தலைப்பு

திங்கள், 9 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்யசாயி லீலைகள் - தொலைந்தது கிடைத்தது!

இச்சம்பவம் பகவானின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரால் விவரிக்கப்பட்டது.

ஒருமுறை இந்த மாணவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் லண்டன் சென்றிருந்தபோது, அங்கு ஷாப்பிங் செல்ல தெருக்களில் நடந்து கொண்டிருந்தார். வெளியே வரும் பொழுது எதேச்சையாக அவரது தந்தையார் தனது கைப்பையில் கைவிட தங்கள் அனைவரது பாஸ்போர்ட்டுகளும் இல்லாததை உணர்ந்து மிகவும் தடுமாறிவிட்டார். முதலில் மிகவும் பதட்டம் அடைந்த பொழுதிலும், பகவானிடம் அவர்கள் வைத்திருந்த பக்தி அவர்களை நிதானப்படுத்தியது.

தாங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் மேலும் கீழும் நடந்து தேடிக் கொண்டே இருந்தனர். கிடைக்கவே இல்லை. தந்தை வேறுவழியின்றி போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்து போலீஸ் அதிகாரியை தேடினார். திடீரென முன்பின் தெரியாத ஒரு ஆங்கிலேயர் நேராக இவர்களிடம் வந்து, "நீங்கள் காணாமல் போன பொருட்களை மீட்டுத்தரும் பகுதியை தேடுகிறீர்கள் என நினைக்கிறேன்; அது நேரே இருக்கிறது பாருங்கள்"என காட்டிக் கொடுத்தார். தந்தை அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபொழுது,  அங்கே அலுவலில் ஈடுபட்டிருந்த அதிகாரி, பாஸ்போர்ட்டுகளை பையில் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். தந்தைக்கு பெரிய கவலை தீர்ந்த தளர்வான நிலைக்கு வந்தார். அந்த அதிகாரியிடம் எப்படி பாஸ்போர்ட்டுகள் வந்து சேர்ந்தன என்று வினவிய பொழுது, "இவற்றை என்னிடம் கொடுத்தவர் நீங்கள் வருவதற்குச் சற்று முன்புதான் கிளம்பிச் சென்றார். அவர் ஒரு கடையின் சொந்தக்காரர். அவரது கடையில் நீங்கள் பாஸ்போர்ட்டுகளை விட்டுவிட்டு வந்துள்ளீர்கள்" என்றார். அவரது அங்க அடையாளங்களை கூறிய பொழுது சத்ய சாயி பாபாவின் உருவத்தை ஒத்திருந்ததை உணர்ந்தார்! 

 அனைவரும் தங்களை பெரிய கஷ்டத்தில் இருந்து காப்பாற்றியதற்கு, ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்து மானசீகமாக வணங்கினர். சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பகவான் தந்தையின் கனவில் வந்து, தாம் தான் லண்டனில் காப்பாற்ற வந்ததை கூறினார்!!!

ஆதாரம்: Gems Of Sathya Sai, Story No 71

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக