தலைப்பு

வெள்ளி, 6 டிசம்பர், 2019

குறள் வடிவில் சத்ய சாயி பகவானின் பொன்மொழிகள்:


(LOVE ALL SERVE ALL) 

 அன்புக்கு இணையான தவமில்லை ஆதலால்
அன்பு செய் அனைவருக்கும்.

 செய்திடு சேவை செய்தக்கால் அச்சேவை(நீ)
உய்ந்திடு வழி காட்டியாம்.

(HELP EVER HURT NEVER)

 உதவிடு எப்போதும் உள்ளன்புடன்(பின்) 
பதிவிடு மன நிம்மதி.

ஒருபோதும் தீங்கு செய்யாதிருத்தல்
திரு ஓங்கும் நல்லார் செயல்.

(END OF EDUCATION IS CHARACTER)

கற்றிடும் கல்வியால் பயன் என் கொல்
நற்குணம்  தனைப்பெற்று வாழாவிடில்.

(SILENCE IS SAI LENS)

அமைதியே ஆண்டவன் இருப்பிடம்
அஃதே நாம் காண்போம் சாயி வழியாய்

(WATCH YOUR WORDS)

பேசிடும் பேச்சே மலராகும்
பேசற்க மாசுடன் ஒரு நச்சுசொல்

(WATCH YOUR ACTION)

செயல்பாட்டை கவனித்து செயலாற்று
உன்மனம் சீரோடு ஓங்கி நிற்கும்.

(WATCH YOUR THOUGHT)

எண்ணிய எண்ணங்கள் இனிதானால்
எப்போதும் உன்மனம் ஏற்றம்பெரும்

(WATCH YOUR CHARACTER)

பணநலம் குன்றினும் பகையில்லை
குண நலம் குன்றாக் கடை

(WATCH YOUR HEART)

இதயமே அன்பின் பிறப்பிடமாம்
ஆதலால் இதயத்தில் இறைவனை வை.

தொகுத்து அளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக