிறது... என்னால் நம்பவே முடியவில்லை!" என்கிறார்... செய்தி கேட்ட தம்பதிகளால் கூட நம்ப முடியவில்லை.... வேறொரு டாக்டரிடம் சோதித்த பிறகு டாக்டர் ஃபெர்கூஸன் சொல்லியதை நம்புகிறார்கள்.. நிலிமா கணவர் தனது தாய் தந்தைக்கு தொலைபேசியில் அந்த ஆச்சர்ய நிகழ்வை பகிர்ந்து கொள்கிறார்.. அவர்களால் நம்பவே முடியவில்லை.. உடனே அந்த லண்டன் டாக்டரிடம் அழைத்துப் பேசிய பிறகே கண்கலங்குகிறார்.. *இதெல்லாம் ருத்ராட்ச அபிஷேக நீரால் தான் என் உடனே உணர்ந்து நிலிமா கணவரின் தாய் தந்தை உடனே பெங்களூர் பிருந்தாவனத்திற்கு பறக்கிறார்கள்... தரிசன வரிசையில் பாபா அவரை பார்த்துவிட்டு "அஞ்சா.. இப்போ டாட்டர் இன்லா ஆல் ரைட் தானே...திருப்தியாச்சா?" என ஔஷத புன்னகை ததும்ப விசாரிக்கிறார்... "ஔஷத புன்னகை அவனியை காக்க!" எனும் கவச வரிகளின் படி அவரின் குடும்ப மருமகளின் உயிரைக் காப்பாற்றி.. வாரிசே இல்லை எனச் சொல்லிய மருத்துவத்திற்கும் மீறி சேதனா , ஹர்ஷ் என்று இரண்டு குழந்தைகள் பிறந்து பாபாவால் அவர்களது குலம் விளங்குகின்றன... குணமாகிய அந்த நிலிமா மாமானாரே பூனம் சந்த் கமானி.. அவரின் பெயரிலேயே பூர்ண சந்திர அரங்கம் இப்போதும் காட்சிக்கு தெய்வீகமாய்.. மனசாட்சியில் ஆன்மீகமாய் வீற்றிருக்கிறது!


(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 247 / ஆசிரியர் : அமரர் ரா‌.கணபதி) 


பாபாவின் கருணை ஆன்மாவை உற்று நோக்கியே நிகழ்கிறது... அந்த ஆன்மாவில் புண்ணியமும் ஆன்மீகமும் நிறைந்திருத்தல் அவசியமாகிறது... எந்த ஜென்மத்தில் ஒரு ஆன்மா சிறு நன்மை புரிந்திருந்தாலும் ஆன்மீகமாய் ஆழ்ந்திருந்தாலும் தக்க சமயத்தில் அந்த ஆன்மாவை தடுத்தாட் கொள்கிறார் சுவாமி... அப்படி தடுத்தாட் கொள்ளப்பட்ட குடும்பம் பூனம் சந்த் கமானியுடயைது! இறைவன் இப்படியே ஒருவர் எதிர்பாராத போதும் இறங்கி வருகிறான்.. அவரவர் ஆன்மா உணர்ந்து இரங்கி வருங்கிறான்!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக