1957ஆம் ஆண்டு பகவானுடன் ஆன்மீக சுற்றுலாவாக வடஇந்தியா சென்று வந்த ஒரு பக்தரின் அனுபவ பக்கங்களிலிருந்து...
30 ஜூலை 1957ஆம் ஆண்டு சாயி பகவானுடன் ரிஷிகேஷில் இருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பிருந்தாவன் சென்றோம். யமுனை நதியின் ஒவ்வொரு அலையும் பாபாவின் வரவை எதிர் பார்த்தது போல அன்று ஆர்ப்பரித்தது.
பின்னர் பாபாவுடன் நாங்கள் நடந்துகொண்டே சென்று கொண்டிருந்தோம். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் பாபா எங்களை ஒரு வட்டமாக அமரச் சொல்லி தான் கிருஷ்ணாவதாரத்தில் யமுனை நதியில் நடத்திய லீலைகளை மகிழ்ச்சியுடன் விளக்கினார். பின்பு கிருஷ்ணாவதாரத்தில் தான் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை ஸ்ருஷ்டித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். பிருந்தாவனத்தில் இருந்த ஒவ்வொரு வினாடிகளும் பகவான் மிகுந்த ஆனந்தத்தில் மிகவும் பிரகாசமாக தெரிந்தார்.
கடைசியாக ஆன்மீக சுற்றுலா முடிந்த பின்னர் பகவான் எங்களிடம் வந்து நீங்கள் அனைவரும் உங்கள் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்து உள்ளீர்கள் அதன் பயனாகவே உங்களை நான் என்னுடன் அழைத்துக்கொண்டு சென்றேன். இனிவரும் காலங்களில் இந்த பசுமையான நினைவுகளை சுமந்து கொண்டு, சுயநலம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த பரிசு என்பதை உணர்ந்து வாழுங்கள் என்றார்..
அனைவரிடமும் பொதுவாக பேசிய பிறகு பகவான் தனிப்பட்ட முறையில் என் அருகில் வந்து "உன்னுடைய முன் ஜென்மத்தில் நீ யார் என்று தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு நான் யார் சுவாமி என்று கேட்டேன். பிறகு பகவான் என்னிடம் சொன்னார் "நீ என்னுடைய சீரடி அவதாரத்தில் என்னுடன் நெருக்கமாக பயணித்தவன்" என்று மட்டும் சொல்லிவிட்டு ஆசீர்வாதம் செய்தபடியே ஒரு புன்சிரிப்போடு அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து சென்றார்.
ஆதாரம்: An unforgettable journey' - The Prasanthi Reporter (TPR)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக