தலைப்பு

திங்கள், 25 ஏப்ரல், 2022

ஸ்ரீ சத்ய சாயி ராமனை சுற்றவிடாமல் தடுத்த ஸ்ரீஆஞ்சநேயர்!

இறைவன் பாபா ஸ்ரீராமரே என உணர வைக்க நிகழ்ந்த மகிமா சம்பவம் இது... எங்கே எல்லாம் ஸ்ரீ ராம நாமம் கேட்கிறதோ அங்கே மட்டுமல்ல எங்கே எல்லாம் ஸ்ரீ ராமர் சம்பவாமி யுகே யுகே எனும் அவதரிக்கிறாரோ அங்கே எல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேயர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை உள்ளாற உணர்த்தும் உன்னத பதிவு இதோ...


புட்டபர்த்தியில் கோபுரம் சாலையின் வடக்குபுறம் அமைந்துள்ளது, ஹனுமான் கோவில்.

இந்த கோவில் இளம் சாயியின் குறிப்பிட்ட ஒரு லீலையுடன் தொடர்புடையது.

ஒரு நாள் இளம் சாயி மற்றும் அவரது நண்பர்கள் வழக்கமாக செய்யும் பிரதக்ஷணம் செய்ய இக்கோவிலுக்கு வந்தனர்.

ஹனுமான் சந்நிதியை ஒரு முறை சுற்றி முடித்த பின் மறுமுறை வலம் வர முயன்ற போது இளம் சத்யா தீடீரென, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி தடுத்து நிறுத்துவது போல் அசையாமல் நின்றார். பலம் வாய்ந்த அவரது நண்பர்கள் சிலர் அவரை அசைக்க முயன்று தோற்றனர்.


அவரை வலம் வராமல் தடுப்பது வேறு யாருமல்ல, ஆஞ்சநேய ஸ்வாமியே என ஆச்சரியப்பட்ட அவரது நண்பர்களிடம் இளம் சாயி விவரிக்கும் போதே, அவரது நண்பர்கள் ஹனுமான், சாயியின் கால்களை இருக்கப் பிடித்து அவரிடம், "பிரபு, நான்தான் உங்களை வலம் வரவேண்டும்..!!" என உரைப்பதை கண்டனர்!!! சத்ய சாயி - ராம சாயியே என உணர்ந்தனர்! 

1 கருத்து: