ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஸ்வாமி வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி நடக்க ஆரம்பித்தார் காலணிகளை அணிந்து, TGK மட்டும் உடன் வர நடந்து செல்லலானார், மற்ற இருவரும் காரிலேயே இருக்குமாறு கூறப்பட்டனர். சிறிது தூரம் நடந்து சென்றதும், 100 அடி ஆழத்திற்கு ஒரு சரிவு தென்பட்டது, ஸ்வாமி TGK யின் கையைப் பிடித்துக் கொண்டு சரிவில் நடந்து செல்லலானார். முள்ளும் கல்லுமாக இருந்ததால் ஸ்வாமியை கவனமாக செல்லுமாறு TGK கேட்டுக்கொண்டார். “நீ உன் இரண்டு பாதங்களையும் கவனித்துக் கொள் , வெறும் காலுடன் வருகிறாயே” என்றார்!, அந்த ஒரு சூழலிலும் பக்தனைப் பற்றியே கவலை! திருடர்களோ, நாய், நரிகளோ வருகிறதா என பார்த்துக்கொண்டே சென்றார், எங்கே போகிறோம் என்றே TGK விற்கு தெரியவில்லை! இருபுறமும் மரங்களும் புதர்களும் நிறைந்த ஒரு புல்வெளிக்கு வந்தனர். சமவெளியின் விளிம்பில் இருந்து தூரத்தில் ஒரு கிராமம் இருந்தது. அந்த விளிம்பில் கண்களை மூடியவாறு, இடுப்பில் கைகளை வைத்த வண்ணம் நின்று விட்டார், கூப்பிட கூப்பிட ஸ்வாமி கண்களை திறக்க வில்லை. நெடு நேரம் கழித்து மீண்டும் அழைக்க, சரி போகலாம் என்று கிளம்பினார், திரும்பி நடந்து காருக்குச் சென்று திரும்பி செல்லலானோம்.
ஆச்சரியமாக இருந்து! எதற்கு இப்படி வந்து செல்கிறோம் என்று கேட்க யாருக்கும் தைரியமில்லை! மறுநாள் மிக கன மழை பொழிய ஆரம்பித்தது. தர்ஷன் ரத்து செய்யப்பட்டு விட்டது! பாத நமஸ்காரம் செய்து அவரது காலடிகளின் கீழ் அமர்ந்த TGK பவ்வியமாக ,” ஏன் ஸ்வாமி ஆழமான சரிவின் விளிம்பில் நின்றீர்கள்”? என வினவ, அவரது கண்களில் நீரைப் பார்த்த ஸ்வாமி, புன்னகையோடு கூறினார், “அதன் கீழ் ஒரு கிராமம் இருக்கிறது, இன்று மழைவரும் என்று எனக்குத்தெரியும். அந்த மண்ணின் தன்மைக்கு இன்று மொத்தமும் சரிந்து கிராமத்தையே அழித்திருக்கும், மக்கள் ஆடு மாடு எல்லாம் மடிந்திருக்கும்”. ஆகவே, அங்கு மண் இறுக்கமடைவதற்காக அங்கு சற்று நேரம் நின்றேன். நான் இங்கு இருந்து கொண்டு நிலச் சரிவு ஏற்பட விட்டு விடுவேனா? ஆகவே மண்ணை இறுக்கமாக்கி மழை நீரால் பாதிப்பு ஏற்படாவண்ணம் ஆக்கினேன்.
இரவு முழுவதும் TGK இதைப் பற்றியே யோசித்து கொண்டு இருந்தார். அந்த கிராம மக்களின் பக்தி தான் ஸ்வாமியின் இதயத்தை தொட்டிருக்கிறது. அது தான் அவர்களைப் பேரிடரிலிருந்து காப்பாற்றி இருக்கிறது, இந் நிகழ்வு அவர்களது பக்திக்கு ஒரு முன்னுதாரணம்!.
TKG CHENNAI - Personal narration.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக