🇻🇪 வெனிசுலா நாட்டைச் சேர்ந்த திருமதி. அனா எலினா டயஸ் தன் வாழ்வில் நடந்த நிகழ்வை தன் கட்டுரையில் விவரிக்கிறார்..
நிறைமாத கர்ப்பிணியாக... நான் 2வது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, என்னுடைய 10 வயது மூத்த மகன் எட்வர்டு உடன் தொலைக்காட்சி நிகழ்சியை பார்த்துக்கொன்டிருந்தேன், அது இயேசுநாதரின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம்.18 வயது முதல் 30 வரை யாரும் அறிந்திராத, எந்த விவிலிய(Bible) நூல்களிலும் எழுதப்படாத காலத்தைப்பற்றியது.. ரிச்சர்டு பேக் என்ற ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் தான் அதை வெளியிட்டிருந்தார். அதில் பல விஷயங்களை தெளிவுப் படுத்தியிருந்தார். இயேசு வட இந்தியாவின் பல தபோவனங்களில் வாசம் செய்ததாகவும், பாகிஸ்தானில் வசித்துவந்ததாகவும் தெரிவித்திருந்தார். கடைசியில் ஆவணப்படம் சத்ய சாயிபாபாவின் செய்திகளுடன் முடிவடைந்தது.
இந்த நவீன உலகில் இயேசு நாதர் போலவே பல்வேறு அற்புதங்களை செய்கிறார். நோயுற்றவர்களின் துயர் நீக்கவும், கஷ்ட்ப்படுவோர்க்கும், ஏழை எளிய மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவர் மாண்டவர்களைக் கூட உயிர்ப்பித்த நிகழ்ச்சிகள் உண்டு. அதில் கூட ஒன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (திரு கோவான் பற்றியது). "தான் எந்த ஒரு புதிய மதத்தையும் தோற்றுவிக்கவோ, அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்ந்தது என பிரகடனப்படுதவோ வரவில்லை. உலகில் ஒரே மதம் அன்பு ஒன்றுதான். ஒரே குலம் மனித இனம் தான் என பிரகடனப்படுத்தினார்..
அவருடைய அழகான தோற்றமும், தரையில் அமர்ந்திருப்போர்க்கு உணவளிக்கும் எழிலும், மக்கள் வெள்ளத்திடையே கருணை பொங்க மிதந்துவரும் ரம்மியமான காட்சியும், அவரைப் பார்க்கும்போது அந்த்க்கண்களில் ஒளிரும் கருணையும் என்னை ஜடமக்கியது. அதிர்ந்து போயிருந்த என்னிடம் "அம்மா உன் கனவில் அடிக்கடி தோன்றுபவர் இவர்தானே' என முதலில் வெளிப்படுத்தினான்."எட்வர்ட். என் கனவில் தோன்றிய அந்த மகானை, ஆன்மீக குருவை, என் அனுபவத்திற்கு காரணமாக இருந்த அவதார புருஷரைக் காண ஆவலோடு காத்திருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் பெயர் ஏதோ "அலிபாபா" என்பதாகும். நான் முன்பெல்லாம் என் மனதிற்கு தோன்றும் போதும், என் பிரார்தனையின் போதும் "அலிபாபா" என்றே அழைக்கலானேன்.
1981 மார்ச் மாதம் 14ஆம் தேதி எனது இரண்டாவது மகன் கிருஷ்ட் பிறந்தான். ஒரு நாள் இரவு குழந்தைக்கு பாலூட்டிக் கொன்டிருக்கும் பொழுது நான் கவனித்தேன். குழந்தையின் நெற்றிப்பொட்டில் இருந்து சிவப்பு ஒளிக்கீற்று தோன்றி இரண்டு நிமிட்த்தில் மறைந்து விட்டது..
அந்த இரவு அனேகமாக மார்ச் 20 ஆம் தேதி என நினைக்கிறேன். மீண்டும் கனவில் தோன்றி குழந்தையை எவ்வாறு வளர்த்தெடுக்கவேண்டும் என அறிவுரை வழங்கியதோடு எனக்கு சில தனிப்பட்ட விபரங்களையும் கூறினார்.
1981 ஜூலை மாதம் எனது நான்கு மாதக் குழந்தைக்கு திடீரென நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தும் நுரையீரல் தொற்று சிறிதும் குறையாமல் கீழே வயிற்றுக்கும் பரவிவிட்டது. ஒரு நாள் இரவு மருத்துவர்கள் எதற்கும் தயாராயிருங்கள் என அறிவித்து விட்டார்.. என் கணவர் என்னிடம் நம்பிக்கையை இழக்காதே என ஆறுதல் கூறினார். நான் என் கனவில் வரும் அலிபாபாவை மனதில் மானசீகமாக அழைத்து அவர் நாமத்தை உச்சரித்துக்கொண்டே" எனது மகனைக் காப்பாற்ற முடிந்தால் காப்பாற்று என இறைஞ்சினேன். நேரம் செல்ல செல்ல பையன் சாதாரணமாக சுவாசிக்க தொடங்கினான், நன்கு உறங்கினான். அயற்சியால் நானும் உறங்கிவிட்டேன். அம்மாவும் வெளியிலே பார்வையாளர்கள் அமரும் இட்த்திலேயே உறங்கிவிட்டார்.
அந்த இரவு மீண்டும் மூன்றாவது முறையாக கனவில் தோன்றினார். எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. மருத்துவமனையின் அறைகள் தெளிவாக தெரிகிறது.. சுவாமி குழந்தையின் படுக்கைக்கு அருகே வந்து உற்றுநோக்குகிறார். பின் தலை மீது கை வைத்து ஆசீர்வதிக்கிறார்.. பிறகு என்னிடம் வந்து கவலைப்படாதே அவன் இறந்து விடமாட்டான். தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறான்" என்றார்... நான் "அலிபாபா உங்களை எங்கு பார்ப்பது எப்படிப் பார்ப்பது, என்னை ஆசீர்வதியுங்கள் என்றேன். அவர் என் தலை மீது கை வைத்து கவலைப்படாதே நீ இன்று என்னைப் பற்றி அதிகமாகவே தெறிந்து கொள்வாய்" என்றார்.
அதிகாலை 5 மணி, இந்தியாவிலிருந்து அலிபாபா இங்கே வந்திருந்தாரென கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு நானும் என் தாயும் சநதோஷத்தில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டோம். அடுத்தநாள் குழந்தை எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக இருந்தான்.. மருத்துவர்கள் எதற்கும் ஒருநாள் இங்கயே இருக்கட்டும் என்றனர். அன்று மாலை எங்களுடைய குடும்ப நண்பரும், மருத்துவருமான திருமதி. கேலா ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். நான் கவனமாக அவரிடம் கேட்டேன்," அந்த இந்திய பிணி தீர்க்கும் ஆசான் அலிபாபாவைத் தெரியுமா" என்று. அதற்கு அவர், தன் அடக்க முடியாத சிரிப்பினூடே அவர் பெயர் அலிபாபா அல்ல சாயிபாபா. ஆம் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று அவரைப் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும் கடையை கூறினார்.
மேலும் கேலா, அவருக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவத்தைப் பற்றி கூறினார். எவ்வாறு பல நேரங்களில் ஆபத்திலிருந்து பாபா காப்பாற்றினார் என்பதையும் விவரித்தார்... அந்த புனிதமான நன்நாளில் எனக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றிய நூல் ஒன்றும் கிடைக்கப் பெற்றேன்
ஆதாரம்: http://theprasanthireporter.org/2019/11/he-is-not-ali-baba-he-is-sai-baba/
ஆதாரம்: http://theprasanthireporter.org/2019/11/he-is-not-ali-baba-he-is-sai-baba/
மொழிமாற்றம்: M. தேவராஜன், கோயம்புத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக